11-17-2005, 10:41 AM
கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட இளைஞன் யாழ்ப்பாணத்தில் அடித்துக் கொலை
பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட இளைஞனொருவன் யாழ்ப்பாண இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் வைத்து நேற்று புதன்கிழமை காலை 8 மணியளவில் கும்பலொன்றால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். அரியாலையைச் சேர்ந்த எம்.தினேஸ் (வயது - 20) என்ற இளைஞனே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.
திருட்டுச் சம்பவம் ஒன்றில் தொடர்புடையவரெனக் கூறி இந்த இளைஞனைப் பிடித்து வந்த கும்பல் யாழ். இந்துக்கல்லூரியின் மைதானத்துக்கு அண்மையில் கட்டி வைத்து கடுமையாகத் தாக்கியதாகத் தெரிய வருகிறது.
இத்தாக்குதலால் படுமோசமாக காயமடைந்த இளைஞன் அவ்விடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அங்கு நின்றிருந்தவர்கள் தப்பியோடி விட்டனர். இந்த இளைஞன் யாழ்ப்பாணத்திலிடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவரெனவும் அண்மையிலேயே சிறையிலிருந்து பிணையில் வெளிவந்தவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த யாழ்.மாவட்ட மேலதிக நீதிவான் ஷ்ரீநிதிநந்தசேகரன் சடலத்தை பார்வையிட்டதுடன், இக்கொலைச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
சடலத்தை யாழ். வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரேத பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறும் அவர் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
தினக்குரல்

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>