12-02-2003, 10:23 AM
சொல்ல வந்ததை விட மக்களின் சிந்தனை எந்த மட்டம் என்பது எனக்கு நல்லா விளங்கீட்டுது. புலம் பெயர் தமிழினத்தை இனி யாரும் காப்பாற்ற முடியாது. புலம் பெயரில் ஒரு தமிழினம் இருந்தது எண்டு தாயகத்திலை மறக்காமல் கதைப்பினம். காரணம் அங்கை உந்த போலிகளுக்கு இடமில்லை. நான் ஒரு கேள்வியுடன் இதை முடிக்கிறேன். போட்டிக்காக எந்த குப்பைகளையும் உள்வாங்க தயாராக தமிழர்கள் இருந்தால் ஏன் நாம் ஐரோப்பிய கலாச்சாரத்தையும் உள்வாங்க கூடாது? நமது மொழியில் நு}ற்றுக்கணக்கான எழுத்து, கதைக்கேக்கை பாசை புரியாத ஒருவருக்கு களபுளசள, இப்படி பல குறைபாடு இருந்தூம் ஏன் தமிழை நாம் கட்டிப்பிடித்து அள வேண்டும். டொச் கதைக்கேக்கை உரமாக இருக்கு, இத்தாலி கதைக்கேக்கை கவிதை போல இருக்கு, ஆங்கிலம் கதைக்கேக்க ஸ்ரைலா இருக்கு, பிறகேன் நமது தமிழ் மொழி! எனது கூக்குரலில் நியாயமில்லை என்பவர்க்கு இந்த கேள்விகள் சமர்ப்பணம். நன்றி வணக்கம்!

