11-18-2005, 06:40 AM
தமிழீழ அபிவிருத்தியில் அக்கறை கொண்ட பேராசிரியர்கள் சிலர், அண்மையில் சுனாமி அனர்த்தத்தின் போது, கனேடிய மருத்துவர்களையும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களையும் தம்முடன் முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களுக்கு அழைத்து சென்று, தமிழீழம் பற்றிய அறிவை இவர்கள் மூலம் தாம் சார்ந்த கனேடிய பல்கலைக்கழக சமுதாயத்துக்கு வளர்த்தெடுத்தார்கள்.
இவர்களது பெரு முயற்சியின் பயனாக அரச மட்டத்தில் பல்கலைக்கழகங்களுக்கு ஆய்வுகளுக்காக ஒதுக்கப்படும் பணத்தில், அநர்த்த நிவாரண தீர்வுத்திட்டங்களை செயற்படுத்தி பார்க்கும் ஆய்வுகளுக்கும் பங்கு வழங்கப்பட்டு, குறிப்பாக சிறிலங்காவுக்கு என பெரும் தொகைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆய்வுகளின் பெயரால் நிவாரண திட்டங்களை தமிழீழத்தில் செயற்படுத்துவதும், ஒதுக்கபட்ட பணத்தில் பெறுமதிமிக்க இயந்திரங்களை தமிழீழத்துக்கு கொண்டு சென்று செயற்பட வைப்பதுமே இவர்களது திட்டமாகும்.
ஆய்வுகளுக்கு அரசு பகிரங்கமாக விண்ணப்பங்கள் கோரி, ஒரு குழுவை கொண்டு விண்ணப்பங்களை தெரிவு செய்வதுதான் அவர்களது முறையாகும். இவர்களும் திட்டமிட்டபடி விண்ணப்பங்கள் கோரப்பட்டவுடன் விண்ணப்பித்தார்கள். முதலாவது ஆய்வு மண்வள அபிவிருத்தி பற்றியது. அது பற்றிய அறிஞரான, அண்மையில் வன்னி சென்று ஒரு செயற்திட்டத்தை நிறைவேற்றிவிட்டு வந்த பேராசிரியர் ஒருவர், தனது விண்ணப்பத்தை சமர்ப்பிந்திருந்தார். அவருக்கு போட்டியாக, தென்பகுதியில் ஆய்வு செய்ய விரும்புவதாக வேறு ஒரு பேராசிரியரும் விண்ணப்பிந்திருந்தார். தென்பகுதி விண்ணப்பமே ஏற்றுக்கொள்ளப்பட்டு, பணம் இயந்திரங்கள் எல்லாம் சிறிலங்காவின் தென்பகுதிக்கு செல்ல இருக்கின்றன.
முற்றிலும் தமிழீழ ஆதரவாளரின் முயற்சியால் ஒதுக்கப்பட்ட பணம், சிறிலங்காவின் தென்பகுதிக்கு அனுப்படுகிறது. இவரது விண்ணப்பம் மறுக்கப்பட்டதற்கு காரணம், வட கிழக்கில் தொடரும் கொலைகளாகும். சிறிலங்காவினதோ அல்லது தமிழீழத்தினதோ, அல்லது இவர்களது கூட்டு நிர்வாகத்தினதோ பாதுகாப்பு, இந்த பிரதேசங்களில் போதுமானதாக இல்லை என்றும், கிளிநொச்சியில் பாதுகாப்பு இருந்தாலும், யாழ்ப்பாணத்தில் போதுமான பாதுகாப்பு இல்லாமல் ஆய்வு முயற்சியில் வடக்கில் பணத்தை செலவிட தயாராக இல்லை என்றும், இந்த கனேடிய அரசு அறிவித்து விட்டது.
அடுத்த சிறிலங்காவிற்கான ஒதுக்கீடு 5 மில்லியன் டொலர்கள். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறுவாழ்வு நிவாரணம் வழங்கும் திட்டம். அது குறித்த துறையில் ஆய்வாளாராக இருக்கும் ஒருவரை விரைவாக கண்டுபிடித்து தான் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் இதையும் மேற்படி காரணம் காட்டி தென்பகுதிக்கே அனுப்பி விடுவார்கள் போல தெரிகிறது.
யாழ்ப்பாணத்தில் கொலைகள் தொடரும்வரை, தமிழீழ ஆர்வலர்கள் தமது நிறுவனங்களில் சிறிலங்காவுக்கு பணஉதவி கோரினால், அது தென்பகுதிக்கு போவதை தடுக்க முடியாது போலவே தெரிகிறது.

''
'' [.423]
'' [.423]