11-18-2005, 01:56 AM
aathipan Wrote:வசம்பு நீங்கள் சொன்னது போல அரசு பஸ்களில் திருடர்கள் சாக்கிரதை என்று எழுதி உள்ளது. உண்மையில் அரசியல்வாதிகள் அதற்கும் எதிர்ப்புதெரிவித்து இருக்க வேண்டும். ஏன் என்றால் நாங்க தான் தமிழர்கள் ஆச்சே. எங்க தமிழ்நாட்டில எதுக்கு அப்படி எழுதவேண்டும். எங்களைத்திருடர்களாக பார்க்கிறது தமிழ்நாடு அரசு என சீறிப்பாய்ந்து இருக்க வேண்டும். தமிழன் கற்பு என்றதும் சண்டைக்குதயாராகிறான் ஏன் திருட்டு பட்டம் கொடுத்தால் ஏற்றுக்கொள்கிறான். அதை எழுதியவர்களை குஸ்புபோல நினைத்து ஏன் சண்டைக்கு போகவில்லை.
உண்மையில் பிரச்சனைக்கு காரணம் அரசியல்வாதிகள் வேறு ஒரு விடயத்தில் குஸ்புமேல் கடுப்பானதுதான். அதைத்தான் இங்கே காட்டுகிறார்கள். குஸ்பு அளவுக்கதிகமாக தங்கர்பச்சன் விடயத்தில் கோபங்கொண்டு மன்னிப்புக்கேள் என மரியாதைக்குறைவாக அவரை நடத்தியதும் தாங்கள்(நடிகைகள்) எல்லாம் கற்புக்கரசிகள் எனஅப்போது காட்டிக்கொண்டதும்தான் காரணம்.
அபிதனுகு வணக்கம்!
நீங்கள் குறிப்பிடுவது சிலாவேளை உங்கள் பார்வைக்கு சரியாக இருக்கலாம். ஆனால் குஸ்பு கூறிய கருத்திற்கு நீங்கள் கூறும் காரணமும் உதாரணமும் பொருத்தமற்று இருக்கின்றன. திருடர்கள் கவனம் என அரசு பேருந்துகளில் இருப்பதற்கும் தமிழ்நாட்டு அரசியல்த்தலைவர்கள் அதை எதிர்த்துப் போராடவேண்டும் என்பதற்கும் என்ன சம்மந்தம் இருக்கின்றது? குஸ்பு அவமானப் படுத்தியது தமிழ் பெண்களைத்தானே. அதனால்த்தான் தமிழ் தலைவர்கள் அதனை எதிர்த்து போராடுகின்றார்கள். அரசியல் வாதிகள் என்ற ஒரு சொல்லுக்குள் பலவிடயங்களை புறம்தள்ளிவிடாதீர்கள். அந்த தமிழ் அரசியல் வாதிகளில் பலருக்கு தமிழின் மீதும் தமிழரின்மீதும் அக்கறை இருக்கின்றதென்பதை புரிந்துகொள்ள முயலுங்கள். நேற்று நடிக்க வந்ததனால் குஸ்புவை உங்களுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் தமிழ் உணர்வாளர்கள் அப்படியானவர்கள் அல்லர். அவர்கள் உங்களின் எங்களின் தமிழுக்காக பாடுபடுபவர்கள். முடிந்தால் போற்றுங்கள் இல்லாது விடில் தூற்றாமலாவது -இருந்தாலே போதும்.
எயிட்சைப்பற்றிய அறிவுரை தமிழர்களுக்கு குஸ்ப்பு புகட்டித்தான் தெரிய வேண்டியதில்லை. அதற்கென பல விளிப்புணர்வு கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அவர்கள் கூட தமிழர்களை வம்பிற்கு இழுத்ததும் இல்லை இழுக்கவும் மாட்டார்கள்.

