11-19-2005, 01:54 AM
<b>குஷ்புக்கு ஆதரவா? * சானியா திடீர் பல்டி</b>
பாதுகாப்பான செக்ஸ் உறவு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துக்கு சில நாட்களுக்கு முன் ஆதரவு தெரிவித்த டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நேற்று திடீரென பல்டி அடித்தார். "நான் அப்படி கூறவேயில்லை. மீடியாக்கள் பரபரப்புக்காக தவறான செய்தியை வெளியிட்டு விட்டன' என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
"இந்துஸ்தான் டைம்ஸ்' நாளிதழ் சார்பில் டில்லியில் சில நாட்களுக்கு முன் லீடர்ஷிப் மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, உலக அழகி நடாலியா, கார் ரேஸ் வீரர் நரேன் கார்த்திகேயன், பாதுகாப்பான செக்ஸ் உறவு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
விழாவில் சானியா மிர்சா பேசும் போது, "பாதுகாப்பான செக்ஸ் உறவு, திருமணத்துக்கு முந்தைய உறவு என்று இரண்டு பிரச்னைகள் இங்கு முன் வைக்கப்படுகின்றன. திருமணத்துக்கு முன்பு அல்லது திருமணத்துக்கு பின்பு எப்போது உறவு வைத்து கொண்டாலும் பாதுகாப்பான செக்ஸ் உறவு வைத்து கொள்ள வேண்டும் என்று நானோ, பிறரோ சொல்லி தெரிய வேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் கண்டிப்பாக தங்களது செயல் குறித்து அறிந்து இருக்க வேண்டும்' என்று கூறி குஷ்புவின் கருத்தை அப்படியே பிரதிபலித்தார்.
இந்நிலையில், சானியா மிர்சா சார்பில் ஐதராபாத்தில் நேற்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:
இஸ்லாமை பொறுத்தவரை திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு என்பது மிகப்பெரிய பாவம். நான் அல்லாவை நம்புபவள். தவறான கருத்து கொண்டால் அல்லா என்னை மன்னிக்க மாட்டார். நான் கூறிய கருத்துக்களை மீடியாவில் திரித்து தவறாக வெளியிட்டு விட்டனர். நான் கூறிய கருத்துக்களை பத்திரிகையாளர்கள் தவறாக புரிந்து கொண்டனர். அதை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தும் முன் உண்மையில் நான் சொன்னது என்ன என்பதை மீண்டும் உறுதிப்படுத்த கூட அவர்கள் முயற்சி செய்யவில்லை என்பது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு முஸ்லிமாக, ஒரு இந்திய பெண்ணாக நான் கூறிய கருத்தை தவறாக வெளியிட்டு பிரச்னையை ஏற்படுத்தி விட்டனர்.சில பத்திரிகையாளர்கள் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் என்னுடைய கருத்துக்களை திரித்து, சொன்னதில் பாதியை மட்டுமே எடுத்து கொண்டு முட்டாள் தனமான தலைப்புகள், சந்தர்ப்பவாத கட்டுரைகள் வெளியிட்டு எனக்கு மிகுந்த மனவலியை ஏற்படுத்தி விட்டனர்.திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு குறித்து நான் கூறியதாக சில பத்திரிகையாளர்கள் முற்றிலும் தவறான செய்திகளை வெளியிடுவதற்கு மிக தவறான வார்த்தைகளை நான் தேர்ந்தெடுத்தது தான் காரணமா என்பது கூட எனக்கு தெரியவில்லை.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
http://www.dinamalar.com/2005Nov19/imp2.asp
dinamalar.com