Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க.........
#1
சூழ்நிலைக்கேற்ப அனுசரிக்கப் பழகிக் கொள்ளுங்கள். அதற்காக உங்கள் நோக்கத்தைக் கைவிட வேண்டியதில்லை.

வெளிப்படையாகப் பேசுங்கள். ஆனால் முரட்டுத்தனம் வேண்டாம்.
துணிவுடன் இருங்கள். ஆனால், எதிர்ப்புணர்வைக் காட்டாதீர்கள்.
தொடர்ந்து கடுமையாக உழையுங்கள்... விட்டு விட்டு உழைப்பதில் பலனில்லை.
ஏதாவது ஒன்றில் விசேஷமான திறமை பெறுங்கள். அதற்காக உங்களை குறுக்கிக் கொண்டு தெளிவை இழக்க வேண்டியதில்லை.
எழுத்திலும் பேச்சிலும் திறமையினை வளர்த்துக் கொள்ளுங்கள். வெறும் வார்த்தை ஜாலங்களில் ஈடுபடாதீர்கள்.
அடிப்படைகளையும் விவரங்களையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ளுங்கள்.
செயலுக்குத் திட்டமிடுங்கள்.
அதே சமயம் விவரங்களை அலட்சியப் படுத்தாதீர்கள்.
மனித இனத்தில் நம்பிக்கை வையுங்கள். தன்னம்பிக்கையுடன் இருங்கள். ஏமாளியாகவோ, தலை கர்வத்துடனோ இருக்காதீர்கள்.
மனதில் சித்திரம் உருவாக்கி முன்கூட்டியே திட்டமிடுங்கள். உடனடியான எதிர்காலத்தை மறந்து நீண்ட எதிர்காலத்திற்குத் திட்டமிடாதீர்கள்.
மரியாதைக் குறைவினையோ, வெறுப்பையோ வளர்த்துக் கொள்ளாதீர்கள்.
வேலையை நேசியுங்கள். அதுவே முழு திருப்தியை அளிக்கும்.
முயற்சியை வளர்த்துக் கொள்ளுங்கள். சிறிய குழிகள்தான் பெரிய பள்ளங்களாகின்றன.
துணிவுடன், நேர்மையுடன் இருங்கள். கஷ்டங்களைக் கடக்க அது உங்களுக்கு உதவும்.


நன்றி:வணக்கம் மலேசியா

Reply


Messages In This Thread
பெண்கள் மகிழ்ச்சியுடன் இருக்க......... - by RaMa - 11-16-2005, 06:26 AM
[No subject] - by MUGATHTHAR - 11-16-2005, 07:29 AM
[No subject] - by RaMa - 11-16-2005, 07:32 AM
[No subject] - by MUGATHTHAR - 11-16-2005, 07:53 AM
[No subject] - by தூயவன் - 11-16-2005, 03:16 PM
[No subject] - by Niththila - 11-16-2005, 03:44 PM
[No subject] - by தூயவன் - 11-17-2005, 04:14 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)