11-18-2005, 08:15 PM
Mathuran Wrote:[மதுரன் நீங்கள் சொல்லும் கழகங்கள் குழுக்களின் விழிப்புணர்வு பேசும் பெரியவர்களின் இரண்டாம் மூன்றாம் மனைவிகளின் சோகங்களை அறியவில்லையோ நீங்கள் ? உங்கள் மதிப்புக்கு உரிய தமிழககழகங்கள் அமைப்புகளின் உணர்வாளர்களின் பாலியல் வக்கிரங்களுக்கு எத்தனையே தமிழகத்துச் சிறுமிகளும் பலியாகி தன்னைக்காக்க இயலாத கையினால் தன் வயிற்றிலிருந்து ஒரு குழந்தையையும் பிரசவித்து சாவுக்கும் வாழ்வுக்கும் போராடும் பெண்களின் கதை இந்த உணர்வாளர்களினால் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதையும் புரியுங்கள்.
குஸ்பு அவமானப் படுத்தியது தமிழ் பெண்களைத்தானே. அதனால்த்தான் தமிழ் தலைவர்கள் அதனை எதிர்த்து போராடுகின்றார்கள். அரசியல் வாதிகள் என்ற ஒரு சொல்லுக்குள் பலவிடயங்களை புறம்தள்ளிவிடாதீர்கள். அந்த தமிழ் அரசியல் வாதிகளில் பலருக்கு தமிழின் மீதும் தமிழரின்மீதும் அக்கறை இருக்கின்றதென்பதை புரிந்துகொள்ள முயலுங்கள். நேற்று நடிக்க வந்ததனால் குஸ்புவை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் தமிழ் உணர்வாளர்கள் அப்படியானவர்கள் அல்லர். அவர்கள் உங்களின் எங்களின் தமிழுக்காக பாடுபடுபவர்கள். முடிந்தால் போற்றுங்கள் இல்லாது விடில் தூற்றாமலாவது -இருந்தாலே போதும்.
எயிட்சைப்பற்றிய அறிவுரை தமிழர்களுக்கு குஸ்ப்பு புகட்டித்தான் தெரிய வேண்டியதில்லை. அதற்கென பல விளிப்புணர்வு கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவர்கள் கூட தமிழர்களை வம்பிற்கு இழுத்ததும் இல்லை இழுக்கவும் மாட்டார்கள்.
:::: . ( - )::::

