11-20-2005, 01:00 AM
யூட் நீங்கள் கூறுவது போல் நிதி ஒதுக்கீட்டிற்கு உழைத்த தமிழர்கள் தாயகத்திலுள்ள சம்பந்தப்பட்ட உயர்கல்வி நிறுவத்தின் ஒத்துளைப்பை பெற முயற்சித்தார்களா? எனக்குத் தெரிந்த ஒருவருக்கு நீங்கள் கூறவது போன்ற முயற்சிக்கு யாழ்பல்கலைக்கழத்தின் ஆதரவை பெறுவதில் சிரமங்களை எதிர் கொண்டார். அவர் ஒரு மேற்குல தொண்டர் நிறுவனத்தின் உதவியாக 50000 டொலர் பெற்று சில பாடவிதானங்களை யாழ்பல்கலைக்கழகத்திற்கு கொண்டுவருவதற்கு பல வழிகளில் முயற்சித்தவர்.
மில்லியன் டொலர் நிதிகளை இலகுவில் ஒதுக்கீடு செய்யமாட்டார்கள், சரியாகப்பயன் படுத்தப்படும் என்பதற்கு என்ன பாதுகாப்பு, உத்தரவாதம், அது போன்ற நடவடிக்கைகளை கையாண்டா முகாமைத்துவ அனுபவங்கள் உண்டா, மேற்பார்வை எவ்வாறு இருக்க முடியும், உதவி பெறும் நாட்டின் எந்த அமைச்சின் கீழ் இது கண்காணிக்கப்படலாம் என்று பல சட்டங்கள் சம்பிரதாயங்கள் சார்ந்த சிக்கல்கள் உண்டு. இது போன்ற சந்தர்பங்களில் பல்கலைக்கழகம் பாராளமன்ற உறுப்பினர்கள் போன்றவர்களின் உதவிகள் மூலம் உதவிவழங்கும் அரசுகள் நிறுவனங்களின் நிலைப்பாட்டில் மாற்றங்களை கொண்டுவரலாம். வெளிநாட்டுத் தொண்டர் நிறுவனங்களை பங்காளிகளாக எடுத்து கூட்டு முயற்சியக்கலாம்.
யாழ்பாணத்திலோ, தமிழர் தாயகப்பகுதிகளிலோ இலங்கைத்தீவின் ஏனைய பகுதிகளிலோ நடக்கும் கொலைகளிற்கு புலிச்சாயம் பூசுவது வழமையான ஒன்று. இந்தப் பொய்பிரச்சாரங்கள் ஊடாகத்தான் வெளிநாடுகளில் பலரும் இலங்கை பற்றி தெரிந்து கொள்கிறார்கள். காரணம் போட்டியாக ஒப்பிடக் கூடிய தரத்தில் தமிழர் தரப்புச் செய்திகளை வழங்கப்படுவதில்லை. இந்த நிலையிலும் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும், மேற்குலகத்திலுள்ள அரசியல் சார்பற்ற சாதாரணமானவர்களுக்கு எமது நிலைப்பாட்டை எடுத்துக் கூற கூடிய ஊடக அணுகு முறைகள், நாகாரிகமான நிபுணத்துவங்கள் வழர்த்தெடுக்கப்பட வேண்டும்.