12-01-2003, 02:01 PM
தென் இந்திய தொலைக்காட்சிகள் நமக்கு எதிரிகள் அல்ல, ஆனால் அழையா விருந்தாளிகள், அல்லது ஆக்கிரமிப்பாளர்கள். சினிமாவில் இன்று ஆக்கிரமித்திருக்கும் அவர்கள் தொலைக்காட்சியையும் ஆக்கிரமிப்ப நினைப்பதற்கு நாம் ஒத்துப்போக கூடாது. இன்று முதல் சந்தா அறிமுகமாக்கும் சன்ரீவிக்க் எதிரான பிரச்சாரத்தை நாம் தனிப்பட்ட முறையில் செய்ய வேண்டும். தொடர்களை பார்க்கத்தானே நம்மவர்கள் விழுந்தடித்து சந்தா செலுத்த தயாராகிறார்கள். அந்த தொடர்களை வீடீயோக்கள் மூலம் கொஞ்சம் தாமதமாக குறைந்த விலையில் பாரக்கலாம் தானே! இந்திய தொலைக்காட்சி சந்தா வேண்டாம் என்ற சுலோகத்துடன் வரத்தகர்களும் இந்த தொலைக்காட்சிக்கு விளம்பரம் கொடுப்பதை (ஐரோப்பிய வர்த்தகர்கள்) நினைத்தும் பாரக்க கூடாது. அண்மையில் ஒரு வர்த்தகர் இவர்களை அணுகியதாகவும் பல இலட்சங்கள் கேட்கவே ஆள் மூச்சுக்காட்டவே இல்லலையாம். எனவே சந்தா வரவில்லை எண்டதும் புதிய தொழிலி நுட்பத்துடன் ஐரோப்பாவிற்கு மட்டுமான வரத்தக விளம்பரம் செய்யும் திட்டம் இந்த தொலைக்காடசிக்கு உண்டு எனவே அதிலும் நாம் கவனமாக இருக்க வேண்டும். நமது இரண்டு தொலைக்காடசியும் ஒரு ஒப்பந்ததத்தற்கு வந்து சந்தா தொகையை இருவரும் குறைத்தால் அதிக சந்தாக்களை பெறலாம். நாம் இப்போ ஒன்று பட்டு வேலை செய்யாது போனால் இந்த எமன்கள் நம்மை அப்பி விடுவார்கள்.

