11-17-2005, 12:43 PM
சிறிலங்கா தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தது தமிழீழம்!! யாழில் மொத்தம் 1,012 வாக்குகளே பதிவு!!
[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 17:00 ஈழம்] [தாயக செய்தியாளர்]
சிறிலங்கா அரச தலைவருக்கான தேர்தலை தமிழர் தாயகம் இன்று ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து சிங்களத் தலைமைகளுக்கும் சர்வதேச சமூகத்துக்கும் கனத்த செய்தியை விடுத்துள்ளது.
சிறிலங்காவின் 5 ஆவது அரச தலைவர் தேர்தல் இன்று சிறிலங்காவிலும் தமிழீழத்தின் சிறிலங்கா அரசின் ஆக்கிரமிப்புப் பகுதிகளிலும் நடைபெற்றது.
தமிழர் தாயகத்தில் யாழ்ப்பாணத்தில் 1 வீதத்துக்கும் குறைவாகவும் மட்டக்களப்பு, வவுனியா, திருகோணமலை, மன்னார் பகுதிகளில் சராசரியாக 5 வீதம் முதல் 8 வீதம் வரையிலான வாக்குகள் மட்டுமே பதிவாகி உள்ளதாக முதல்நிலைச் செய்திகள் தெரிவிக்கின்றன.
யாழ். குடா நாட்டில் 1 வீதத்துக்கும் குறைவாக மொத்தமே 1,012 வாக்குகளே போடப்பட்ட வாக்குகளாக பதிவாகி உள்ளன.
யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்றுறை 137, வட்டுக்கோட்டை 117, காங்கேசன்துறை 132, மானிப்பாய் 73, கோப்பாய் 109, உடுப்பிட்டி 7, பருத்தித்துறை 8, சாவகச்சேரி 25, நல்லுர் 143, யாழ்ப்பாண நகர் 270, திருநெல்வேலி 43 என மொத்தமாக 1,012 வாக்குகள் பதிவாகி உள்ளன.
கிளிநொச்சியில் எவருமே வாக்களிக்கவில்லை.
யாழ்ப்பாணத்தில் இன்று துக்க நாள் கடைபிடிக்கப்பட்டதால் வழமையான பணிகள் போக்குவரத்துச் சேவைகள் எதுவுமே நடைபெறவில்லை. வீதிகள் வெறிச்சோடின. வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை.
கடைசி நிமிட கள்ள வாக்குகளையும் சேர்த்தால் கூட 2 ஆயிரம் வாக்குகள் தான் பதிவாகி இருக்கும் என்று கூறப்படுகிறது. யாழ் மாவட்டத்தின் மொத்த வாக்காளர்கள் 7 இலட்சம் பேர் என்று சிறிலங்கா அரச தரப்பு கூறுவது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் தமிழர் பிரதேசங்களில் 5 வீதமான வாக்குப் பதிவும் முஸ்லிம் பகுதிகளில் 40 வீதமான வாக்குப் பதிவும் நடந்துள்ளது. தமிழ், முஸ்லிம் மக்கள் கலந்துள்ளதால் இந்த வாக்கு வீதம் பதிவாகி உள்ளது.
மண்முனைத்துறை கொத்தணி வாக்களிப்பு நிலையத்தில் 10 வாக்குகளும், கறுத்தப்பாலம் கொத்தணி வாக்களிப்பு நிலையத்தில் 336 வாக்குகளும் மட்டும் பதிவாகியுள்ளன.
அம்பாறையில் திருக்கோவில் பிரதேசத்தில் 5 வீதம், ஆலையடிவேம்பில் 5 வீதம், கல்முனையில் 20 வீதம், பாண்டிருப்பில் 20 வீதம், காரைதீவில் 20 வீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.
அம்பாறையில் சிங்களவர், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருப்பதால் அங்கு வாக்கு வீதம் 50 வீதமாக உள்ளது.
மட்டக்களப்பின் தமிழீழ நிருவாகப் பகுதியில் 80 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள போதும் எவருமே கொத்தணி வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கவில்லை. இதனால் 89 கொத்தணி வாக்களிப்பு நிலையங்களிலும் வெறிச்சோடின.
சிறிலங்கா ஆக்கிரமிப்புப் பிரதேச தமிழர்களுக்காக அமைக்கப்பட்ட 265 வாக்களிப்பு நிலையங்களிலும் கூட 5 வீதமான மக்களே வாக்களித்துள்ளனர்.
மன்னாரில் மொத்தம் 6,000 பேர் வரையில் வாக்களித்துள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. இது மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 8 வீதமாகும். மன்னாரில் முஸ்லிம்களும் வசிப்பதால் இந்த வாக்குவீதம் இருப்பதாக தெரிகிறது.
மன்னாரில் மடு, உயிலங்குளம் உள்ளிட்ட 3 பகுதிகளில் கொத்தணி வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படிருந்தும் ஒருவர் கூட வாக்களிக்கச் செல்லவில்லை.
கடந்த காலங்களில் மன்னாரில் வாக்களிப்பு வீதம் 30-35 வீதமாக இருந்ததாகவும் எமது செய்தியாளர் சுட்டிக்காட்டுகிறார்.
வவுனியாவில் 10 வீதமானோரே வாக்களித்தனர் என்று மாவட்ட அரச தேர்தல் அதிகாரி சண்முகம் தெரிவித்துள்ளார்.
தமிழீழ நிருவாகப் பிரதேச மக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ஓமந்தை கொத்தணி வாக்களிப்பு நிலையம் கேட்பாரற்று தேர்தல் அதிகாரிகளை மட்டுமே கொண்டிருந்தது.
ஓமந்தை சோதனைச் சாவடி வழமை போல் திறக்கப்பட்டிருந்தது. தமிழீழ நிருவாகப் பிரதேசங்களிலிருந்து வரும் வாக்காளர்களை அழைத்துச் பேரூந்துகள் காத்திருந்தன. ஆனால் மக்கள் எவரும் வாக்களிக்கச் செல்லவில்லை.
மாறாக வழமையான பயணிகள் போக்குவரத்து நடைபெற்றது. கண்காணிப்பாளர்களும் குவிந்திருந்து நிலைமையை அவதானித்து வந்தனர்.
திருமலையின் மொத்தம் 30 வீதம் 40 வீதமான வாக்குகள் பதிவாகி இருக்கக் கூடும் என்று தெரிகிறது. இதில் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதமானது 5 முதல் 10 வீதமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
சிங்களவர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையினராக வசிப்பதால் 40 வீதமான வாக்களிப்பு பதிவாகி இருக்கிறது.
இதனிடையே தம்மை வாக்காளர்களாகக் கூட கருதாமல் தம்மீது இராணுவப் பொருளாதரத் தடை விதித்திருப்பதைக் கண்டித்து இன்று திருமலை மூதூரில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.
கட்டைபறிச்சான், ஈச்சிலம்பற்று சோதனைச் சாவடிகள் முன்பாக இந்த மூதூர் கிழக்குப் பிரதேச மக்கள் இந்த மறியல் போராட்டத்தை நடத்தினர். எம்மிடம் வாக்குகளை எதிர்பார்க்கிற சிங்கள அரசு, எமது வாழ்வாதார பொருள்களைக் கூட எடுத்துச் செல்லத் தடை விதிப்பதால் அவர்களுக்கு ஏன் நாம் வாக்களிக்க வேண்டும் என்றும் இந்த மறியல் போராட்டத்தில் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
போராட்டத்தின் முடிவில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
http://www.eelampage.com/?cn=21785

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>