Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
3 வயது குழந்தையின் கொலையை மறைத்த குஷ்பு
#9
மேட்டூர் நீதிமன்றத்தில் குஷ்பு சரண்!
நவம்பர் 15, 2005

மேட்டூர்:

தனக்கு பிடிவாரண்ட் பிறப்பித்த மேட்டூர் நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு இன்று சரணடைய வந்தார். ஆனால், நீதிபதி இல்லாததால் நாளை வருமாறு அவரிடம் கூறபட்டது.



தமிழகப் பெண்களின் கற்பு குறித்து தவறாகப் பேசிய குஷ்பு மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவரை கைது செய்ய மேட்டூர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் பிடிவாரண்ட் பிறப்பித்தார். இந்த பிடிவாரண்ட் உத்தரவு நகல் அடங்கிய விசேஷ தபால் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தது. அதை நேற்றிரவு போலீசார் பெற்றுக் கொண்டனர்.

இந் நிலையில் தனக்கு முன் ஜாமீன் கோரி குஷ்பு தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அந்த மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தீர்ப்பை நாளைக்கு (செவ்வாய்க்கிழமை) நீதிபதி ஒத்தி வைத்துவிட்டார்.

நேற்று இந்த முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது குஷ்புவைக் கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் கூறியதை நீதிபதி சக்கரியா ஹூசேன் ஏற்கவில்லை.

இந் நிலையில் மேட்டூர் நீதிமன்றத்தின் பிடிவாரண்ட் உத்தரவு போலீசாரின் வசம் வந்து சேர்ந்துவிட்டதால் குஷ்புவை போலீசார் கைது செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதையடுத்து கைதைத் தவிர்க்க இன்று மேட்டூர் நீதிமன்றத்தில் குஷ்பு சரணடையலாம் என்று நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். அதே போல இன்று மாலையில் அவர் மேட்டூர் இரண்டாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு வந்தார்.

ஆனால், அப்போது நீதிபதி ஸ்ரீதரன் நீதிமன்றத்தில் இல்லை. இதனால் நாளை காலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு குஷ்புவிடம் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தான் சரணடைந்துவிட்டதை பதிவு செய்து கொள்ளுமாறு குஷ்பு கேட்டுக் கொண்டார்.

நாளை குஷ்பு மீண்டும் மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜராகி சரணடையவுள்ளார். முன்னதாக கைதைத் தவிர்க்க குஷ்பு தனது வீட்டில் இருந்து எஸ்கேப் ஆகியிருந்தார். தோழி ஒருவரின் வீட்டில் மறைந்து இருந்தார். ஆனால், சிக்கல் பெரிதானதால் மேட்டூர் நீதிமன்றத்துக்கு சரணடையச் சென்றார்.

Thatstamil
<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
[No subject] - by sinnappu - 11-15-2005, 08:37 AM
[No subject] - by aswini2005 - 11-15-2005, 10:16 AM
[No subject] - by tamilini - 11-15-2005, 11:50 AM
[No subject] - by kuruvikal - 11-15-2005, 02:06 PM
[No subject] - by manimaran - 11-15-2005, 02:09 PM
[No subject] - by sinnappu - 11-15-2005, 04:26 PM
[No subject] - by Vaanampaadi - 11-15-2005, 04:31 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)