11-17-2005, 09:37 AM
தமிழர் தாயகத்தில் சிங்கள அரச தலைவர் தேர்தல் முற்றாக புறக்கணிப்பு: 'ரொய்ட்டர்ஸ்'
[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 13:51 ஈழம்] [ம.சேரமான்]
சிறிலங்காவில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரச தலைவர் தேர்தலானது தமிழர் தாயகத்தில் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரொய்ட்டர்ஸ் செய்தி விவரம்:
சிறிலங்கா அரச தலைவர் தேர்தல் தொடர்பாக நாம் எதுவித அக்கறையும் கொள்ளவில்லை என்று விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் வாக்களிப்பு நிலைமைகளானது தமிழர் தாயாகத்தில் உத்தியோகப்பூர்வமற்ற முழு புறக்கணிப்பு என்பதையே வெளிப்படுத்துவதாக இருப்பதாக கண்காணிப்பாளர்களும் கொள்கை வகுப்பாளர்களும் தெரிவித்தனர்.
வடக்கு-கிழக்கில் விடுதலைப் புலிகளின் பிரதேச வாக்காளர்களுக்காக சிறிலங்கா அரசாங்கமானது வாக்களிப்பு நிலையங்களை அமைத்துள்ளது. வாக்களிப்போரை அழைத்து வருவதற்காக பேரூந்துகளையும் உழவு இயந்திரங்களையும் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
ஆனால் விடுதலைப் புலிகளின் பிரதேசத்திலிருந்து எந்த ஒரு வாக்காளரும் வாக்களிக்கச் செல்லவில்லை என்று ரொய்ட்டர்ஸ் செய்தியாளர்களும் சிறிலங்கா அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர்.
மட்டக்களப்பின் புறநகர்ப் பகுதியில் சோதனைச் சாவடி அருகே காத்திருந்த மீனவர் ஒருவர், எந்த ஒரு மக்களைம் வாக்களிக்கச் செல்லவிடமாட்டோம். நாங்கள் இந்தத் தேர்தலை வெறுக்கிறோம் என்றார்.
வாக்களிப்பைப் புறக்கணிக்கக் கோரும் துண்டுப்பிரசுரங்கள் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் ரணிலின் ஆதரவாளர்கள், கடைசி நிமிடத்தில் தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கையோடு உள்ளனர்.
யாழ்ப்பாண நகரமும் வெறிச்சோடி உள்ளது. வாக்களிப்பு நிலையங்கள் ஆளின்றி உள்ளன என்று ரொய்ட்டர்ஸ் செய்தியாளர் தெரிவிக்கிறார்
http://www.eelampage.com/?cn=21775

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>