Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நீங்களும் முன்றுபாருங்கள்
#1
காயின் (coin) போனில்
காசு போடாமல் பேசும் நூதன கும்பல்


அவனியாபுரம், நவ. 17-

ஒரு ரூபாய் நாணயம் போட்டு பேசும் காயின் போனில் காசு போடாமலேயே பேசும் நூதன கும்பல் அதிகரித்து வருகிறது.

திரும்பிய இடமெல்லாம்

நகரங்களிலும், கிராமங்களிலும் எந்த பக்கம் திரும்பினாலும், ஒருரூபாய் நாணயத்தை போட்டு பேசும் காயின் போன்கள் காணப்படுகின்றன. கடைகள், வீட்டு வாசல்களில் கூட இந்த போன்கள் வைக்கப்பட்டு உள்ளன.

இந்த போனில் பேசும் வாடிக்கையாளர்கள் பல்வேறு நூதன மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பு ரூபாய் நாணயத்தை போடுவதற்கு பதில் வாசரை நூலில் கட்டி பயன்படுத்தி பேசி வந்தனர்.

நூதன மோசடி

<span style='font-size:25pt;line-height:100%'><b>இப்போது புதிய மோசடியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது காயின் போனின் ரிசீவரை தனது செல்போனில் வைத்து தான் தொடர்புகொள்ள வேண்டிய போன் எண்களை அழுத்தினால் போதும், உடனே இணைப்பு கிடைத்துவிடும். இவ்வாறு காசு போடாமலேயே பலமணி நேரம் பேசலாம்.</b></span>

இந்த மோசடி பரவலாக நடந்து வருகிறது. காயின்போன் வைத்திருப்பவர்கள் மிகவும் உஷாராக இருந்து கண்காணித்து மோசடியை தடுக்க வேண்டும்.



தினதந்தி
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
நீங்களும் முன்றுபாருங்கள் - by Vaanampaadi - 11-17-2005, 09:20 AM
[No subject] - by விது - 11-17-2005, 10:12 AM
[No subject] - by vasisutha - 11-19-2005, 01:21 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)