11-17-2005, 08:29 AM
திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய நபருக்கு "பகிரங்க தண்டனை'
மரத்தில் கட்டிவைத்த இளைஞரை
பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்
யாழ்.நகர் அருகே நேற்றுச் சம்பவம்
யாழ்.குடாநாட்டில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புடை யவர் எனக் கூறப்படும் இளைஞர் ஒருவர் கட்டி வைக்கப்பட்டபின் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
அரியாலையைச் சேர்ந்த மைக்னேசி தினேஷ் (வயது20) என்ற இளைஞரே இவ் வாறு அடித்துக் கொல்லப்பட்டார்.
யாழ். இந்து ஆரம்பப் பாடசாலைப் பகுதி யில் நேற்றுக்காலை இச்சம்பவம் இடம்பெற் றது. பாடசாலை முன்பாக வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றில் இந்த இளைஞர் கட் டப்பட்டிருந்ததை அதிகாலையில் பொதுமக் கள் கண்டனர். அவர் அருகே வாசகங்கள் எழுதப்பட்ட அட்டை ஒன்று காணப்பட்டது.
கலாசாரம் பேணும் இளைஞர்கள், என்ற அடிக்குறிப்புடன் காணப்பட்ட அந்த அறிவித் தலில் ""யாழ். மக்களே! எமது போராளிகள் யாழ். மண்ணைவிட்டு வெளியேறிய பின்னர் திருட்டுச்சம்பவங்கள் நாளுக்கு நாள் அதி கரித்து வருவது அனைவரும் அறிந்ததே. இதனைத்தடுக்க யார் இருக்கிறார்கள் என்ற நிலையில் பட்டப் பகலிலும் திருட்டுச்சம்ப வங்கள் நடைபெறுகின்றன.
""தற்போது நடைபெற்று வரும் திருட்டுச் சம்பவங்களின் முக்கிய சூத்திரதாரிகள் சிக் குண்டுள்ளனர். இவர்கள் போலித்துப்பாக்கி களைக் காட்டித் தொலைபேசி மற்றும் நகை களை அபகரித்துச் செல்கின்றனர். இவர்களில் முக்கியமானவர்கள் எம்மிடம் சிக்குண்டுள் ளனர். இவர்களுக்கான தண்டனையை நீங் களே முடிவு செய்யுங்கள் '' என்று எழுதப் பட்டிருந்தது.
குறித்த இளைஞர் திருடினார் எனத் தெரி விக்கப்படும் இடங்களின் விவரங்களும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தன. ""இவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் தண்டனையில் இனி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது'' என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டிருந் தது. இளைஞர் கட்டப்பட்டிருந்த இடத்தில் நேற்றுக்காலை முதல் கூடிய பொது மக்கள், இளைஞரை பொல்லுகளால் தாக்கினர். சுமார் 3மணி நேரம் இளைஞர் தொடர்ச்சியாகத் தாக்கப்பட்டார். படுகாயமடைந்த அவர் இறுதியில் மயக்கமடைந்தார். அதற்கு முன் னர் அவர் தன்னைத் தாக்கவேண்டாம் எனக் கெஞ்சினார்.
இந்து ஆரம்பப் பாடசாலை முன்பாக இருந்து காலை 9மணியளவில் பொது மக்க ளால் அகற்றப்பட்ட இளைஞர், குறுக்கே தடி யொன்று கொடுத்து கைகள் கட்டப்பட்ட நிலையில், அருகில் உள்ள யாழ். இந்துக் கல் லூரி மைதானத்தில் இருந்த கூடைப் பந்தாட் டக் கம்பத்தில் கயிற்றில் தொங்கவிடப் பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் இளைஞர் உயிரிழந்து விட்டார் என சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித் தனர்.
காலையில், இளைஞர் கட்டி வைத்துத் தாக்கப்பட்ட சமயம் அவரது தாயார் அங்கே வந்து தனது மகனை விட்டுவிடுமாறு கெஞ் சினார். எனினும் அவரை விரட்டி விட்ட பொது மக்கள் இளைஞரை மூர்க்கமாகத் தாக்கினர். உயிரிழந்த இளைஞனின் சதோதரியும் பின்னர் அங்கு வந்து தம்பியின் சடலத்தின் மீது வீழ்ந்து கதறியழுதார்.
காலை 10மணியளவில் இராணுவத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.
தனது மகன் நேற்றுமுன்தினம் பகல் மோட் டார் சைக்கிளில் வந்த இளைஞர்கள் சிலரால் பிடித்துச் செல்லப்பட்டார் எனவும்
அதன் பின்னர் அவர் கட்டி வைத்துத் தாக்கப்படுகிறார் என காலையில் தனக்குத் தகவல் கிடைத்தது என்றும் இளைஞரது தாயார் தெரிவித்தார். இளைஞனின் உடலில் பல அடி காயங்கள் காணப்பட்டன என வைத் தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தலை மயிர் ஒழுங்கற்ற முறையில் ஒட்டவெட்டப் பட்டிருந்தது.
நேற்று பிற்பகல் யாழ்.மாவட்ட மேலதிக நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் சடலத் தைப் பார்வையிட்டு விசாரணைகளை மேற் கொண்டார். பின்னர் யாழ்.பொலீஸாரால் சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.
அடித்துக் கொல்லப்பட்டவரான தினேஷ், திருட்டுக் குற்றச்சாட்டின் கீழ் முன்னர் யாழ். சிறைச்சாலை யில் தடுத்து வைக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப் பட்டது.
இதேவேளை
அச்சுவேலி ஈ.பி.டி.பி. அலுவலகத்துக்கு அண்மையிலும் நேற்றிரவு 8.30 மணியள வில் குண்டொன்று வெடித்தது. இதில் பொது மகன் ஒருவர் காயமடைந்து அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றார் என்று தெரிவிக்கப்பட்டது.
நெல்லியடியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. அலுவலகம் மீதும், பொலீஸ் நிலையத்தின் மீதும் நேற்றிரவு 10.50 மணியளவில் இனந் தெரியாதோர் துப்பாக்கிப் பிரயோகம் செய் ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதேசமயம் நேற்றிரவு 10.55 மணியள வில் மந்திகை, புலோலியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. அலுவலகம் மீது கைக்குண்டு வீசப்பட்டதாகவும், அது வெடிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
அல்வாய் நாவலடியில் உள்ள இராணுவ முகாம் மீதும் நேற்றிரவு 11.10 மணியளவில் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிய வருகிறது.
Uthayan

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>