11-16-2005, 12:31 AM
[size=18][u]<b>சனாதிபதி தேர்தலில் வெல்லப்போவது யார்?</b>
தேர்தல் தொடர்பாக பல யூகங்கள் பலவாறு வெளிவந்துகொண்டிருக்கின்றன. சிலர் மகிந்த என்கிறார்கள் சிலர் ரணில் என்கிறார்கள். வேறுசிலர் "கடுமையான போட்டி" என்று சொல்லித்தப்பித்துக் கொள்கிறார்கள். இச்சமயத்தில் எனது யூகத்தையும் இங்கே பதிந்துவைக்க விரும்புகிறேன்.
எனது ஊகத்தின் படி ஸ்ரீ லங்காவின் அடுத்த சனாதிபதி மஹிந்த என்பதுதான். நான் இந்த முடிவுக்கு வரக்காரணம் யாதெனில்:
1) சிங்கள பௌத்த பேரினவாதிகளை திருப்திப்படுத்தாத எவரும் இதுவரை சனாதிபதியானதில்லை. இனி ஆகப்போவதுமில்லை.
2) ஸ்ரீ லங்காவிலே ஒவ்வொரு கட்சிக்கும் வாக்கு வங்கி என்பது தனித்தனியே உண்டு. முந்தைய தேர்தல்களின் புள்ளிவிபரங்களின் படி பார்த்தால், ரணில் சார்பான கட்சிகளின் வங்கிகளின் கூட்டுத்தொகையை விட, மகிந்த சார்பான வங்கிகளின் கூட்டுத்தொகைதான் அதிகம் (ஹெல உறுமயவுக்கு இப்படி ஒரு வங்கி இல்லாவிட்டாலும் அதற்கென ஓரளவு வாக்குகள் உண்டு என்பதே உண்மை)
3) தமிழ் மக்கள் இம்முறை பாரிய அளவில் தேர்தலை பகிஷ்கரிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரணிலுக்கு கிடைக்கக்கூடிய கொஞ்ச நஞ்ச வாக்கும் கிடைக்கப்போவதில்லை.
மேற்குறித்த காரணிகளால் மகிந்தவின் வெற்றிவாய்ப்புக்களே அதிகமாக இருக்கிறது.
ஒரேயொரு காரணத்தால் மட்டுமே ரணில் வெற்றிபெற வாய்ப்புள்ளது. அதுதான் பேரினவாதிகளின் மனமாற்றம். பெருமளவிலான மக்கள் மனம்மாறி பேரினவாதிகளுக்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். பேரினவாதமா? கொக்கா? ஐம்பது ஆண்டுகளாக மாறாத மனமா இனி மாறப்போகிறது?
இன்னுமொரு விடயம் ரணிலையும் மகிந்தவையும் தவிர்ந்த வேட்பாளர்களில் விக்டர் ஹெட்டிகொட ஒரளவு வாக்குகளைப் பெறக்கூடும் (சிலவேளை மொத்த வாக்குகளில் 5% வரை அவரது வாக்குகள் செல்லலாம்). இதற்குக்காரணம் இரண்டு கட்சிகளின் போக்கையும் விரும்பாத மக்கள் இந்தத் தொழிலதிபருக்கு வாக்களிக்கக்கூடும் என்பதனாலாகும்.
இன்னும் இரண்டு நாட்கள்தானே...எனது ஊகம் பலிக்குமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
எனது குடிலில் பார்வையிட: http://thamilmahan.blogspot.com

Visit my blog:
http://thamilmahan.blogspot.com
http://thamilmahan.blogspot.com