11-18-2005, 09:01 AM
sooriyamuhi Wrote:சிங்கள மக்கள் எதை நினைத்து வாக்களித்தார்களோ தெரியவில்லை?
முடிவைப்பார்க்கும்போது சிங்களத்திலும் கிட்டத்தட்ட அரைவாசிப்பேர் போரை விரும்பவில்லைப்போல் தெரிகிறது? அல்லது அவர்கள் ரணிலின் மற்றைய வாக்குறுதிகளுக்காக வாக்களித்தார்களா?........................
பிரதான கட்சிகளுக்கு வழக்கமாகவே கணிசமானளவு நிலையான வாக்கு வங்கி- அதாவது ஆதரவாளர்கள்- உண்டு.
அத்தகையவர்களது வாக்குகளுடன் இலங்கைத் தீவின் சிறுபான்மை இன மக்களது பெருவாரியான வாக்குகளும் கலந்துதான் ரணிலின் இந்த மொத்த வாக்கு எண்ணிக்கை அமைந்திருக்கிறது.
எனவே இந்த சிறுபான்மை மக்களது -சமாதானத்துக்காக அளிக்கப்பட்ட வாக்குகள்- கழிக்கப்பட்டு எஞ்சும் மிகுதிதான் பெரும்பான்மை மக்களது வாக்குகளாகக் கணிக்கப்படவேண்டும்.
ஆனால் அதிலும் நிலையான வாக்கு வங்கியை (இவர்களுக்கு சண்டையா சமாதானமா என்பது ஒரு பொருட்டல்ல. எது நடந்தாலும் யானைக்குப் புள்ளடியிடுவதே பிறவிப் பெருங்கடன் என்று வாழ்பவர்கள் இவர்கள்) கழித்துப் பார்த்தால் எஞ்சும் பெரும்பான்மை இன மக்களே சமாதானத்துக்காக ரணிலுக்கு வாக்களித்தனர் என்று சொல்லலாம்.
அது அப்படியிருக்க, இப்பொழுது இலங்கைத் தீவிலிருந்து கிடைக்கும் தகவல்களின்படி தமிழர் தாயகப் பகுதிகளில் மீள் வாக்களிப்பு நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையாளரிடம் ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கவுள்ளதாகத் தெரியவருகிறது.
இனிச் சிலகாலத்திற்கு கடும் அரசியல் ராஜதந்திர நகர்வுகளை நாங்கள் எதிர்பார்க்கலாம் என்பது மட்டும் உறுதி.
<b>அன்புடன் திரு</b>

