11-15-2005, 04:32 PM
திருந்தினார் சுகாசினி: மன்னிப்பு கேட்டார்
நவம்பர் 15, 2005
சென்னை:
குஷ்பு கருத்துக்கு ஆதரவாக தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது என்று பேசிய சுஹாசினி மன்னிப்பு கேட்டுள்ளார்.
சுஹாசினி தமிழர்களுக்கு கொம்பா முளைத்திருக்கிறது என்று பேசியதற்கு விளக்கம் கேட்டு தமிழ் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடிகர் சங்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதை தொடர்ந்து சுஹாசினிக்கு நடிகர் சங்க செயலாளர் சரத்குமார் நோட்டீஸ் அனுப்பினார். இந் நிலையில் இன்று நடிகர் சங்கத்துக்கு சுஹாசினி ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,
நான் சர்வதேச திரைப்பட விழாவில் பேசியது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். குறிப்பாக நான் பேசியது நடிகர் சங்கத்திற்கு ஏதேனும் பிரச்சினை ஏற்படுத்தி இருந்தால் அதற்கும் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
சுஹாசினி, அவரது தந்தை சாருஹாசன், சுஹாசினியின் கணவர் மணி ரத்னம் எல்லோரும் ஒரே வீட்டில் தான் வசிக்கிறார்கள். சுஹாசினியின் கருத்துக்கு சாருஹாசன் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் கணவரும் இயக்குனருமான மணி ரத்தினத்தின் ரியாக்ஷன் வேறு விதமாக இருந்துள்ளது.
சுஹாசினியின் பேச்சை மணி ரத்தினம் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே அவரது வீட்டுக்கு பாம் வைக்கப்பட்டதையும் அவருக்கு கொலை மிரட்டல் வந்து பிரச்சனை ஆனதையும் சுட்டிக் காட்டிய மணி ரத்தினம் நாம் ஏன் நமது நிம்மதியை கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
மேலும் சுகாசினியின் பேச்சால் குஷ்புவின் பிரச்சனைகள் அதிகமாகியிருப்பதாக கருதும் மணி ரத்தினம், இந்த விஷயத்தில் தனது நிலையை மாற்றிக் கொள்ளும்படி கூறியதாக தகவல்கள் வருகின்றன.
ஏற்கனவே இரு முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தன் கணவருக்கு மேலும் நெருக்கடி தரக் கூடாது என்பதாலேயே சுஹாசினியும் தனது நிலையை மாற்றிக் கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
மேலும் குஷ்பு மீது மீதான வழக்குகளை சில நீதிமன்றங்கள் தள்ளுபடி செய்தாலும், சில நீதிமன்றங்கள் பிடிவாரண்ட் பிறப்பிக்கும் நிலைக்குப் போனதையும், அவர் கைதாகும் வாய்ப்பு உருவாகியுள்ளதையும் கணக்கிட்டுப் பார்த்து, தன் மீதும் வழக்கு, கைது என நடவடிக்கை பாய்ந்து அசிங்கமாவதைத் தவிர்க்க விரும்பியே நடிகர் சங்கத்துக்கும் மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார் என்கிறார்கள்.
எப்படியோ திருந்துனா சரி...
Thatstamil

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>