12-01-2003, 04:08 PM
கலாச்சாரம் பற்றி கூறுவதானாலட அது பெரிய விடயம். நீங்கள் கலாச்hசிறீசாரம் என்று எதைக் கருதுகிறிர்களோ தெரியாது. குடும்பக்கட்டுப்பாடு, ஆண் பெண் உறவுமுறை இது தான் கலாச்சாரமா? கலாச்சாத்தின் மூலம் நமக்கு முதலில் மொழி, அதன் பண்புகள். தனிமனித நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் கலாச்சாரம் என்று நீங்கள் குழம்பினால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். சரி உங்கள் கலாச்சாரத்திறகே வந்தாலும் போயஸ் படம் பாத்தனீங்களோ? இதுக்குமேலை வேயை என்ன வேணும்? அங்கை ஒளிச்சு செய்யினம், இஞ்சை பப்பிளிக்கா நடத்தினம். அங்கை டேற்றிங், எல்லாம் பழசு, தயவுசெய்து ஒரு குப்பையை மறைக்க இன்னுமொரு குப்பையை கொண்டுவராதேங்Nகு. லண்டனிலை இரவு 10 மணிக்கு பிறகுதான் வன்முறை, மற்றும் வயது முதிந்தவைக்கான படங்கள் வருது. தென்னிந்திய ஊடகங்கள் பகலிலேயே போடுதுகள். நேற்று குருதிப்புனல் போட்டினம், பகல் 12.30. அது இங்கை 18 வயதினருக்கான படம். படத்தில் கமலும் கவுதமியிம் பகல் 12.30 பப்பிளிக்கா இங்கிலிஸ் கிஸ் குடுக்கினம். நீங்கள் வேணுமெண்டா இருந்த உங்கடை பிள்ளையுளுக்கு வன்முறையையும், இங்கிலீஸ் கிஸ்ஸையும் தமிழ் கலாச்சார முறைப்படி பகலிலை சொல்லிக்குடங்கோ. முதலலை நடைமுறை என்ன எண்டு பாருங்கோ. தமிழ் தொலைக்கட்சியே அல்லது அதன் தொடர்களோ வேண்டாம் எண்டு செல்லேல்லை. அது கட்டுப்படுத்தப்பட்டு நமது ஊடகம் மூலம் வரட்டும். கட்டுப்பாடு இல்லாது யாழ் குடா நாட்டில் எத்தினை அழி வந்தது பார்தனிPங்கள் தானே. சந்திக்கொரு மினி சினமா அதிலை பாலியல் படம். சந்திக்கு சந்தி விபச்சார விடுதி! நைட்கிளப்பெல்லாம் கூட தொடங்க இருந்தது.
இஞ்சை கலாச்சாரம் எண்டால் அதை முதலிலை மொழியிலை கொண்டுவாங்கோ! வெறுமனே கலாச்சார அடையாளங்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆளை ஆள் விழுங்குறதை விட்டுவிட்டு இளைஞர் சமுதாயத்திற்கு நல்ல வழிகாட்ட பாருங்கோ! அதை நம்மடை தொலைக்கட்சிகள் கொஞ்சமாவது செய்ய வெளிக்கிட்டுது. அதையும் நிர்மூலமாக்க நினைத்தால் செய்து முடியுங்கோ! அனால் ஒரு காலத்தில் உணர்வீர்கள். புலம் பெயர்ந்து வந்து வெற்றிகரமாக இருக்கும் அடுத்த சமூக அமைப்பை பார்த்து இனியாவது திருந்த கொஞ்சம் முயற்சிப்பம்.