11-18-2005, 07:26 PM
திருமணத்துக்கு முன் செக்ஸ்: சிக்கலில் சானியா
நவம்பர் 18, 2005
ஹைதராபாத்:
திருமணத்துக்கு முன் செக்ஸ் விவகாரத்தில் குஷ்புவுக்கு ஆதரவு தெரிவிக்கும் தொனியில் பேசிய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கு எதிராக ஆந்திராவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
டெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை மாநாட்டில் பங்கேற்ற சானியாவிடம், தமிழக பெண்களின் கற்பு குறித்து விமர்சித்த குஷ்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சானியா,
செக்ஸ் விஷயத்தில் அவரவர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். திருமணத்துக்கு முன்போ, பின்போ எப்போது செக்ஸை வைத்துக் கொண்டாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.
திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது தவறில்லை என்பது போல சானியா பேசியதாக கருத்து உருவாகியுள்ளது. இதையடுத்து ஹைதராபாத்திலும் விசாகபட்டிணத்திலும் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன.
சானியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும் பல இஸ்லாமிய அமைப்புகளும் சானியாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் குஷ்பு, சுகாசினிக்கு நடந்ததைப் போல சானியாவின் படங்களுக்கு தீ வைப்பது, படங்களை செருப்பால் அடிப்பது போன்ற போராட்டங்கள் நடந்து வருகின்றன.
திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று பேசியுள்ள சானியாவை ஒரு முஸ்லீமாகவே கருத முடியாது என இஸ்லாமிய அமைப்புகள் கூறியுள்ளன.
ஏற்கனவே, டென்னிஸ் போட்டிகளின்போது சானியா அணியும் குட்டைப் பாவாடைக்கும் இஸ்லாமிய மதகுரு ஒருவர் எதிர்ப்புத் தெரிவித்ததும், அதற்கு சானியா கடும் பதில் தந்ததும் நினைவுகூறத்தக்கது.
நான் 6 இன்ஞ் அல்லது 10 இன்ஞ் பாவாடை அணிவது என் இஷ்டம். நான் எப்படி இருக்கிறேன், எப்படி வாழ்கிறேன் என்பது குறித்து யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றார் சானியா.
இந் நிலையில் இப்போது திருமணத்துக்கு முன் செக்ஸ் குறித்த விவகாரத்தில் சிக்கியுள்ளார்.
Thatstamil

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>