12-01-2003, 03:34 PM
உங்கள் கருத்துக்கு நன்றி. தொலைக்காட்சிகளில் போட்டி இருக்கலாம். ஆனால் புலம்பெயர் தொலைக்காட்சிளை விழுங்கும் விதத்தில் இந்த தொலைக்கட்சிகள் நடந்தமை உங்களுக்கு தெரியுமா? நீங்கள் இந்த தொலைக்காட்சிகளுக்கு அடிமையாக இருக்கலாம். ஆனால் இந்த தொலைக்காட்சிகள் வேண்டுமென்றே சில தொடர்களை நமது தொடருக்கு முதலில் விற்று விட்டு பின்னர் அரை நடுவில் நட்டாற்றில் விட்டது தெரியுமா? போட்ட வேணும் தான் அது ஆக்கிரமிப்பாக மாறுவதையே நம் கண்டிக்கிறோம். கூச்சல் இடுகிறோம். இந்த தொலைக் காட்சிகள் மூலம் நமது குழந்தைகள் ஆங்கிலிஸ் தமிழ் கதைப்பது உங்களுக்கு பிரச்சனையில்லாமல் இருக்கலாம். ஆனால் நமது தொலைக்காட்சிகளை அது அழிப்பதை நாம் பார்த்து சும்மாயருக்க முடியாது. பிரித்தானியாவல் தொலைக்காட்சியை கட்டுப்படுத்தும் நிறுவனம் செய்மதி அல்லாத தொலைக்காட்சிக்கு 5 அலைவரிசையை மட்டும் வைத்திருக்கிறது. தனது கலாச்சார நிகழ்ச்சிகளையும் தனது தனித்துவதை;தையும் தக்க வைக்க அதுவே இப்படி கட்டுபாடு விதிக்கையில் தென்னிந்திய குப்பைகளை இங்கே கொட்டாதீர்;கள் என குரைக்க நமக்கு உரிமையுண்டு. நீங்கள் வேண்டுமென்றால் இந்த குப்பைக்கள் கிடந்து நாறுங்கள், நாம் கூச்சலிட்டாவது நமது எதிர்ப்பை தெரிவிப்போம். அது நமது உரிமை! இது வியாபாரமல்ல நமது கலாச்சாரத்தை அழித்தொழிக்க ஏவப்படும் ஏவகணைகள். கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணைகள் தற்போது மலர்மாலையாக இருக்கலாம். அது ஒரு நாள் உங்களை சுடும் போது நிச்சயம் உணர்வீர்கள்.

