11-19-2005, 05:36 PM
[quote]<b>தமிழ் மக்கள் இந்த முறை அதிக அளவில் வாக்களிக்காமல் இருந்ததினால் மஹிந்த வெற்றி பெற்றுள்ளார் என்று வைத்துப் பார்க்கும்போது, சமாதானத்தை முன்னிலைப் படுத்தி தேர்தலில் நின்ற ரணில் விக்கிரமசிங்கவின் தோல்வி தமிழ் மக்களுக்கு சமாதானம் தொடர்பில் தவறவிட்ட ஒரு வாய்ப்புதான் என்று தான் கருதுவதாக கீதுபொன்கலன் தெரிவித்தார்.
கீதபொன்கலன் அவர்கள் வெளிப்படையாகவே 'ஐக்கிய தேசியக் கட்சி சமாதானத்தைக் கொண்டுவரும்' என்ற கருத்துகளுடன் கட்டுரைகளை எழுதியவர்.
ஆனால் தமிழ் மக்களாகிய எமக்கு சிங்களப் பேரினவாதிகளின் இந்தச் சமாதான வேடம் ஒன்றும் புதியதல்ல.
தேர்தல் தருணங்களில் ஒரு அறிவிப்பும் தேர்தல் முடிந்ததும் ஒரு அறிவிப்பும் செய்து இவர்கள் தமிழர்களை ஏய்க்கவேண்டும் என்று தமது தனிப்பட்ட சுயலாபங்களுக்காக எவராவது விரும்பினால் அதனை ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைமையல்ல தற்போது இருப்பது என்பதை இந்தப் பேராசிரியர்களும் செய்தி நிறுவனங்களும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
இப்படித்தான் சமாதான தேவதையாகத் தன்னைக்காட்டி வாக்குகளை அள்ளிய சந்திரிகா அம்மையார் பின்னர் தமிழருக்குத் திரும்பச் செய்த நன்றிக்கடனை எமது மக்கள் இன்னும் மறந்துபோகவில்லை.
அவ்வாறு ரணிலும் மாறாமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இந்தப் பேராசியர் எமது மக்களுக்குக் காட்ட முடியும்?
இறுதிநேரத்தில் சர்வதேச வலைப்பின்னல், சர்வதேச இராணுவ ஆலோசனை குறித்துத் தான் ரணில் தரப்பிலிருந்து செய்திகள் வந்ததே தவிர சமஷ்டியின் என்ன பரிமாணத்தில் இவர் பிரச்சினையைத் தீர்க்க விரும்புகிறார், இடைக்காலத் நிருவாக சபைகுறித்து என்ன கருதுகிறார்? என்பவை போன்ற நியாயமான -தமிழ்மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய -விடயங்களை எங்காவது ரணிலோ அல்லது அவரது அணியினரோ தெளிவுபடுத்தியதாக ஒரு ஆதாரத்தையாவது இந்தப் பேராசிரியரால் காட்டமுடியுமா?
தமிழோசையில் சொல்வது நடுநிலையானது என்பதும் நம்பகத் தன்மையானது என்பதும் இறந்தகாலமாகிப்போனதை நாம் நன்கு அவதானித்து வருகிறோம்.
அண்மையில் கூட யாழ்ப்பாணத்தில் நடந்த பொங்கு தமிழ் குறித்துச் செய்தி சொன்ன தமிழோசையின் வவுனியா செய்தியாளர் 'புலிகள் ஆதரவு அமைப்புகளால் ஒழுங்கு செய்து நடத்தப்பட்ட பொங்கு தமிழ்" என்று குறிப்பிட்டார்.
அந்த நிகழ்விலே பொதுச்சுடர் ஏற்றி அதனை ஆரம்பித்துவைத்தவர் யாழ் மாவட்ட அரச அதிபர்.
அப்படியாயின் தமிழோசைச் செய்தியின் பிரகாரம் யாழ்மாவட்ட அரச செயலகமும் புலிகள் ஆதரவு அமைப்புகளில் ஒன்று. அப்படித்தானே?
இன்னொரு உதாரணமும் சொல்லலாம். ரிஸ்வி மீடினின் கொலை தொடர்பாகத் தமிழோசையில் சொல்லபட்ட செய்தியைப் பாருங்கள்.
மீடின் சுடப்பட்டது நள்ளிரவில்
மறுநாள் மதியம் 11 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் இணையத்தளத்தில் மீடின் கொலைதொடர்பான ஊடக அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது.
அதிலே தெளிவாக மீடினின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்ட மீடினின் நண்பர் ஒருவர் மீடின் சுடப்பட்ட செய்தியைத் தெரிவித்தார்.." என்று குறிப்பிடப்பட்டடிருந்தது.
அன்று இரவு 9.45 (இலங்கை நேரம்) ஒலிபரப்பான தமிழோசையில்
ரிஸ்வி மீடின் கொல்லப்பட்டது குறித்துத் தகவல் சொன்ன தமிழோசையின் செய்தியாளர் 'இனந்தெரியாத நபர்கள் மீடின் சுடப்பட்ட செய்தியை மீடினின் வீட்டுக்குத் தொலைபேசியில் சொன்னார்கள்.." என்று குறிப்பிட்டார்.
இது எதைக் காட்டுகிறது. செய்தியாளரின் உள்ளக் கிடக்கையையா? அல்லது தமிழோசை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் அக்கறையின்மையையா?
தகவல் தொடர்பு யுகமான தற்காலத்தில் செய்தியாளர் வழங்கிய தகவல் தொடர்பில் சிரத்தையெடுத்துச் சரிபார்க்க முடியாதவர்கள் எதற்கு நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார்கள்?
முன்னொரு காலத்தில் சங்கரமூர்த்தி, ஆனந்தி போன்றவர்களின் நடுநிலையான செயற்திறன் மிக்க கூட்டணியால் தமிழோசை பெற்றிருந்த நற்பெயருக்கு தற்போது பொறுப்பிலிருப்பவர்கள் தமது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் காரணமாக வேட்டுவைக்கிறார்கள் போற்படுகிறது.
பி.பி.சி தமிழோசையின் விசேட நிருபராக இலங்கைத் தீவில் நிலைகொண்டிருப்பவருக்கும், அந்தச் சேவையின் லண்டன் ஒலிபரப்பாளர்களுக்கும் உண்மையில் ' ஏன் தமிழ்மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும்?' என்ற கேள்வி மனதைக் குடைகிறது. இதற்கான விடை நேற்றிரவு வரை அவர்களுக்குப் புரிந்திருப்பதாகத் தெரியவில்லை.
உதாரணமாகத் தேர்தல் புறக்கணிப்புக் குறித்துக் கருத்துத் தெரிவித்த தமிழ்மகன் ஒருவரிடம் 'இது சனநாயக மீறல் இல்லையா?' என்று கேட்டார் அந்த விசேட நிருபர். அதேகேள்வியைத்தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரையும் அந்த நிருபர் கேட்டார்.
உண்மையில் இவருக்கு சனநாயகத்தில் அக்கறை இருந்தால் அல்லது சனநாயகம் என்றால் என்ன என்று தெளிவான விளக்கம் இருந்தால் யாழ்ப்பாணத்தில் நிற்கும் இந்தக் காலப்பகுதியில் ''உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் அடிப்படை மனித உரிமைகள் கூட வழங்கப்படாது ஏதிலிகள் தங்ககத்தில் உள்ள மக்களை எப்போது மீளக் குடியமர்த்தப் போகிறீர்கள். அவர்களை மீளக்குடியமர்த்தாது விடுவது சனநாயக மீறல் இல்லீங்களா?" என்று யாழ் மாவட்ட இராணுவத் தளபதியையோ அல்லது ஆகக் குறைந்தது யாழ்மாவட்ட அரச அதிபரையோ கேட்டு அவர்களது பதிலை ஏன் ஒலிபரப்பவில்லை?
''ஓட்டுப்போடுவது" மட்டும்தானா அங்கு நிற்கும் நிருபர் அறிந்திருக்கும் சனநாயகம்???
இந்த ஒரு உதாரணமே சகல சந்தர்ப்பவாதிகளையும் இனங்காட்டப் போதுமென்று கருதுகிறேன்.
வாக்களிக்காமல் வீட்டிலிருப்பது சனநாயக மீறல் என்று கருதும் இந்த விசேட நிருபரின் தேசம் உப்புச் சத்தியாக்கிரகம் போன்ற சட்ட மறுப்பு நடவடிக்கைகளால் தான் சுதந்திரம் அடைந்தது. அதனை அவர் முதலில் நினைவுபடுத்திக்கொள்வது அவசியம்.
[b]வேதனையுடன் திரு</b>