Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"அபாயகரமான" செய்தி: பிரபல சிங்கள செய்தி ஆய்வாளர் தகவல்
#1
யாழ் மாவட்ட வாக்களிப்பு சொல்லும் "அபாயகரமான" செய்தி: பிரபல சிங்கள செய்தி ஆய்வாளர் தகவல்

[சனிக்கிழமை, 19 நவம்பர் 2005, 19:34 ஈழம்] [கொழும்பு நிருபர்]
சிறிலங்காவிற்கான அரச தலைவர் தேர்தல் வாக்களிப்பை யாழ். மாவட்டம் முற்றாக தவிர்த்தது ஒரு அபாயகரமான செய்தியை கொழும்பிற்கு கூறியுள்ளதாக பிரபல சிங்கள செய்தி ஆய்வாளர் நளின் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.


நளின் சேனநாயக்க கூறியுள்ளதாவது:

சிறிலங்கா அரசின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் யாழ்ப்பாணம் இருப்பதாகவும் சுமார் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட படைகள் பாதுகாப்பை உறுதிப்படுத்தி அங்கு நாளாந்த நிர்வாகம் வழமையாக நடைபெறுவதான ஒரு தோற்றத்தையே அரசும், செய்தி நிறுவனங்களும் இதுவரை எமக்கு காட்டி வந்தன.

ஆனால் விடுதலைப் புலிகளின் விருப்பிற்கு அமைய இம் மாவட்டம் முற்றாக வாக்களிப்பை தவிர்த்தமையானது அங்கு அரசாங்கமோ அல்லது அரச படைகளோ முற்றாக செயலிழந்து போயுள்ளதையே காட்டுகிறது. யாழ். குடாநாடு கூட விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்கின்ற உண்மையை இந்த தேர்தல் புகட்டியுள்ளது.

<span style='font-size:25pt;line-height:100%'>தமிழ் ஆயுதக் குழுவொன்றின் ஆதரவு தமக்கு இருப்பதாக கருதிய அரசியல்வாதி கூட, யாழ். மாவட்டத்தின் மொத்த வாக்குகளில் பதிவானவற்றில் கணிசமான அளவைக் கூட பெறமுடியாத நிலை ஏற்பட்டுவிட்டது</span>.

இதன் மூலம் அந்த ஆயுதக்குழுவிற்கு மக்களிடம் எதுவித ஆதரவும் இல்லை என்ற உண்மை அம்பலமாகியுள்ளது.ஏனெனில் அவருக்கு கிடைத்த மிகச் சொற்ப வாக்குகளில் அரச ஊழியர்களினதும் மற்றும் தபால் மூலம் பிற பகுதிகளிலிருந்தும் அளிக்கப்பட்ட வாக்குகளும் அடங்கும்.

சில வாக்குகளைக் கூட யாழ். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக பெறமுடியாத ஒரு ஆயுதக்குழுவையே எமது அரசியல் தலைவர் நம்பியிருந்திருக்கிறார்.

இப்படியான தமிழ் ஆயுதக் குழுவின் தலைவரை அமைச்சராக வைத்துக்கொண்டு வடபகுதியை தம்மால் ஆளமுடியும் என காட்டும் அரசியல்வாதிகள் இந்த தேர்தல் முடிவுகள் குறித்து கற்றுக்கொள்ள வேண்டிய மிகவும் அபாயகரமான செய்தியொன்று உள்ளது.

அது என்னவெனில், எமது படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் யாழ். குடாநாடு இருப்பதாக நாம் எண்ணிக்கொண்டிருக்கும் இந்நேரத்திலேயே அது விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என்ற உண்மையே ஆகும்.

<b>இந்நிலையில் அங்குள்ள எமது படைகளை முற்றுகையிட்டு விடுதலைப் புலிகள் தாக்குவார்களாயின் நிலமை என்னவாகும் என்பது அந்த அபாயமாகும்</b>.

இந்த உண்மையை உணராமல் தமிழ் ஆயுதக்குழுவை அரவணைத்துக் கொண்டு கற்பனையில் மிதக்கும் அரசியல்வாதிகள் இதனை புரிந்து கொள்ள வேண்டும் என்று நளின் சேனநாயக்க கூறியுள்ளார்

நன்றி: <b>புதினம்</b>
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
&quot;அபாயகரமான&quot; செய்தி: பிரபல சிங்கள செய்தி ஆய்வாளர் தகவல் - by வினித் - 11-19-2005, 04:03 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)