Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ரணிலின் தோல்விக்கு காரணம் என்ன?
#4
[size=15]ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தமிழர் கட்டுப்பாட்டுப் பிரதேச தமிழரது நிலைப்பாடு தேர்தலில் வாக்களிப்பதா இல்லையா என்பது மட்டுமே?

ஏனைய பிரதேசங்களில் உள்ள தமிழர் பிரச்சனை யாருக்கு வாக்களித்தால் நிம்மதியாக வாழலாம் என்பது?

சிங்கள மக்களுக்குத் தெரியும்.
இவர்களில் யார் வந்தாலும் யுத்தமொன்றுக்கு போக முடியாது என்பது.
அவர்களது இறுதிப் பேச்சுகள் சமாதானத்தை நோக்கியதாகவே இருந்தது.

<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->\"எமது ஆட்சிதானே நடக்கிறது. இப்போதும் யுத்தமில்லைதானே?  
மீண்டும் நாங்களே வந்தால் எப்படி மீண்டும் யுத்தமொன்று வரும்?  
நாங்கள்தானே சமாதானத்துக்கான பேச்சுகளுக்கு அடி கோலியவர்கள்?
நாங்கள் தமிழருக்கு எதிரானவர்கள் அல்ல.
சமாதானத்தையே விரும்புகிறோம்.

பிரபாகரன் கூட எனது உறுவுக்காரன் என்பதான பேச்சுகள்.........<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

[size=15]இவை ஓரளவு யுத்த பீதியை தளர்த்தியது.

ஆனால்
தென்பகுதி பெளத்த தலைமை ஒன்று வர வேண்டும்.
புதியதொரு சிந்தனையும் தலைமையும் தேவை.
பாமர மக்களைப் பற்றி நோக்கக் கூடிய தலைமையாக அது இருக்க வேண்டும் என்பதே சிங்கள மக்களது கேள்வியாகவும் ஆதங்கமாகவும் இருந்திருக்கிறது என்பது இப்போது தெளிவு.

ஐக்கிய தேசிக் கட்சி எதுக்கும் மேலைத் தேசங்களை காட்டி அல்லது யுத்த பீதியை உருவாக்கியே வாக்குக் கேட்டது.

மகிந்த சிந்தனை என்ற பேரில்
சமாதானத்துடன் கூடிய கிராமப் புறங்களுக்கான வசதி-வாய்ப்புகளை அள்ளித் தர இருப்பதாக கூறியவை ஜே.வீ.பியின் அங்கிகாரத்துடன் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

கிராமங்களை கணணி யுகமாக்கி முழு உலகையும் கிராமத்துக்கு கொண்டு வரப் போகிறோம் என்ற புது ஜால வார்த்தைகள் கணணி என்பது என்னவென்றே தெரியாத கிராமத்து சிங்கள அப்பாவி விவசாயிக்கு இனிப்பு.

ஐ.தே.க. (பிரேமதாஸ) ஆட்சிக் காலத்தில் கிராமத்து ஜே.வீ.பியினர் என அடையாளம் காணப்பட்ட இளைஞர்களைக் கொன்று குவித்த அணர்த்தங்கள் மறக்க முடியாதவை.

பல ஜே.வீ.பியினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள சுதந்தரக் கட்சிக்குள் இணைந்தனர்.
அவர்கள் வெளியே மட்டுமே சுதந்திரக் கட்சியினர்.
உள்ளே முற்று முழுதாக ஜே.வீ.பிதான்.

ஜே.வீ.பியின் வளர்ச்சி கிராமங்களில் இருந்தே ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை போன்ற நாடுகளின் பலம் கிராமங்கள்தான்.
இடதுசாரிகளின் பலம் மேற்கு உலகில் அஸ்தமனமாகிக் கொண்டு வந்தாலும்.
கால்மாக்ஸ் - லெனின் - மாவோ போன்றோரின் சிந்தனைகள் சிங்களக் கிராமத்து மக்களுக்கு தேனிசை போன்றது.
சோஸலிச பேச்சுக்கள் நடை முறைக்கு சாத்தியக் குறைவாக இருந்தாலும் பெளத்த சிந்தனையோடு கூடிய நடை முறைகள்
என்றுமே கவரக் கூடியது.

மேலத்தேச எதிர்ப்புகள் வேறு
கிராம மக்களைக் கவர்ந்துள்ளது.

இவை ஜே.வீ.பியால் மென்மையாக வருடப்படும் நடைமுறைகளும் -பேச்சுகளுமாகும்.
அவர்களது அரசியலும் கீழ் மட்டத்திலுள்ள மக்கள் ஊடாகவே நடக்கிறது.
ஊரில் நடக்கும் நல்லது - கெட்டதுக்குக் கூட ஜே.வீ.பியினர் பங்கு கொள்வது.
அவர்களது குடும்பத்து உறவாக இணைந்து நிற்பது.
வாகன வசததிகளற்ற - பந்தோபஸ்துகள் இல்லாது மக்களோடு மக்களாக இணைவது எல்லாமே மக்களைக் கவரக் கூடியது.

ரணிலின் ஐ.தே.கட்சி பணக்காரர்களுக்கான வாய்ப்புகளை மட்டுமே உருவாக்கும் கட்சி என்பது கிராமத்தவரது வாக்குகளை தடுத்தே வந்திருக்கிறது.

இவர்களுக்கு தமிழ் - முஸ்லிம் வாக்குகள்தான் பலம்.

தமிழர் வாக்குகள்தான் இவற்றிலும் முதன்மையானது.

தமிழர் பகுதி வாக்குகள் இவர்களில் யார் ஆட்சிக்கு வந்தாலும் விமோசனமில்லை என்பதான நம்பிக்கையீனத்தை உலகுக்கு வெளிக்காட்டியிருக்கிறது.

அதுவே மகிந்தவுக்கான வெற்றிக்கும்
ரணிலின் தோல்விக்கும் வழிவகுத்துள்ளதான வெளிப்பார்வை.

பார்வைக்கு புரியாத ஒன்று உண்டு என்றால்
அது ஜே.வீ.பியின் அமோக வளர்ச்சி.........

எல்லோரும் நினைப்பது போல
இப்போதும் இங்கு மகிந்த வெற்றியடையவில்லை.
ஜே.வீ.பிதான் வெற்றி பெற்றிருக்கிறது.

ஜே.வீ.பினரின் லட்சியம்
சிறிமாவோ மற்றும் ஐதேக ஆட்சிகாலத்தில் தம் உறுப்பினர்களைக் கொன்று குவித்த
<b>ஐதேக மற்றும் பண்டாரநாயக்க ஆட்சிகளை இல்லாமல் பண்ணுவதே</b>.
அது நடந்தேறியிருக்கிறது.

<b>இது ஜே.வீ.பியின் வெற்றி.</b>
Reply


Messages In This Thread
[No subject] - by Danklas - 11-19-2005, 08:47 AM
[No subject] - by Thala - 11-19-2005, 11:24 AM
[No subject] - by AJeevan - 11-19-2005, 01:19 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)