Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இந்த மரத்தை தெரியுமா?
#1
<b>இந்த மரத்தை தெரியுமா?</b>

<img src='http://img272.imageshack.us/img272/3936/p94a8dz.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://img272.imageshack.us/img272/1647/p943as.jpg' border='0' alt='user posted image'>

<span style='color:blue'>அவள் விகடனில் மருத்துவ குணம் நிறைந்த
மரத்தை பற்றிய கட்டுரை படித்தேன்..
இந்த மரம் எங்கள் நாட்டில் உண்டா? யாராவது
கண்டிருக்கிறீர்களா?

கட்டுரை Arrow

<b>உதிரப் போக்குக்கு அருமருந்தான மூலிகை மரம்!</b>

சாதாரணமாக கிராமப்புறங்களில் வளர்ந்து கிடக்கும் நாவல் மரம் மாதிரிதான் இருக்கிறது, அந்த உதிரவேங்கை மரம்! பனை போன்ற உயரமோ, ஆல் போன்ற கட்டுமஸ்தோ இல்லாமல், கொஞ்சம் பெண்மை ஏந்தி, சுற்றிலும் ஏழெட்டு மரங்கள் தோழிப் பெண்கள் போல காவலுக்கு வீற்றிருக்க, ஒயிலாக நிற்கிற இந்த மரம்... அபூர்வமான ஒரு மூலிகை மரம்!

'அதிக உதிரப்போக்கால் அவதிப்படும் பெண்களுக்கு இந்த மரத்தின் பட்டை அருமருந்தாக இருக்கிறது. பட்டுக்கோட்டைக்கு அருகே, கீழக்காடு கிராமத்தில் உள்ள இந்த மரத்தை அந்த கிராமமே கட்டிக் காக்கிறது' என்கிற தகவல் கேட்டுத்தான், அடாத மழையையும் பொருட்படுத்தாமல் அங்கே போயிருந்தோம்.

ஊருக்குள் அடியெடுத்து வைத்ததும் எதிர்ப்பட்ட தாளமை என்கிற பாட்டியிடம் நாம் விசாரிக்கவும், உற்சாகமாக 'உதிரவேங்கை'யின் புகழ் பாடினார்.

''வயசுப் புள்ளைகளை இந்த உதிரப்போக்கு ரொம்ப வாதிச்சுடும். போக்கு அதிகமாகுறதால கை, காலெல்லாம் சடசடத்துப் போயி, உசுரைக்கூட எடுத்துரும். அதுக்குத் தான் இந்த உதிரவேங்கையோட பட்டை, கண்கண்ட மருந்து! இந்தப் பட்டையைக் கஷாயம் வச்சுக் குடிச்சா அடுத்த நிமிஷமே அணை கட்டிப் போட்ட மாதிரி போக்கு அடங்கிடும். பொண்ணுங்க கஷ்டத்தைப் போக்கறதால இதுக்கு 'அம்மாத்தா மரம்'னும் ஒரு பேர் இருக்கு!'' என்ற தாளமைப் பாட்டிதான் நம்மை அந்த மரம் இருக்கும் இடத்துக்கும் அழைத்துச் சென்றவர்.

இந்த மரத்துக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதற்காக 'ஊரில் யாரும் கால்நடை வளர்க்கக் கூடாது' என்று தடைகூடப் போட்டிருந்தார்களாம்.

''நான் இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்தப்ப, ஆட்டுக் குட்டிகளையும் ஓட்டிக்கிட்டு வந்தேன். ஆனா, இங்கே ஆடு, மாடு வளக்க தடை போட்டிருக்கிறதா சொன்னாங்க. 'கிராமத்தோட உசுரே விவசாயமும், ஆடு, மாடு வளக்குறதும்தானே. அதுக்கே தடையா?'னு விசாரிச்சப்பதான், 'முருகர் சாமி, மரமா மாறி நின்ன மண்ணு இது... இங்கே இருக்கிற உதிரவேங்கை மரம் தான் முருக மரம். அதை ஆடு, மாடு மேஞ்சிறக் கூடாதுனுதான் தடை போட்டதா' சொன்னாங்க!'' என்ற தாளமைப் பாட்டியிடம், ''அந்த மரத்தை மட்டும் வேலி போட்டு காப்பாற்றி இருக்கலாமே. ஆடு, மாடு வளர்க்க ஏன் தடை போடணும்?'' என்றோம்.

''அட, புரியாத புள்ளையா இருக்கியே. அது தன்னால வளர்ற மரம். விதை போட்டு, கன்னு வெச்செல்லாம் அதை வளர்க்க முடியாது. அது எங்கே வளரும்னு யாராலயும் கண்டுபிடிக்கவும் முடியாது. செடியா இருக்கறப்ப
எதுனு தெரியாம ஆடு, மாடுக மேய்ஞ்சிடக் கூடாதேனுதான் அந்தத் தடை!'' என்று பாட்டி விளக்கி முடிக்கவும், நம்மைச் சுற்றிக் கொண்டது ஒரு கூட்டம்.

''இந்த மரத்தை அரிவாளால லேசா கீறினோம்னா சிவப்பு கலர்ல அடர்த்தியா ரத்தம் கொப்புளிச்சு வரும்...'' என்று கூறிய சிதம்பரம் என்பவரை நாம் நம்பாமல் பார்க்கவும், கையில் இருந்த அரிவாளால் நம் கண் முன்னாலேயே மரத்தைக் கீறினார். அடுத்த விநாடி, துளித் துளியாக ரத்தம் போல் ஒரு திரவம் மரத் தில் இருந்து பெருக்கெடுக்கவும், அரண்டு போனோம்.

''சாணம் பூசினாத் தான் இந்தச் சாறு அடங்கும்'' என்றபடி, கீறப்பட்ட இடத்தில் சித்ரா என்ற பெண்மணி மாட்டுச் சாணத்தை வைக்கவும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்ட மாதிரி ரத்தம்(?) நின்றுவிட்டது.

உதிரவேங்கையின் பெருமை தெரிந்து, தேடி வருகிற வெளியூர் ஆட்களுக்கு, மரப்பட்டையை இலவசமாகவே தருகிறார்கள் இந்த மக்கள்.

''எந்தெந்த ஆபீசரெல்லாமோ இங்கே வந்து இந்த மரத்தை டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு, 'அற்புதமான மரம் இது. காவந்து பண்ணி வையுங்க'னு சொல்லிட்டுப் போறாங்க!'' என்ற சிதம்பரம், இந்த மரப்பட்டையால் குணமானவர்கள் பற்றிக் கதை கதையாகச் சொன்னார். ''போன வாரம்கூட ஒருத்தர் வந்து இந்தப் பட்டைகளை எடுத்துக்கிட்டுப் போனாரு. மறுநாளே போன் பண்ணி, 'எவ்வளவோ மருத்துவம் செஞ்சும் தீராத என் பொண்டாட்டியோட வேதனை, ஒரே நாள்ல தீர்ந்துடுச்சுய்யா'னு நா தழுதழுத்துச் சொன்னார்!'' என்றார், சிதம்பரம்.

ரத்தம் கொடுக்கும் வள்ளல்களைத் தெரியும்.. ரத்தப்போக்கைத் தடுக்கும் வள்ளலாகத் தெரிந்தது கீழக்காடு கிராமம்!

<b>''பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்!''</b>

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவரும், மூலிகை மருத்துவங்கள் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டவருமான டாக்டர் மோகன்தாஸை சந்தித்து உதிரவேங்கையின் மருத்துவக் குணம் குறித்துக் கேட்டோம்.

''உதிரவேங்கையை தாவரவியலாளர்கள் 'பீரோகார்பஸ் இண்டிகஸ்' என்கிறார்கள். உண்மை யிலேயே பெண்களுக்கு வரப்பிரசாதமான குணங்களைக் கொண்டதுதான் அந்த மரம். அதில் இருக்கும் 'ரெட் கிரிஸ்டல்'கள்தான் ரத்தம்போல் வரும் சாறுக்கு காரணம். அதோடு, டானிக் ஆசிட், அமினோ ஆசிட் என பல்வேறு சத்துப் பொருட்கள் அந்த மரத்தில் இருக்கின்றன. உதிரப்போக்குக்கு மட்டுமல்லாது, பெண்களுக்கு ஏற்படும் அடிவயிற்று வலி, தொண்டை வலி, வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கும் இது அற்புதமான மருந்து!'' என்றார், டாக்டர். மோகன்தாஸ்,

''ஜப்பானில் இதன் இலைகளைப் பயன்படுத்தி கேன்சரைத் தடுக்கும் ஆன்ட்டி ட்யூமரை தயாரிக்கிறார்கள். பிலிப்பைன்ஸின் தேசிய மரம் இதுதான். சிங்கப்பூரில் இந்த மரத்தைப் பயன்படுத்தித்தான் முடி கொட்டும் பிரச் னைக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றனவாம். இதில் நார்ச்சத்தும், செரிமான தூண்டுதலும் அதிகமிருப்பதால் சர்க்கரை வியாதியைத் தடுக்கும் சக்தி இதற்கு உண்டு.

இது உதிரத்தை உறைய வைப்பதால் மன்னர்கள் காலத்தில் வெட்டுக் காயங்களுக்கு இதைத்தான் மருந்தாகப் பயன்படுத்தி இருக்கிறார்கள். இந்த மரம் காலப்போக்கில் நம் மாநிலத்தில் எங்குமே இல்லாமல் போய் விட்டதாக சில மருத்துவ நூல்கள் சொல் கின்றன!'' என்று தகவல்களை கொட்டிய டாக்டர், ''எனக்கே கீழக்காடு போய் அந்த மரத்தைப் பார்க்கவேண்டும் போலிருக்கிறது'' என்றார், ஆவலோடு.</span>

vikatan.com
Reply


Messages In This Thread
இந்த மரத்தை தெரியுமா? - by vasisutha - 11-17-2005, 07:12 PM
[No subject] - by Rasikai - 11-17-2005, 07:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)