12-02-2003, 01:28 AM
தாய்வழிச் சமூகம் எமது தமிழ் சமுதாயத்தில் இருந்தது என்று அறுதியிட்டுச் சொல்லக்கூடியதான ஆதாரங்கள் எதனையும் நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் நம் ஈழத்து வரலாற்றில் சில நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட கால வரலாறுகளில் பெண்மையின் பெருவீரம் பற்றிப் பேசப்பட்டிருக்கின்றது. பண்டாரவன்னியனின் நாச்சிமார்
ஆனையடக்கிய அரியாத்தை போன்ற வரலாற்றுச் நிகழ்வுகள் பெண்களின் ஆற்றல் துணிவு அவர்களின் அன்றைய சமுதாயத்தின் மீதான செல்வாக்கு என்பன பற்றி சொல்வதற்கு போதுமானவை.
இராகுல் சங்கரச்சியார் (பெயர் சரியாக நினைவில் இல்லை) என்ற இந்திய எழுத்தாளர் எழுதிய புத்தகம் ஒன்று தமிழில் 'கங்கையிலிருந்து வொல்கா வரை" என்ற மொழிபெயர்ப்புடன் வெளிவந்திருந்தது. அதில் வேடுவ காலத்திலிருந்து தொடங்கப்பட்டு ஐரோப்பிய காலம் வரை சொல்லப்பட்டிருக்கின்றது என்று நினைக்கின்றேன். அவர் அன்றைய வேடுவ காலத்திலேயே தாய்வழிச் சமூகம் இருந்ததாகச் சொல்கின்றார். வேட்டையின் இடத்தை இலக்கை தீர்மானித்து அந்த வேட்டையை தலைமை தாங்கி நடத்துபவள் குடும்பத் தலைவி என்று குறிப்பிடுகின்றார். அன்றைய காலத்தில் வேட்டைதான் குடும்பத்தின் பிரதான செயற்பாடு. எனவே அதனை வழிநடத்தியவள் தாய் என்ற முறையில் அது தாய்வழிச் சமூகம் என்று சொல்லலாம். நாம் இந்திய பாரம்பரிய வழிவந்தவர்கள் என்று சொல்லப்படுபவர்கள். எனவே இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதன்படி பார்த்தால் ஆம் நமது மூதாதையரிடம் தாய்வழி சமூகக் கட்டமைப்பு இருந்தது என்ற முடிவுக்கு நாம் வரலாம்.