11-17-2005, 04:39 AM
யாழ் மாவட்டத்தில் பரவலாக குண்டுத் தாக்குதல்கள்
[வியாழக்கிழமை, 17 நவம்பர் 2005, 09:04 ஈழம்] [யாழ். நிருபர்]
தேர்தல் நடைபெறுவதற்கு முதல்நாள் இரவு, பரவலாக பல இடங்களிலும் கிரனைட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
தேர்தல் சாவடிகளில் கள்ள வாக்குகள் இடுவதற்கு தயார் படுத்திக்கொண்டிருந்த ஈ.பி.டி.பி. முகவர் நிலையங்களைக் குறிவைத்தே இந்த கிரனைட் வீச்சுக்கள் நடாத்தப்பட்டுள்ளன.
சுhவகச்சேரி, மானிப்பாய், அச்சுவெலி, பருத்தித்துறை, மல்லாகம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி. முகவர் நிலையங்களில், இராணுவத்தினரின் உதவியுடன் கள்ளவாக்குகளைப் போடுவதற்கான திட்டமிடல் முடுக்கி விடப்பட்டுள்ளது.
வடக்கில் மக்கள் ஆதரவு தமக்கு இருப்பதாகக் காட்டுவதற்கான முயற்சியாக, ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் இந்த சதித்திட்டமிடலில் இறங்கியுள்ளனர். ஈ.பி.டி.பி. முகாமொன்றின்மீது வீசப்பட்ட ஒரு கிரனைட்டில், ஒரு இராணுவச் சிப்பாய் படுகாயமடைந்திருப்பது, இந்த சதிவேலையை அம்பலப்படுத்தியுள்ளது.
அனைத்து ஈ.பி.டி.பி. அலுவலகங்களுக்கும் கூடுதல் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், ஈ.பி.டி.பி. உறுப்பினர்களுடன் ஒத்துழைத்து செயற்படும்படி பொலிசாருக்கு உயர்மட்ட உத்தரவும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஓவ்வொரு தேர்தல் வாக்குச்சாவடியிலும் குறைந்தது 40 பொலிசாராவது கடமையில் இருப்பார்கள் என்றும், மேலதிகமாக உயர்மட்ட விசேட பணிப்பில் இறுதிநேரத்தில் 10 பொலிசார் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த மேலதிக 10 பொலிசார், ஈ.பி.டி.பி. போன்ற விரோதக் குழுக்களின் கள்ளவாக்கு விடயங்களில் உதவுவதற்கு ஏதுவாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஈ.பி.டி.பி. உறுப்பினர் என்று தன்னை அடையாளப் படுத்தியதும், அப்பகுதியில் வலிந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்து பதட்டநிலையைத் தோற்றுவித்து, ஈ.பி.டி.பி.யினர் வாக்குமொசடியில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுப்பதே இவர்களது திட்டமாக இருக்கிறது.
ஜே.வி.பி. மற்றும் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான இராணுவ மற்றும் பொலிஸ் தரப்பினர், இத்தகைய ஊழல்களில் ஈடுபட விசேட பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக இரகசியத் தகவல்கள் கசிந்துள்ளன.

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>