12-02-2003, 10:02 AM
வேம்படி மூலையில் கடைவைத்திருக்கும் வேலுப்பிள்ளையரின் கீரைக்கடைக்கு போட்டியாக ஆலடிச் சந்தியில் ஆறுமுகத்தானின் கடைவேண்டும் என்ற பொருளில்தான் கீரைக் கடைக்கு எதிர்கடை வேண்டும் என்று எமது முன்னவர்கள் சொன்னார்கள். அவர்கள் மறந்தும் கலிபோனியாவிலுள்ள விவசாயப் பண்ணையின் செயற்கைகூடத்தில் உயிரணுதொழில்நுட்பமுறை மூலம் பயிரிடப்பட்ட கீரை தாய்லாந்தில் பொதிசெய்யப்பட்டு TESCO பல்பொருள் அங்காடியினரால் பிலாவடி மூலையில் சந்தைப்படுத்தப்படுவதை கற்பனை செய்தும் பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி அவர்கள் சிந்தித்திருப்பின் வேலுப்பிள்ளையரும் ஆறுமுகத்தானும் நேரத்துடன் வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு பிலாவடிமூலையில் அமைந்திருந்திருக்கக்கூடிய TESCO வின் முன்னால் துண்டைவிரித்து அதில் விழும் செப்பு நாணயங்களுக்காக தவம் கிடக்கும் நிலைதான் இன்று ஏற்பட்டிருக்கும்.
போட்டிசந்தைக்கு சில முன்நிபந்தனைகள் உள்ளன என பொருளியலாளர்கள் சொல்வர். அவற்றை முறையாக கடைப்பிடிக்காது விட்டால் நலிந்தவரின் பொருளாதாரம் நட்டாற்றில்தான். மெக்சிக்கோ ஆர்யென்ரீனா தொடக்கம் நமக்கு கிழக்கேயுள்ள இந்தோனேசியா தாய்லாந்து வரை இந்த போட்டிச் சந்தைமுறைமையை சரிவர புரிய மறுத்த பயனை இன்றும் அனுபவிக்கின்றன. ஆயானபலவான் அமெரிக்காகூட அப்பப்ப சந்தைப்போட்டியில் சிலப்பல தடைகளை போடுவது வழமை. போட்டி என்ற பொய்யான மாயையின் வசப்பட்டு 'நாட்டை' முழுதாகத் திறந்து விட்டால் நமக்குத்தான் நட்டம்.
இந்திய பேரூடகங்களையும் நமது சிற்றூடகங்களையும் ஒரேமல்யுத்த மேடையில் ஒன்றாக மோதவிட்டால் நம்மால் ஒன்றிரண்டு சுற்றுக்களுக்குத்தானும் தாக்குப்பிடிக்க முடியுமோ என்பது சந்தேகம்தான். அவர்களிடம் அனுபவ பலம் ஆட்பலம் அரச பலம் பணபலம் இப்படி பல்பலங்கள் இருக்கின்றன. அவற்றை வைத்து களமாடுவது அவர்களுக்கு ஒன்றும் பெரிதல்ல. நம்மிடம்இருக்கும் ஓரேபலம் நம்மவர் மட்டும்தான். அந்தப்பலத்தை நமதுகையினுள் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்று நம்மவர் எண்ணுவதில் எந்த தப்பும் இருப்பதாய் தெரியவில்லை.
பொதுசன ஊடகம் என்பது தனியே ஒரு பொழுதுபோக்கு சாதனம் அல்ல. அப்படி 'நமது' அம்மையார் எண்ணியிருந்தால் பாதுகாப்புத்துறைக்கு சமனான துறையாக அதனைக்கருதி பறித்தெடுத்திருக்மாட்டார். எந்தவொருநாட்டிலும் ஒரு புரட்சி அல்லது மாற்றம் ஏற்படுகின்றது என்றால் யாவரும் முக்கியமாக குறிவைக்கும் இடத்தில் இந்த ஊடகத்துறையும் ஒன்று என்பதை நாம் மறந்து விடக்கூடாது. மக்களின் கண்களாயும் காதுகளாயும் இருக்கும் ஊடகங்களின் போக்கில் அந்த ஊடகம் இலக்கு வைக்கும் சமூகத்தில் அக்கறையுள்ளவர்கள் கவனம் செலுத்த வேண்டியது தவிர்க்கமுடியாததாகின்றது. இந்த இந்திய ஊடகங்கள் இலக்கு வைக்கும் இந்த சமூகம் மற்றைய சமூகங்களைப் போன்ற சாதாரண சமுதாய வாழ்வியல் நடைவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் ஒரு குழுமம் அல்ல. இவை இனவிடுதலைக்காகப் போராடும் ஒரு இனத்தின் ஊற்றுக்கண்கள். அந்த ஊற்றுக்கண்களுக்கு ஆபத்து விளைவிற்கக்கூடிய எந்தவொரு காரணியையும் களைந்தெறிய வேண்டிய கடப்பாடு அந்த சமூகத்தைச் சாருகின்றது.
எம்மத்தியில் இன்று இருக்கும் எம்மவரின் சில ஊடகங்களின் தரம் போற்றிப் புகிழ்ந்திடக்கூடிய முறையில் இல்லைத்தான். அதற்கான காரணத்தை நாம் விளங்கிக்கொள்ள முயல்வது நன்று. அதற்கு நாம் வழங்கும் ஆதரவு பங்களிப்பு என்பன அவற்றின் தரத்தை முன்நோக்கி நகர்த்த உதவும். அதன் தரம் உயர்ந்தால்தான் நான் அதற்கு ஆதரவு கொடுப்பேன் என்று தர்க்கிப்பது இன்றைய காலத்திற்கு ஒவ்வாதது.