12-02-2003, 10:59 AM
Quote:தற்போதைய இந்தப் பிரச்சனைக்கு காரணம் இவர்களின் மனங்களின் பலவீனமே தவிர ஊடகங்கள் அல்ல...இவர்கள் போட்டி போடக் கூடிய சூழலில் இன்றி தனித்து மற்றவனை விரட்டி வாழப்பழகிவிட்டார்கள்.....அதுதான் உண்மை....! அதன் தொடர்ச்சிதான் இதுவும்.....!
தாயகத்தில் இந்திய சினிமா தடை செய்யப்பட்ட போது கண்டோமே உங்கள் விடுதலையின் வேட்கையை...சினிமாவுக்காக கொழும்புக்கு குடிபெயர்ந்தவர்களும் போராளிகளைத் திட்டிதீர்த்தவர்களும் எண்ணிலடங்கா......! இவர்களிடம் இந்திய சினிமாவல்ல எந்தக் குப்பையும் எடுபடும் வேண்டும் என்றால் அதைவிடக் குப்பையா நீங்கள் கொண்டுவந்து கொட்டுங்கோ சனம் விழுந்தடிச்சுப் பாக்கும்....!
பீபீசி தன்னை நிலை நிறுத்திய பின்பே சீ.என்.என் இங்கை வந்தது. அனால் அதுவும் செய்மதி இணைப்பில்தான் சுயாதீனமான தரைஇணைப்பில் தனியே பிரித்தானிய தொலைக்காட்சி தான். அவை முழுதாக இன்னமும் திறந்து விடவில்லை. அண்மையில் சனல் 5 சீ. என் என் உடன் செய்தியை ஒலிபரப்ப முனைந்த போது அதை பிரித்தானிய அரசு தடை செய்து விட்டது. அது தெரியுமா? தடை செய்வதை விட அதை வரவிடாது தடுப்பதே மேல். கஞ்சா கொhலண்டில் தடையில்லை, பிரி;த்;தானியாவல் தடை, சிலர் அதற்கும் மூக்கால் அழுகிறார்கள். தடை எடுங்கோ எண்டு. இதுக்கென்ன சொல்லப்போறீங்கள். என்னைப்பெறுத்த வரை கஞ்சாவும் தென்னிந்திய தொலைக்காடசியும் ஒண்டுதான். உங்களைப்போல அடிமையானவையை வெளியிலை கொண்டுவாறது கஸ்டம் தான்!

