Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
"சூரன்போர் வாழ்த்துக்கள்"
#32
Sriramanan Wrote:
எடுப்பார் கைப்பிள்ளை கறுணா Wrote:தமிழனின் கடவுள் முருகனின் அட்வென்சருகளை விழாவாக எடுப்பதை பண்டிகையாக ஏற்கிறீர்களில்லை?
அடே கறுணா
முருகனின் அட்வென்சருகளை எழுதினது இந்த பார்ப்பனப் பரதேசிகளடா. அதுக்கு எடுக்கப்படும் விழாக்களை பண்டிகையாகவோ அல்லது வேறை என்னவாகவோ கொண்டாடுறது தீபாவளி கொண்டாடுற மாதிரித்தான். இதிலை ஒரு சோகம் என்னென்டா முருகன் எண்ட பெயரே இந்தப் பார்ப்னங்களின் கற்பனையில் உதித்த ஒன்றுதான் அவரின் உண்மையான பெயர் வேலன் மட்டுமே அனால் இந்தப் பாப்பனங்கள் அவருக்கு 108 பெயர்களையும் வழங்கி போதாக் குறைக்கு இரண்டு பெண்டாட்டிகளையும் வழங்கி கேவலப் படுத்தியுள்ளனர்.

<b>எடுத்ததற்கெல்லம் ஆரியம் பார்ப்பனியம் எண்டு கூச்சல் போடும் வாடிக்கையை விட்டு விட்டு ஒழுங்காக உங்கள் /எங்கள் தமிழ் மொழியை வடிவாக படியுங்கள். இதை பார்த்தால் முருகன் தமிழா இல்லையா என புரியும்.</b>

<b>கந்தனும் ஸ்கந்தனும்</b>

(இந்தப் பதிவு இராமநாதன் கேட்டுக் கொண்டதற்கிணங்க.....)

இவங்க ரெண்டு பேரும் ஒன்னா? வெவ்வேறயா? பல கோயில்கள்ள ஸ்கந்தன்னு எழுதீருக்கே. புத்தகத்துல போட்டிருக்கேன்னு சொல்றது தெரியுது. ஆனா ரெண்டு பேரும் வேறவேறங்குறதுதான் உண்மை.

இன்னைக்கு இந்த ரெண்டும் ஒரே சாமியத்தான் குறிக்குது. அதுனால பலபேரு ஸ்கந்தன் அப்படீங்குற வடமொழிப் பெயருல இருக்குற ஸ்ஸ விட்டுட்டுதான் கந்தன் அப்படீங்குற பேரு வந்துச்சுன்னு சொல்றாங்க. ஆனா ஒத்துக்காதீங்க.

பேரு வைக்கிறதுல தமிழர்கள் பெரிய ஆளுங்க. தமிழனோட முதற்கடவுள் முருகன். அந்தப் பேரையும் எப்படி யோசிச்சு வெச்சிருக்காங்க தெரியுமா?

அகர உகர மகரங்களின் சேர்க்கைதான ஓங்காராம். அதாவது அ+உ+ம = ஓம்.

இதுல,
அகரம் - படைப்பைக் குறிப்பது (உலகம் படைப்பாலதான் தொடங்குச்சு. தமிழ் எழுத்தின் தொடக்கமும் அகரந்தானே.)

உகரம் - காத்தலைக் குறிப்பது. (காக்கப்படுவது உலகம். ஆகையால உகரம் காத்தல் எழுத்து. பெரிய ஆளுங்க எழுதுன நூல்களெல்லாம் எடுத்துப் பாத்தா உகரத்துலதான் தொடங்கும்.)

மகரம் - இது அழித்தல் எழுத்து. (முடிவுதானே அழிவு. தமிழ் எழுத்துகளின் கடைசி எழுத்துதானே மகரம்.)

இதெல்லாம் அன்னைக்கே நம்மாளுங்க யோசிச்சு வெச்சிருக்காங்க. மத்த நாடுகள்ல எல்லாம் இதெல்லாம் யோசிக்கும் முன்னாடியே இந்த மாதிரி யோசிச்சிருக்காங்க.

இதுல முருகுங்குற பேரப் பாருங்க. மு+ரு+கு = முருகு. இந்த மூனு எழுத்துகள்ளயும் உகரம் வருது பாத்தீங்களா? முருகனைப் பணிந்தால் காக்கப்படலாமுன்னு சொல்றதுக்காக அப்படி. அதுவுமில்லாம முருகன் என்ன செய்தாலும் அது காத்தல்தான்னு சொல்றதுக்குதான் அப்படிப் பேரு. பேர் வைக்கிறதுல கூட ஒரு சூச்சுமம்.

இப்படி முருகுன்னு யோசிச்சுப் பேரு வெச்சவனா, ஸ்கந்தன்ல இருக்குற ஸ்ஸ விட்டுட்டுக் கூப்பிடுவான்?

ஸ்கந்தன்னு சொல்ற பேருக்கும் கந்தன்னு சொல்ற பேருக்கும் பொருள் வேறுபாடு ரொம்ப இருக்கு. பொருளில் ஒன்னுக்கொன்னு தொடர்பே இல்லாதது.

மொதல்ல ஸ்கந்தனப் பாப்போம். ஸ்கந்தன்னா என்ன பொருள்? வடமொழியில் இதுக்கு ரெண்டு பொருளாம்.

சத்ரூன் சோஷயதீதீ ஸ்கந்தகா - பகைவர்களுடைய வலிமையை குறைக்கின்றவன் என்று பொருள்.

ஸ்கந்தஸ்ய கீர்த்தீம் அத்துலாம் கலீ கல்மஷ நாசீனீம் - கலியுகத்தின் கொடுமைகளில் இருந்து நீக்க வல்லது ஸ்கந்தனின் கீர்த்தி.

(வடமொழி எனக்குத் தெரியாது. ஆகையால நான் எழுதுனதுல எழுத்துப் பொருட் பிழை இருந்தா மன்னிச்சுக்கிருங்க.)

இந்த ரெண்டு வெளக்கமுமே மேம்போக்கான வெளக்கமே தவிர ஸ்கந்தன்னா என்னன்னு ஆழமா விளக்கலை.

ஆனால் கந்தன் என்கிற பேரப் பாருங்க. அதுக்கு ஆழமான விளக்கம் இருக்கு.

"கந்து சுழிக்கும் கடாக் களிற்றின்" அப்படீங்குற சங்கத் தமிழ் வரிகள் எதைச் சொல்லுது தெரியுமா? கந்துன்னா என்னன்னு சொல்லுது.

சரி. கந்துன்னா என்ன? ஆனை பார்த்திருப்பீங்க. அந்த ஆனைய அந்தக்காலத்துல தமிழர்கள் நெறையப் பயன்படுத்துனாங்க. ஒரு எடத்துல இருந்து இன்னோரு எடத்துக்குக் கூட்டீட்டுப் போவாங்க. போருக்காக இருக்கலாம். கட்டிடம் கட்ட இருக்கலாம். வேறு எதுக்கும் இருக்கலாம். (மதுரைல ஆனையக் கட்டிப் போரடிச்சாங்களாம் அந்தக் காலத்துல. அதுக்காகக் கூட இருக்கலாம்.)

அப்ப ஒரு இடத்துல இருந்து இன்னோரு எடத்துக்குக் கூட்டீட்டுப் போறப்போ எங்க கட்டிப் போடுறது? போற எடத்துல எல்லாம் கொட்டாரம் இருக்குமா?

அதுக்கும் ஒரு வழி கண்டுபிடிச்சான். ஆனையோட கழுத்துல ஒரு சங்கிலியக் கெட்டி (இல்லைன்னா கயத்தக் கட்டி), அந்தச் சங்கிலிய ஒரு பெரிய கட்டைல கட்டீருவாங்க. ஆன போற எடத்துக்கெல்லாம் அந்தக் கட்டைய இழுத்துக்கிட்டே போகும். எங்க தங்கனுமுன்னு முடிவு செய்யுறாங்களோ அங்க ஒரு பெரிய குழியத் தோண்டி அந்தக் கட்டைய அதுல பொதைச்சிருவாங்க. இப்ப ஆனையக் கட்டிப் போட்டாச்சு இல்லையா.

சரி. கந்துன்னா என்னன்னு இன்னமும் சொல்லலையே. ஆன இழுத்துக்கிட்டே திரியுற அந்தக் கட்டைக்குத்தான் கந்துன்னு பேரு.

அப்புறம் கந்தனுக்கும் அதுக்கும் உள்ள தொடர்பு? அந்த கந்துங்குற கட்ட எப்பவுமே ஆனை கூடவே இருக்கு. ஆனா தேவையானப்போ அந்த ஆனையைக் கட்டுப்படுத்துது பாத்தீங்களா!

அது போல முருகக் கடவுள் எப்பவுமே நம்ம கூடயே இருந்து தேவையான பொழுதுகளில் நம்மளக் கட்டுப்படுத்திக் காப்பாத்துவாருன்னு சொல்லி அவருக்குக் கந்தன்னு பேரு வெச்சாங்க. புரிஞ்சதா?

நன்றி.....
<b>கோ.இராகவன்</b>

http://gragavan.blogspot.com/2005/11/blog-...8636073773.html
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by kuruvikal - 11-17-2004, 02:33 PM
[No subject] - by thaiman.ch - 11-17-2004, 02:49 PM
[No subject] - by kuruvikal - 11-17-2004, 03:02 PM
[No subject] - by Kanani - 11-17-2004, 03:02 PM
[No subject] - by kuruvikal - 11-17-2004, 03:04 PM
[No subject] - by thaiman.ch - 11-17-2004, 03:08 PM
[No subject] - by tamilini - 11-17-2004, 03:09 PM
[No subject] - by Kanani - 11-17-2004, 03:13 PM
[No subject] - by thaiman.ch - 11-17-2004, 03:15 PM
[No subject] - by Sriramanan - 11-18-2004, 01:38 AM
[No subject] - by thaiman.ch - 11-18-2004, 01:44 AM
[No subject] - by கறுணா - 11-18-2004, 12:12 PM
[No subject] - by kuruvikal - 11-18-2004, 03:18 PM
[No subject] - by Sriramanan - 11-19-2004, 01:58 AM
[No subject] - by sinnappu - 11-20-2004, 09:52 PM
[No subject] - by sinnappu - 11-15-2005, 08:35 AM
[No subject] - by MUGATHTHAR - 11-15-2005, 10:53 AM
[No subject] - by வினித் - 11-15-2005, 04:06 PM
[No subject] - by sinnappu - 11-15-2005, 04:18 PM
[No subject] - by Niththila - 11-15-2005, 04:21 PM
[No subject] - by Vasampu - 11-15-2005, 04:27 PM
[No subject] - by Niththila - 11-15-2005, 04:33 PM
[No subject] - by வினித் - 11-15-2005, 04:56 PM
[No subject] - by tamilini - 11-15-2005, 06:57 PM
[No subject] - by வினித் - 11-15-2005, 07:05 PM
[No subject] - by Danklas - 11-15-2005, 07:13 PM
[No subject] - by vasisutha - 11-15-2005, 07:58 PM
[No subject] - by Danklas - 11-15-2005, 08:02 PM
[No subject] - by KULAKADDAN - 11-15-2005, 08:32 PM
[No subject] - by vasisutha - 11-15-2005, 08:35 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)