11-17-2005, 09:39 AM
கிழக்கு மாகாணத்தில் முழு அளவிலான தேர்தல் புறக்கணிப்பு!!
[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 13:46 ஈழம்] [தாயக செய்தியாளர்]
கிழக்கு மாகாணத்தில் தேர்தல் வாக்களிப்பு தமிழ்ப் பிரதேசங்களில் மிகவும் மந்த நிலையில் இருப்பதாக இன்று வியாழக்கிழமை நண்பகல் வரை வெளியாகியுள்ள தேர்தல் திணைக்கள புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களைப் பொறுத்த வரை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து எந்தவொரு வாக்காளரும் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள கொத்தணி வாக்குச் சாவடிகளுக்கு செல்லாத காரணத்தினால் அந்த வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் அதிகாரிகள் மட்டுமே காணப்படுகின்றார்கள்.
சில வாக்களிப்பு நிலையங்களில் ஒரு சில வாக்குகளே பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் சில நிலையங்களில் ஒரு வாக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.
வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்குகளைப் பதிவு செய்துள்ள இந்த வாக்காளர்கள் ஏற்கனவே இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளில் தங்கியிருந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைப் பொறுத்த வரை சிங்கள மற்றும் முஸ்லிம் பிரதேசங்களில் வாக்களிப்பு வழமை போல் நடைபெற்று வருகின்றன.
இராணுவ ஆக்கிரமிப்புக்குட்பட்ட தமிழர் பகுதிகளில் வாக்களிப்பு மந்த நிலையில் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டததைப் பொறுத்த வரை முஸ்லிம் பகுதிகளில் சுறுசுறுப்பாக வாக்களிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளை தமிழ்ப் பகுதிகளில் வாக்களிப்பில் தேக்க நிலை காணப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிக்கும் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கும் இடையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் எவரும் வாக்களிக்க வரவில்லை என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
http://www.eelampage.com/?cn=21774

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>