12-02-2003, 03:17 AM
இந்தியாவில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரு தொலைக்காட்சி வைத்துள்ளது. இவர்கள் செய்தித்துறையில் நடுநிலையை கடைப்பிடிப்பது இல்லை. உள்ளே அரசியல் தலைகள் சொல்வது தான் நடக்கிறது. சாதாரண டிவி சனல்களுக்கு மிரட்டல்கள் மற்றும் அரசியல் பலத்தை அவர்களுக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள். சினிமாவில் இருக்கும் இயக்குனர்களை மிரட்டி பணியவைக்கிறார்கள் கேபிள் டிவி காரர்களைவேறு விலைககுவாங்க முயற்;சித்தார்கள். இப்படி ஏராளமான குற்றச்சாட்டு ஒவ்வொருவர்மேலும் உள்ளது.
ஆரம்ப காலத்தில் சினிமாவைப்போட்டு மக்களை சோம்பேறிகள் ஆக்கினார்கள். இப்போது சின்னத்திரை நாடகங்கள், பலருக்கு திகட்டிவிட்டது. ஆனாலும் ஆரம்பகட்டததில் இருக்கும் எம் மக்கள் எல்லாம் மறந்து முதலில் அடிமையாகிவிடுவார்கள். இதில் இருந்து மீண்டு வர நாள் எடுக்கும். இது போராட்ட உணர்வை மழுக்கடித்துவிடும். ஏன் எம் நாட்டில் என்ன நடக்கிறது என்று அறியும் ஆவலை கூட நீககிவிடும்.
இவர்களுடன்போட்டிபோட எமது சனல்களிடம் திறமை உண்டாதெரியவில்லை. ஆனாலும் இந்தச்சனல்களை புறக்கணிக்கமுடியாது. வீட்டில் இருக்கும் வயதானவர்களுக்கு பெண்களுக்கு குழந்தைகளுக்கு இது சிறந்த பொழுது போக்கு.
இவர்களுடன் பேச்சு நடத்தி எம்மக்களுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை மட்டும்கொண்ட ஒரு சனலை ஆரம்பிக்கவற்புறுத்தலாம். இவர்களில் சன்டிவியினர் ஒவ்வொரு மாநிலத்திற்கென்றும் ஒரு தனி சனலை ஏற்றபடுத்திக்கொடுத்துள்ளனர். ஓவ்வொன்றும் ஒரு அவரவர்கள் மாநில மொழியில் ஒலிஒளிபரப்பப்படுகின்றது.
நிச்சயமாக எமது மக்கள் ஒன்றிணைந்து நின்;றால் எமக்காக ஒரு சனலை அவர்களால் ஏற்றபடுத்த முடியும். அந்த சனலுக்கான நிகழ்ச்சிகளை எமது தமிழர்களைக்கொண்ட ஒரு குழு தீர்மானிக்கலாம். ஆகவே இப்பபோதே அவர்கள் கொடுப்பதை அப்படியே ஏற்றக்கொள்ளாது எமக்கென்று ஒரு தip சனலை ஏற்படுத்த வற்புறுத்தலாம். அச்சனல் இலங்கை மட்டுமன்றி உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கென பிரத்தியேக நிகழ்ச்சிகளை தயாரித்து ஒலிஒளிபரப்பலாம். மலேசியத்தமிழர்களும் உணர்வால் எம்முடன் ஒன்றுபட்டவர்களே. அவர்களையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.
எம் மக்களின் ஒற்றுமைதான் இதை வென்றுதரும்