11-18-2005, 08:42 AM
மகிந்தவா? ரணிலா? மனதைக் குடைந்து கொண்டிருப்பவர்களுக்கு தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவிடும்.
<img src='http://img485.imageshack.us/img485/2847/car9ix.jpg' border='0' alt='user posted image'>
யாரோ இருவரில் ஒருவர் ஜனாதிபதி மாளிகைக்குக் குடித்தனம் போகப் போகிறார். தேர்தல் இந்த வருடமல்ல அடுத்த வருடம் தான் என ஆளும் தரப்பு; கூறி மழுப்பியபோது ஐக்கிய தேசியக் கட்சி விட்டுவிடவில்லை. மக்கள் சக்தி என்ற மிகப் பிரமாண்டமான தொடர் பேரணியை நடத்தி தமது கட்சிக்கான ஆதரவையும் தேர்தலின் அவசியத்தையும் வெளிப்படுத்தியது.
அரசாங்கம் ஜனாதிபதி தேர்தலை நினைத்துப் பார்க்க முன்னரே நினைவூட்டி பிரசாரத்தையும் தயார்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சி என்பது இங்கு கவனிக்க வேண்டியது. எனினும், தேர்தல் இவ்வருடமா அல்லது அடுத்தவருடமா? என்பதைத் தீர்மானிக்கின்ற பொறுப்பு சிறிலங்காவின் உயர் நீ திமன்றத்திடம் சென்றதன் பின்னர் உயர்நீதிமன்ற தீர்ப்பு ஐக்கிய தேசியக்கட்சிக்குச் சாதகமாய் இருந்தது.
உடனடியாக ரணில் விக்கிரமசிங்கா ஜனாதிபதி வேட்பாளர் என்பது வெளிவரவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி தமது வேட்பாளரை நிறுத்துவதில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு இறுதியில் மகிந்த ராஜபக்ஷதான் வேட்பாளர் என்பது தீர்மானிக்கப்பட்டது.
இக்கால கட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றி தெளிவாகத் தெரிந்தது. அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. வடக்குக் கிழக்கு தமிழ் மக்களது வாக்குகள் ரணில் விக்கிரம சிங்காவுக்குக் கிடைக்கும் என நம்பியிருந்ததுதான்.
இதனை ஐக்கிய தேசியக் கட்சி எதிர்பார்த்தது போல் மகிந்த அணியும் நம்பினர். இதனையடுத்து தென்னிலங்கை மக்களின் வாக்குகளைக் குறிவைத்து மகிந்த தரப்பு தீவிர பிரசாரக்களத்தில் இறங்கினார். இனவாதக் கட்சிகளான ஜே. வி.பி, ஹெல உறுமய உட்பட 24 கட்சிகளின் ஆதரவு மகிந்தவை வெற்றியின் விளிம்பிற்குக் கொண்டு சென்றது.
இத்தகைய நிலையில் யார் வெற்றி பெறுவார் என்பதைத் தேர்தல் வரை கணிப்பிட முடியாத நிலையில் தான் நேற்றுத் தேர்தல் நடைபெற்றது. இன்று வெளியாகும் முடிவுகளில் இருந்து தெரிவாகும் ஜனாதிபதி அடுத்து என்ன நகர்வினை மேற்கொள்வார் என்பது தான் இப்போது அறிய வேண்டிய விடயம். மகிந்த வந்தால் போர், ரணில் வந்தால் சமாதானம் என்ற கருத்துத் தோற்றம் பெற்றுள்ளது.
இது உண்மையில் நிகழப்போவதல்ல. இருவருடைய தேர்தல் விஞ்ஞாபனங்கள், எண்ணங்கள், குறிக்கோள் எல்லாம் ஒன்றுபட்டு நிற்பதால் யார் வந்தாலும் சமாதானத்தை இவர்கள் கொண்டு வரப்போவதில்லை.
அப்படியாயின் சண்டை வருமா? என்ற கேள்வி எழுகின்றது. மகிந்தவைப் பொறுத்தவரை போர்நிறுத்த உடன்படிக்கையில் மீளாய்வு செய்யவிரும்புகிறார். இதனை ஒருபோதும் தமிழீழ விடுதலைப்புலிகள் விரும்பமாட்டார்கள். அதேநேரம் அனுசரணைப் பணியினை மேற்கொண்டு வரும் நோர்வேயை ஓரங்கட்டிவிட்டு இந்தியாவை உள்ளிழுப்பதற்கான திட்ட யோசனையையும் மகிந்த ராஜபக்ஷ கொண்டிருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத இயக்கமாகத் தடைசெய்திருக்கும் இந்தியா சிறிலங்காப் படைத்தரப்பிற்கு இராணுவ ரீதியான உதவிகளை மேற்கொண்டு வரும் நிலையில் நடுநிலைமைத் தன்மை கொண்ட நாடாக இந்தியாவைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வதற்கு தயாராகவில்லை.
ஏற்கனவே ஈழப்பிரச்சிரனையில் தலையிட்டு மூக்குடைபட்டு போன இந்தியா இன்னும் ஒருமுறை தலையை நுழைக்கும் என்பதற்கான சாத்தியமுமில்லை. அதேவேளை நோர்வேயின் சமாதானப் பணியினை எந்தவொரு நாடும் விமர்சிக்கவில்லை. ஐரோப்பிய நாடுகள் கூட நோர்வேயின் பணிகளுக்கு ஆதரவு வழங்கி வருகின்றன. அத்துடன் அமெரிக்காவுடன் சினேகபூர்வ உறவு கொண்ட நோர்வேயை ஓரங்கட்டி ஈழப்பிரச்சினையில் நேரடியான தலையீடு செய்வதை இந்தியா எந்தளவிற்கு கையாளும் என்பது கேள்விக்குறி?
இது மட்டுமன்றி தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் உணர்வலைகள் கணிசமான அளவு உள்ள நிலையில் சிங்கள தரப்பிற்கு சார்பான போக்கினை இந்தியா மேற்கொள்ளுமானால் அது தமிழகத்தில் ஈழத்தமிழ் ஆதரவு அரசியல் கட்சிகளுடனான உறவில் விரிசல் நிலையை ஏற்படுத்தும்.
எனினும் இந்தியா மறைமுகமாக சிங்கள தரப்பிற்கு உதவிகளை வழங்க முன்வரும் என்பது உறுதி!
மறுபுறம் தமிழீழ விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய நாடுகள் தற்காலிக பயணத்தடையை விதித்துள்ள போதும் சமாதானம் ஏற்படவேண்டும் என்பதில் ஆர்வமாகவுள்ளன.
ஒற்றையாட்சி முறையில் தமிழ் மக்களது பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்பது ஐரோப்பிய நாடுகள் கூட உணர்ந்த உண்மை. அத்துடன் தற்போதுள்ள போர் நிறுத்தம் பலப்படுத்தப்பட வேண்டும். அது தொடர்ந்து கடைப்பிடிக்கப்படவேண்டும் என்பதிலும் ஐரோப்பிய நாடுகள் ஆர்வமாயுள்ளன.
இத்தகைய சூழலில் நோர்வே, ஐரோப்பிய நாடுகளின் எண்ணங்களை புறந்தள்ளி விட்டு இந்தியாவுடன் கைகோர்த்துக் கொண்டு ஒற்றையாட்சி தீர்வை முன்வைப்பது என்பது மகிந்தவுக்கு இலகுவான காரியமல்ல. அவ்வாறு முன் வைக்கப்படும் போது மீண்டும் போர் மூழ்வது என்பது தவிர்க்கமுடியாத தொன்றாகிவிடும்.
இத்தகைய நிலையில் சிங்கள அரசு சர்வதேச சமூகத்திடம் போரை நியாயப்படுத்த முடியாத சூழல் ஏற்படும்.
இன்னுமொரு பிரதான விடயம் சமாதானச் சூழலை தோற்றுவிப்பதானால் முதலில் ஒட்டுப்படையினரின் ஆயுதங்கள் களையப்படவேண்டும். இது போர் நிறுத்த ஒப்பந்தத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இவ்விடயத்தில் சந்திரிகா அரசு மெத்தனப்போக்கை கடைப்பிடித்து வந்தது.
இனிவரும் ஜனாதிபதி இவ்விடயத்தில் இறுக்கமான போக்கினை கடைப்பிடிக்க வேண்டும். ஆயுதங்கள் களையப்பட்டு ஒட்டுப்படைகள் தமிழர் தாயகத்தை விட்டு வெளியேற்றப்பட வேண்டும். கண்காணிப்பு குழுவினர் கூட ஒட்டுப்படைகளுக்கு சிறிலங்காப் படையினர் ஆதரவு வழங்கி வருவதை உறுதிப்படுத்தியுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்ட போதும் சர்வதேச சமூகமும் சமாதானப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு புதிய தலைவருக்கு அழுத்தம் கொடுக்கலாம். இதனை இனவாதக் கூட்டில் வெற்றியடைந்த தலைவராக இருந்தால் இதுவும் தர்ம சங்கடத்தை ஏற்க வாய்ப்புள்ளது.
இது மகிந்தவாக இருந்தால் போரைத் தொடங்கவும் முடியாது சமாதானத்திற்கு நகரவும் முடியாது. இனவாதத்தில் கட்டுண்டு உழலுகின்ற சூழலை நிச்சயம் தோற்றுவிக்கும்.
ரணில் ஜனாதிபதியானால் பேச்சுவார்த்தை என்று காலத்தை நீடித்துச் செல்வதை தமிழ் மக்களோ தமிழீழ விடுதலைப்புலிகளோ விரும்பப் போவதில்லை. அமெரிக்கா உள்ளிட்ட உலக வல்லரசுகளின் உதவியுடன் சிங்களப் படைகளை நவீன மயப்படுத்தும் அதேவேளை சர்வதேச வலைப் பின்னலினால் விடுதலைப்புலிகளை சிக்க வைப்பதற்கான ராஜதந்திர முயற்சியையே ரணில் தரப்பு மேற்கொண்டு வருகின்றது.
ரணில் வெற்றி பெற்றால் மேற்கூறப்பட்டதையே மேற்கொள்வார். இவ்விருவரது அணுகுமுறைகளையும் ஆழ நோக்குகையில் சமாதானத்தைக் கொண்டு வருவதற்கான இதய சுத்தியுடனான நெகிழ்வுப்போக்கு கொண்ட கொள்கைகள் இல்லை.
எனவே தமிழ் மக்கள் இந்தத் தேர்தலை புறக்கணிக்காது ரணிலுக்கு அமோக ஆதரவை வழங்கியிருந்தாலும் கூட ரணில் சமாதானத்தை ஏற்படுத்தப் போகிறவர் அல்ல. இந்த நிலையில் போர் எப்போது மூளும் என்ற கேள்வி எழுகின்றது.
புதிதாக வரும் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எவ்வாறான அணுகுமுறைகளை கையாளப்போகின்றார் என்பதில் தான் தேசியத்தலைவரின் மாவீரர்நாள்உரை அமையப் போகின்றது.
தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மாவீரர்தினஉரை விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திவிடும்.
அதேநேரம் சமாதான சூழலைப் புறந்தள்ளும் சிங்கள அரசுகள் மீது தமிழினம் தமது விடுதலைப் போராட்டத்தை முன்நகர்த்த முயற்சிக்குமானால் சர்வதேசசமூகம் அதனை நியாயப்படுத்த வேண்டிய நிலையையே தோன்றும்.
இவற்றை நன்கு அவதானிக்குமிடத்து ஜனாதிபதி தேர்தலும் அதில் வெற்றி பெறும் ஜனாதிபதியின் போக்குக்கள் சர்வதேச சமூகத்தை அதிருப்திக்கு உள்ளாக்குமாகவிருந்தால் நிச்சயம் அது தமிழ் மக்களுக்கு ராஜதந்திர ரீதியில் சாதகமான தன்மையை ஏற்படுத்தும் என்பது உறுதி!
இந்நிலையில் விடுதலைப் புலிகள் கடந்த மூன்றரை வருடத்திற்கு மேலாக போர் நிறுத்த உடன்படிக்கைக்கு அமைவாக கடைப்பிடித்த அமைதி தற்போது ஆபத்திலுள்ள போர்நிறுத்த உடன்பாடு என்பவற்றை கவனத்திற் கொண்டு சமாதான நகர்வினை அரசும் புதிய ஜனாதிபதியும் உத்வேகத்துடன் மேற்கொள்ள வேண்டும். மாறாக சிங்கள தரப்பு மீண்டும் ஒரு நிஜயுத்தத்தை திணிப்பார் களானால் அதனை எதிர்கொள்கின்ற வலிமை பன்மடங்காக தமிழர் தாயகம் பெற்றிருக்கின்றது.
அது நிச்சயம் தமிழீழ இலட்சியத்தை நனவாக்கி விடும். மாறாக சிங்கள தரப்பு சர்வதேச சமூகத்திடம் போரைத் திணிக்கப் போவதற்கான நியாயத்தை எந்தவடிவத்திலும் உணர்த்த முடியாது என்பது உண்மை!
http://www.battieezhanatham.com/weeklymatt...1/peravena.html

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>