11-15-2005, 12:11 PM
வவுனியா வரை வந்துவிட்டு மீண்டும் கிளிநொச்சிக்கு சென்றார் சந்திரசேகரன்கிளிநொச்சிக்கு நேற்று திங்கட்கிழமை அவசரப்பயணமொன்றை மேற்கொண்டு விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச் செல்வனுடன் பேச்சுவார்த்தை நடத்திய மலையக மக்கள் முன்னணித் தலைவர் பெ.சந்திரசேகரன் இன்று செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து பேச்சுவார்த்தை மேற்கொள்ளவிருப்பதாக அறிய வருகிறது.
நேற்று திங்கட்கிழமை காலை கிளிநொச்சியிலுள்ள விடுதலைப்புலிகளின் சமாதான செயலகத்தில் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனைச் சந்தித்த சந்திரசேகரன் ஜனாதிபதித் தேர்தலில் எத்தகையதொரு நிலைப்பாட்டை நாடு பூராவுமுள்ள தமிழ் மக்கள் எடுக்க வேண்டுமென்பது தொடர்பாக கலந்துரையாடியதாக தெரிய வருகிறது.
இரு பிரதான அரசியல் கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்களும் இன நெருக்கடித் தீர்வு தொடர்பாகவோ அல்லது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பாகவோ எந்தவொரு உரிய தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்கவில்லையெனவும் அதனாலேயே இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் அக்கறை காட்டவில்லை என்றும் இந்த விடயத்தில் தமது நிலைப்பாட்டில் எந்தவொரு மாற்றமும் எடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழ்ச்செல்வன் சந்திரசேகரனுக்கு நேற்றைய பேச்சுவார்த்தையில் தெரிவித்ததாகவும் அறிய வருகிறது.
இதனையடுத்து நேற்று நண்பகல் கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கு வந்த சந்திரசேகரன் ஐக்கிய தேசியக் கட்சி தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்கவுடன் இந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய பின்னர் கொழும்புக்கு வராமல் மீண்டும் கிளிநொச்சிக்கு திரும்பிச் சென்றுள்ளார்.
விசேட செய்தியொன்றுடன் அவர் திரும்பிச் சென்றதாக வவுனியாத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மலையக மக்கள் முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து மலையகத்திலும் கொழும்பிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
http://www.thinakural.com/New%20web%20site...er/15/index.htm

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>