11-19-2005, 07:21 PM
அமெரிக்காவிற்கு எவனாவது சுயகௌரவத்துடன் சுயமாக வாழ முற்பட்டால் பிடிக்கவே பிடிக்காது. அதுதான் அந்த நாட்டின் நிரந்தர வெளியுறவுக்கொள்கை.
இந்திய தேசம் சுயமாகப் பொருளாதாரத்தில் முன்னேற முற்பட்டபோது அமெரிக்கா போடாத தடைகளா அல்லது இடாத கூச்சலா?
அதையெல்லாம் கேட்டுச் செயற்பட்டிருந்தால் இன்றைய வல்லரசு நிலையை இந்தியா அடைந்திருக்கமுடியுமா?
இந்தியா அணுகுண்டு வெடித்ததற்கு என்ன ஆர்ப்பாட்டம் பண்ணினார்கள் இந்த அமெரிக்கர்கள்.
அணுவாயுதத்தை விடுங்கள். விண்வெளித் தொழில்நுட்பத்தைக் கூட அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்க விரும்பவில்லையே. இன்றைய இந்திய சனாதிபதி அப்துல் காலாமும் அவர்களது கூட்டாளிகளும் அரிதின் முயன்றுதானே இந்திய விண்வெளித்துறையைக் கட்டியெழுப்பினார்கள்.
அமெரிக்கா விண்வெளி ஆய்விற்கான உதவியைச் செய்யவில்லை என்றோ அல்லது அணுகுண்டு வெடித்தால் பொருளாதாரத் தடை போட்டுவிடும் என்றோ இந்தியத் தலைவர்கள் அஞ்சியிருந்தால் இன்றைக்கு இந்தியா ஜி-08 நாடுகளின் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருக்குமா?
எனவே அமெரிக்கா கண்டித்தால் மிகவும் நல்லது. காரணம் அங்கே யாரோ தன்னம்பிக்கையுடன் சுயகௌரவத்துடன் வாழமுற்படுகிறார்கள் என்பதுதான் அதன் கருத்து