12-01-2003, 11:28 AM
வணக்கம் யாழ்! நல்லதொரு விடயம். தென்னிந்திய தொலைக்காட்சிகள் (குப்பைகள் என் பார்வையில்) வருகை நமது தொலைக்கட்சிகளின் இருப்பை நிச்சயம் கேழ்விக்குள்ளாக்கும். காலை முதல் மாலை வரை வெறுமனே தென்னிந்திய சினிமா சார்பாபன நிகழ்ச்சிகளையும் எந்தவித ரசனையுமற்ற மாறாக சென்டிமென்டல் பேத்தல்களான சீரியல்களை மட்டுமே ம்பியிருக்கும் இந்த தொலைக்காட்சிகள் தேவைதானா? நமது நாட்டு நிகழ்வுகளில் நல்ல விடயங்களை மறைத்து சினிமாதனமான நிகழ்வுகளை மட்டுமே நமக்கு தருகிறது. நம்மவர்களை மயக்க இருNவுளைகளில் புலம்பெயர்ந்த தமிழருக்கு தொலைபேசி எடுத்து வேறு ஆசைகாட்டுகிறார்கள். நம்மடை ஆக்களும் வேலைமினக்கெட்டு அவங்களுக்கு எழுதிப்போடுறாங்கள். அது அவையின்றை சுதந்திரம்இ ஆனால் இது நம்மை மயக்க அவர்கள் காட்டும் மாயையே. சினமாக்காரர்கள் நம்மை சிலோன் ஆட்கள் என்று இன்னமும் ஒரு 3ம்தர மக்களாகவே பார்ககிறார்கள். இதற்கு நல்ல உதாரணம் நளதமயந்தி! நமது விடுதலை பற்றியோ நமது கலாச்சாரம் பற்றியோ எந்தவித அறிவோ அல்லது ஆராட்சியோ இல்லாது தமது வாய்க்கு வந்த படி எல்லாம் நிகழ்ச்சி நடத்துவார்கள். புலம் பெயர் மண்ணில் நம்மிடம் இருக்கும் பணத்தை கறப்பதே அவர்கள் குறி. இரவிலை தொலைக்காட்சியில் நம்மவர்கள் வீட்டுக்கு அளைக்கும் தொலைபேசியெல்லாம் சந்தா அட்டை வாங்கும் வரைதான். கோடிக்கணக்கான தென்னிந்திய தமிழ் மக்கள் படும் அவலங்கள் அல்லல்களை கூட வெளிக்கொணராத இந்த தொலைக்காட்சிகள் நம்மையா தiலையில் து}க்கி வைத்து ஆடப் போகிறது? நம்ம பணமே அவர்களின் குறி. இலவசமாக வந்தால் பார்கலாம்இ சந்தா என்றால் தயவு செய்து புறக்கணியுங்கள். நம் பெயர் சொல்ல இரண்டு தொலைக்காட்சிகள் உண்டு அதை வழர்க்க உதவுவோம். அண்மையில் இந்த தென்னிந்திய தொலைக்காட்சியில் தொழில்பார்ககும் நம்ம ஊர் பிரபல அறிவிப்பாளரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் சொன்னது இது தான் - அட அவங்கள் தான் எனக்கு தீனி போடுறாங்கள் - ஆனால் புலம்பெயர் மண்ணில் நமக்கு என இரு தொலைக்காட்சியிருக்கு அதை வளர்க்க உதவுங்கள். அவையின்றை தொலக்காட்சியை வழர்க்க தென்னிந்தியாவில் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்இ ஆனால் நமக்கு சில லட்சங்களே இருக்கு. இந்த தென்னிந்திய ஊடகங்களின் ஆக்கிரமிப்பு நம் தொலக்காட்சிகளை அழிக்கவே இதில் எந்தவித சந்தேகமும் இல்லை. பிரபலமான தொலைக்காட்சி தொடர்களை அவர்கள் முதலில் நமது தொலைக்காட்சிகளுக்கு கொடுக்க மறுத்ததும் பின்னர் மெதுவாக இங்கு இலவசமாக தமது சேவைகளை தொடங்கியதும். நமது தொலைக்காடசிகள் நிலைக்கவேண்டுமாயின் அவர்கள் தொலைக்காட்சிகளை நாம் பகிஸ்கரித்தே ஆகவேண்டும். குறிப்பாக சந்தா விடயத்தில்! இப்போ விழித்தெழாது போனால் தொடரந்தும் நாம் அடிமைகள் தான்!

