Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கப்பல் தகர்ப்பு.......
#4
14.06.2003
அரசியல்துறை
கிளிசொச்சி.

பத்திரிகைச் செய்தி

14.06.2003 இன்று அதிகாலை முல்லைத்தீவிலிருந்து 265 கடல் மையிலில் (1147N.8431E) சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த எமது எண்ணெய்த் தாங்கிக் கப்பலான MT Shoshin சிறிலங்கா கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக்கப்பல்கள் வழிமறித்தன. சிறிங்காக் கடற்படையின் ஆழ்கடல் ரோந்;துக் கப்பல்களின் அறிவுறுத்தல்களுக்கமைய காலை 7.00 மணியளவில் எமது கப்பல் சிறிலங்கா கடற்படையினரால் பரிசோதிக்கப்படுவதற்கு எமது கப்பலின் கப்டனால் அனுமதிக்கப்பட்டது. இச்சம்பவம் சர்வதேசக் கடற்பரப்பில் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை காலை 7 மணியளவில் எமது சமாதான செயலகத்தினர் இச்சம்பவம் பற்றி உடனடியாகவே இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவிற்கு முறைப்பாடு செய்தனர். காலை 7.30 மணியளவில் எமது கப்பல் மீது P701, P330, p332, P341 மற்றும் P340 ஆகிய இலக்கங்கள் கொண்ட இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் ஆயிரம் மீற்றர் து}ரத்திற்கு நெருங்கி வந்து எமது கலம்மீது திடீர் தாக்குதலை மேற்கொண்டன. சில நிமிட தாக்குதலின் பின்னர் எமது கப்பலின் மாலுமிகளை உயிர்காப்புப் படகுமூலம் தமது கடற்கலத்திற்கு வருமாறு கட்டளையிட்டனர். எமக்கு இந்த அறிவித்தலைத் தெரிவித்த பின்னர் உயிர்காப்புப் படகிலேறிய எமது மாலுமிகள் சிறிலங்காக் கடற்படைக் கலத்திற்குச் சென்றனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கண்காணிப்புக் குழுவினருக்கு உடனடியாக தகவல் கொடுத்த விடுதலைப் புலிகள் குறிப்பிட்ட கடல் பிரதேசத்திற்கு கண்காணிப்புக் குழுவினரைச் சென்று நிலமையை உடன் ஆராயுமாறும்; கேட்டுக்கொண்டனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட எமது போராளிகளுக்கு எதுவித தீங்கும் ஏற்படாதிருக்க கண்காணிப்புக் குழுவினரே ஏற்ற நடவடிக்கைகளை எடுத்து அப்போராளிகளைப் பாதுகாக்கவேண்டும் என்பதையும் விடுதலைப் புலிகள் இன்று காலையில் கண்காணிப்புக் குழுவிற்குத் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் இரண்டு கண்காணிப்பாளர்களை ஏற்றியவாறு சென்ற இலங்கைக் கடற்படையின் டோறாப் படகு கரையிலிருந்து 110 கடல்மைல் தொலைவில் உள்ள ஓரிடத்தைக் காட்டி இப்பகுதியில் தான் விடுதலைப்புலிகளின் கலம் மூழ்கியது என கண்காணிப்புக் குழுவினருக்குக் கூறியுள்ளனர். ஆனால், குறிப்பிட்ட பகுதியில் புலிகளின் கலம் மூழ்கியமைக்கான எந்த ஆதாரமும் இருக்கவில்லை. இதனைத் தொடந்து விடுதலைப் புலிகள் கரையில் இருந்து 266 கடல்மைல் தொலைவில்; புலிகளின் கலம் மூழ்கடிக்கப்பட்ட பிரதேசத்தின் துல்லியமான இடத்தைக் கண்காணிப்புக் குழுவினருக்குத் தெரிவித்தனர். பின்னர், விடுதலைப்புலிகளால் சுட்டிக்காட்டப்பட்ட இடத்திற்குச் சென்று நிலைமையை ஆராய்வதற்கு இரு கண்காணிப்பாளர்கள் அனுப்பப்பட்டனர். சர்வதேச கடற்பரப்பில், அதுவும் 266 கடல்மைல் தொலைவில் இடம்பெற்ற இச்சம்பவத்தைத் தமது கடலாதிக்கப் பிரதேசத்தில் தான் இ;டம்பெற்றது என போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவையும் ஏனையோரையும் நம்பவைக்கும் நோக்குடனேயே கடற்படையினர் 110 கடல்மைல் தொலைவில் உள்ள ஓரிடத்தை கண்காணிப்புக் குழுவின் கடற் கண்காணிப்பாளர்களுக்குச் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், இலங்கைக் கடற்படையினர் விடுதலைப்புலிகளின் கலத்தைத் தாக்கி மூழ்கடித்தபோது தமது உயிரைக் காக்கவென உயிர்காப்புப் படகுகளில் கடற்படைக் கலத்திற்குச் சென்ற எமது போராளிகளை கடற்படையினரே கைது செய்திருந்தனர். ஆனால், புலிகளின் கலம் தாக்கப்பட்டபோது உயிர்தப்பிய எவரையும் தாம் கைதுசெய்யவில்லை என இலங்கைக் கடற்படையினர் கண்காணிப்புக் குழுவினருக்குத் தெரிவித்துள்ளனர்.

கரையிலிருந்து 266 கடல்மைல் தொலைவில், சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து கடற்படையினர், எமது கலத்தைத் தாக்கி மூழ்கடித்தமையானது ஓர் அப்பட்டமான யுத்த நிறுத்த மீறல் நடவடிக்கை என்பதுடன், எமது போராளிகளின் உயிர்களுக்கு ஏதாவது ஆபத்து நேருமாயின் அதற்குரிய முழுப் பொறுப்பையும் கடற்படையினரே ஏற்க வேண்டும் எனவும் அத்துடன் அது பாரிய பின் விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதொன்றெனவும் விடுதலைப்புலிகள் கண்காணிப்புக்குழுவிடம் தெரிவித்துள்ளனர்.
Reply


Messages In This Thread
[No subject] - by Guest - 06-14-2003, 04:27 PM
[No subject] - by sethu - 06-14-2003, 07:23 PM
[No subject] - by Kanani - 06-14-2003, 07:45 PM
[No subject] - by Kanani - 06-14-2003, 08:07 PM
[No subject] - by Paranee - 06-16-2003, 05:31 AM
[No subject] - by GMathivathanan - 06-29-2003, 11:37 PM
[No subject] - by GMathivathanan - 06-29-2003, 11:44 PM
[No subject] - by sethu - 06-30-2003, 01:03 PM
[No subject] - by GMathivathanan - 06-30-2003, 01:43 PM
[No subject] - by sethu - 06-30-2003, 02:03 PM
[No subject] - by GMathivathanan - 06-30-2003, 02:25 PM
[No subject] - by sethu - 06-30-2003, 05:28 PM
[No subject] - by P.S.Seelan - 07-01-2003, 12:48 PM
[No subject] - by GMathivathanan - 07-01-2003, 12:54 PM
[No subject] - by P.S.Seelan - 07-01-2003, 12:59 PM
[No subject] - by sethu - 07-01-2003, 01:02 PM
[No subject] - by GMathivathanan - 07-01-2003, 01:45 PM
[No subject] - by P.S.Seelan - 07-02-2003, 12:39 PM
[No subject] - by GMathivathanan - 07-02-2003, 02:36 PM
[No subject] - by S.Malaravan - 07-02-2003, 06:23 PM
[No subject] - by GMathivathanan - 07-02-2003, 09:14 PM
[No subject] - by P.S.Seelan - 07-03-2003, 01:00 PM
[No subject] - by sethu - 07-03-2003, 06:18 PM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 12:54 AM
[No subject] - by sethu - 07-04-2003, 08:37 AM
[No subject] - by S.Malaravan - 07-04-2003, 09:23 PM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 09:31 PM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 09:33 PM
[No subject] - by sethu - 07-05-2003, 08:21 AM
[No subject] - by GMathivathanan - 07-05-2003, 09:55 AM
[No subject] - by sethu - 07-05-2003, 11:49 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)