11-18-2005, 07:29 AM
இராணுவத்துடன் சேர்ந்து திருடி வந்தவர் பொதுமக்களால் நையப்புடைப்பு பின்னர் உயிரிழந்தார்; யாழ்ப்பாணத்தில் சம்பவம்
(யாழ். அலுவலக நிருபர்)
யாழ்ப்பாணத்தில் நீண்டகாலமாக இராணுவத்துடன் சேர்ந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த நபர் ஒருவர் பொதுமக்களால் தாக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
யாழ் நகரப்பகுதியிலுள்ள ஐந்து சந்தியில் தேநீர் கடையொன்றில் உணவு அருந்திக் கொண்டிருந்தபோது குறித்த நபரை இளைஞர்கள் சிலர் அடையாளம் கண்டுள்ளனர். உடனடியாக அந்த நபரை பிடித்த இளைஞர்கள் அவரை தாக்கினர்.
அப்போது நீண்டகாலமாக யாழ்ப்பாணத்தில் இராணுவத்துடன் சேர்ந்து பல திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதை அந்த நபர் ஒப்புக்கொண்டõர்.
அந்தவேளை பொதுமக்கள் சிலரும் அந்த இடத்திற்கு வந்து குறித்த நபர் இராணுவத்துடன் சேர்ந்து பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறித் தாக்கினர்.
பலமாக தாக்கப்பட்ட நிலையில் மேற்படி திருடனை யாழ்.இந்துக் கல்லூரி மைதானத்திற்கு கொண்டு வந்து அங்கு கைவிட்டுச் சென்றுள்ளனர். பின்னர் அந்த நபர் உயிரிழந்துள்ளார்.
வீரகேசரி

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>