Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
குஷ்பு மீண்டும் வம்பு: துணைக்கு சுகாசினி
#24
குஷ்புவுக்கு நிபந்தனை ஜாமீன்: செருப்பு வீச்சு போலீஸ் தடியடி
நவம்பர் 16, 2005
மேட்டூர்:

<img src='http://thatstamil.indiainfo.com/images30/optimized/kushboo3a-300.jpg' border='0' alt='user posted image'>இன்று சரணடைய வந்த குஷ்பு

மேட்டூர் நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி இல்லாததால் திரும்பிச் சென்ற குஷ்பு இன்று முறைப்படி சரணடைந்தார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.

நீதிமன்றத்தின் வெளியே குஷ்புவுக்கு எதிராக கோஷமிட்ட பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேட்டூர் இரண்டாவது நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் பணி காரணமாக சேலம் சென்றுவிட்டதால் குஷ்புவால் நேற்று சரணடைய முடியவில்லை. இதையடுத்து இன்று காலை 10.20 மணிக்கு மீண்டும் நீதிமன்றம் வந்த குஷ்பு நீதிபதியிடம் சரணடைந்தார்.

குஷ்புவின் வருகைøயொட்டி ஏராளமான பொது மக்களும், பாமக, விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பல்வேறு இயக்கத்தினரும் அங்கு கூடியிருந்தனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்குள் சென்ற குஷ்புவிற்கு நீதிபதி ஸ்ரீதரன் நிபந்தனை ஜாமீன் வழங்கினார். அதன்படி பத்திரிக்கைகள், டிவி, நிருபர்களுக்கு குஷ்பு பேட்டியளிக்கக் கூடாது, ரூ. 5,000 பிணைத் தொகையாகக் கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

<img src='http://thatstamil.indiainfo.com/images30/optimized/kushbu-450.jpg' border='0' alt='user posted image'>நேற்று ஆஜரான குஷ்பு

இந்த நிபந்தனையை ஏற்று ரூ. 5,000த்தை குஷ்புவின் சகோதரர் நீதிமன்றத்தில் செலுத்தினார்.

இதையடுத்து வழக்கை வரும் டிசம்பர் 16ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். முன்னதாக அவருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த முருகனின் வழக்கறிஞர், குஷ்புவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதாடினார். ஆனால், அதை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

நீதிமன்றத்துக்குள் குஷ்பு இருந்தபோது வெளியில் கூடியிருந்த பாமக, விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இந் நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குஷ்பு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது குஷ்பு எதிர்ப்பு கோஷம் வலுவானது.

இதைத் தொடர்ந்து காருக்குள் தாவி ஏறினார் குஷ்பு. அப்போது அவர் மீது சிலர் செருப்புகளை வீசினர். ஆனால், அதற்குள் குஷ்பு காருக்குள் போய்விட்டதால் செருப்புகள் கார் மீது விழுந்தன.
<img src='http://thatstamil.indiainfo.com/images30/optimized/mettur11-300.jpg' border='0' alt='user posted image'>
குஷ்புவை 'வரவேற்கும்' செருப்புகள்

குஷ்புவுக்கு பாதுகாப்பு அளிக்க ஸ்டண்ட் நடிகர் விஸ்வநாத் தலைமையில் ஏராளமான வாட்ட, சாட்டமான ஆசாமிகளும் வந்திருந்தனர்.

குஷ்புவை கைது செய்யாத போலீஸ்:

நேற்று குஷ்பு நீதிமன்றத்தில் ஆஜரானாலும், நீதிபதி இல்லாததால் அவர் முறைப்படி சரணடையாததால் அவரை போலீசார் கைது செய்திருக்க வேண்டும். என்றாலும், அவரை போலீசார் கைது செய்யவில்லை. அதற்கான காரணமாக மேட்டூர் போலீசார் கூறியதாவது:

குஷ்புவைக் கைது செய்வதற்கு மேட்டூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட் உத்தரவு சென்னை போலீசாரிடம் தான் உள்ளது. இதனால் கைது உத்தரவை அமலாக்க வேண்டியது சென்னை போலீசார். இதனால் தான் குஷ்புவை எங்களால் கைது செய்ய முடியவில்லை என்றனர்.



இதற்கிடையே நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் குஷ்புவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தபோது அரசுத் தரப்பில் (போலீஸ் தரப்பு) ஆஜரான வழக்கறிஞர் பேசுகையில், குஷ்புவைக் கைது செய்ய அவரது வீட்டுக்கு சென்னை போலீசார் சென்றனர்.

ஆனால், அவர் அங்கு இல்லை. இதனால் அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்துத் தேடி வருகிறோம் என்றார்.

தனிப்படை அமைத்து குஷ்புவைத் தேடுவதாகச் சொன்னாலும் மேட்டூர் நீதிமன்றத்துக்கு வந்த குஷ்புவுக்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவரைப் பிடிக்க சென்னை போலீசுக்கு நீதிமன்றம் வாரண்ட் அனுப்பியிருப்பது தெரிந்தும் அவரைக் கைது செய்யாமல் நல்லபடியாக பாதுகாப்புக் கொடுத்து பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்தனர் மேட்டூர் போலீசார்.

இதற்கிடையே மேட்டூர் நீதிமன்ற பிடிவாரண்டுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் குஷ்பு தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வெளியாவதாக இருந்தது. ஆனால், தனக்கு மேட்டூர் நீதிமன்றமே நிபந்தனை ஜாமீன் வழங்கிவிட்டதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை இன்று அவர் வாபஸ் பெற்றுக் கொண்டார்.

Thanks to
Thatstamil.com

[size=18][b]" "
Reply


Messages In This Thread
[No subject] - by தூயா - 11-10-2005, 12:10 PM
[No subject] - by Vaanampaadi - 11-10-2005, 03:47 PM
[No subject] - by Danklas - 11-10-2005, 04:03 PM
[No subject] - by tamilini - 11-10-2005, 06:13 PM
[No subject] - by shanmuhi - 11-10-2005, 06:44 PM
[No subject] - by cannon - 11-10-2005, 07:37 PM
[No subject] - by Birundan - 11-10-2005, 07:52 PM
[No subject] - by வினித் - 11-12-2005, 05:33 PM
[No subject] - by Mathuran - 11-13-2005, 12:09 PM
[No subject] - by Vishnu - 11-13-2005, 12:38 PM
[No subject] - by tamilini - 11-13-2005, 03:53 PM
[No subject] - by Mathuran - 11-13-2005, 04:16 PM
[No subject] - by Vasampu - 11-13-2005, 04:57 PM
[No subject] - by adithadi - 11-13-2005, 05:50 PM
[No subject] - by Vaanampaadi - 11-14-2005, 07:33 AM
[No subject] - by Vaanampaadi - 11-14-2005, 07:38 AM
[No subject] - by வியாசன் - 11-14-2005, 10:07 AM
[No subject] - by aswini2005 - 11-14-2005, 10:16 AM
[No subject] - by Vaanampaadi - 11-15-2005, 09:11 AM
[No subject] - by Vaanampaadi - 11-15-2005, 04:32 PM
[No subject] - by Vasampu - 11-15-2005, 08:49 PM
[No subject] - by Nilavan. - 11-16-2005, 07:40 PM
[No subject] - by aathipan - 11-16-2005, 09:31 PM
[No subject] - by Vasampu - 11-16-2005, 09:52 PM
[No subject] - by aathipan - 11-17-2005, 08:29 AM
[No subject] - by jeya - 11-17-2005, 10:51 AM
[No subject] - by இவோன் - 11-17-2005, 11:08 AM
[No subject] - by aathipan - 11-17-2005, 11:35 AM
[No subject] - by Birundan - 11-17-2005, 11:47 AM
[No subject] - by aathipan - 11-17-2005, 12:04 PM
[No subject] - by வினித் - 11-17-2005, 12:23 PM
[No subject] - by aathipan - 11-17-2005, 12:44 PM
[No subject] - by Nithya - 11-17-2005, 12:49 PM
[No subject] - by aathipan - 11-17-2005, 01:14 PM
[No subject] - by Vasampu - 11-17-2005, 01:15 PM
[No subject] - by Vasampu - 11-17-2005, 01:38 PM
[No subject] - by Birundan - 11-17-2005, 01:49 PM
[No subject] - by வினித் - 11-17-2005, 03:54 PM
[No subject] - by Vasampu - 11-17-2005, 04:05 PM
[No subject] - by aathipan - 11-17-2005, 09:27 PM
[No subject] - by Vasampu - 11-17-2005, 11:25 PM
[No subject] - by Mathuran - 11-18-2005, 01:56 AM
[No subject] - by aathipan - 11-18-2005, 07:02 AM
[No subject] - by Vasampu - 11-18-2005, 10:09 AM
[No subject] - by Danklas - 11-18-2005, 10:27 AM
[No subject] - by Danklas - 11-18-2005, 10:32 AM
[No subject] - by Vasampu - 11-18-2005, 12:11 PM
[No subject] - by வினித் - 11-18-2005, 03:01 PM
[No subject] - by aathipan - 11-18-2005, 03:10 PM
[No subject] - by Vasampu - 11-18-2005, 03:23 PM
[No subject] - by வினித் - 11-18-2005, 03:27 PM
[No subject] - by Vasampu - 11-18-2005, 03:49 PM
[No subject] - by அருவி - 11-18-2005, 03:54 PM
[No subject] - by aswini2005 - 11-18-2005, 08:15 PM
[No subject] - by Vaanampaadi - 11-19-2005, 11:53 AM
[No subject] - by narathar - 11-20-2005, 01:03 PM
[No subject] - by Vasampu - 11-20-2005, 01:35 PM
[No subject] - by Birundan - 11-20-2005, 02:40 PM
[No subject] - by aathipan - 11-20-2005, 09:20 PM
[No subject] - by Vasampu - 11-21-2005, 01:48 AM
[No subject] - by aathipan - 11-21-2005, 05:08 AM
[No subject] - by வியாசன் - 11-21-2005, 10:31 AM
[No subject] - by Vasampu - 11-21-2005, 01:15 PM
[No subject] - by வியாசன் - 11-21-2005, 01:24 PM
[No subject] - by Vasampu - 11-21-2005, 02:10 PM
[No subject] - by தூயவன் - 11-21-2005, 02:14 PM
[No subject] - by Vasampu - 11-21-2005, 02:28 PM
[No subject] - by தூயவன் - 11-21-2005, 02:32 PM
[No subject] - by Vasampu - 11-21-2005, 02:38 PM
[No subject] - by aathipan - 11-22-2005, 07:29 AM
[No subject] - by Vaanampaadi - 11-23-2005, 05:23 PM
[No subject] - by tamilini - 11-30-2005, 07:12 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)