11-15-2005, 09:11 AM
``எஸ்.எம்.எஸ். மூலம் மிரட்டுவதா?''
நடிகை சுஹாசினிக்கு டி.ராஜேந்தர் கண்டனம்
சென்னை, நவ.15-
``நடிகர் சரத்குமாரை எஸ்.எம்.எஸ். மூலம் சுஹாசினி மிரட்டியது கண்டிக்கத் தக்கது'' என்று டைரக்டர் டி.ராஜேந்தர் கூறினார்.
<b>பேட்டி</b>
சினிமா டைரக்டர் டி.ராஜேந்தர் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
இந்தியாவில் எல்லாருக்கும் கருத்து சொல்லும் சுதந்திரம் உள்ளது. இந்தியா சுதந்திர நாடு. குஷ்புவாக இருந்தாலும், சுஹாசினியாக இருந்தாலும் கருத்து சுதந்திரம் அவர்களுக்கு உள்ளது. பெண்களுக்கு உரிய சுதந்திரமும் அவர்களுக்கு இருக்கிறது.
நான் பெண்களின் சுதந்திரத்திற்கு எதிரானவன் அல்ல. ஒரு தனிப்பட்ட மனிதனின் பேச்சு, மற்றவருடைய கருத்துக்கு ஏற்றதாகத்தான் இருக்கும் என்று நினைப்பது தவறு. என்னைப் போலத்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று நான் நினைக்க கூடாது.
<b>தாடி</b>
நான் தாடி வைத்து இருப்பதால் மற்றவர்களும் தாடி வைத்து இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. அதுபோல ஒரு கருத்தை சொல்லும்போது தன்னைப்போலத்தான் மற்றவர்களும் இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு யாரும் கருத்து கூறக்கூடாது. அதன்மூலம் மற்றவர்களுடைய மனதை புண்படுத்தவும் கூடாது.
குஷ்புவும், சுஹாசினியும் எப்படி வாழவேண்டும் என்பது அவர்கள் விருப்பம். அவர்கள் சுதந்திரம்'' அதில் தலையிட விரும்பவில்லை. அவர்கள் பொத்தாம் பொதுவாக கருத்து கூறும்போது எம் தமிழ் பெண்களை இழிவுபடுத்துவதாக இருக்ககூடாது.
<b>கண்ணகி</b>
தமிழ்நாட்டில் கற்புள்ள பெண்கள் இருப்பதால்தான் மழை பெய்கிறது. கிராமத்து மக்களும் நகர்ப்புற மக்களும் தங்கள் பெண்களை இன்றும் தமிழ் கலாசாரத்தோடும் பண்போடும் தான் வளர்த்து வருகிறார்கள்.
கற்புள்ள பெண் கண்ணகிக்காக தமிழ்நாட்டில் வரலாறு இருக்கிறது. இளங்கோ அதை எழுதி இருக்கிறார். அந்த பெயரைத்தான் என் மகனுக்கு சிலம்பு (சிலம்பரசன்) என்று சூட்டி இருக்கிறேன்.
<b>பிரதிநிதியா?</b>
அந்தசிலம்பில் இருந்து தெரிந்த மாணிக்க பரலாக நான் சொல்கிறேன். தமிழ் மக்கள் சார்பில் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்க சுஹாசினி என்ன தமிழர்களினë ஒட்டுமொத்த பிரதிநிதியா? தமிழர்களின் பிரதிநிதியாக இவரை யாராவது வாக்களித்து தேர்ந்தெடுத்து இருக்கிறார்களா?
மக்களின் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிற முதல்-அமைச்சரே குஷ்பு சொன்ன கருத்து தவறு என்று கூறியிருக்கிறார். பெண்களை நான் மதிப்பவன், துதிப்பவன் என்றாலும், தமிழக பெண்களின் மனம் புண்படும்படி சுஹாசினி கூறிய கருத்துக்கள் தவறு.
சுஹாசினி எப்படியும் வாழட்டும். அதை கேட்க வேண்டியது மணிரத்னத்தின் பொறுப்பு. ஆனால் ஒட்டுமொத்த தமிழ் மக்களைப் பற்றி பேசினால் தட்டிக் கேட்க எனக்கும் இருக்கிறது பொறுப்பு.
கண்டனம்
தமிழனுக்கு கொம்பா முளைத்து இருக்கிறது என்று பேசி இருக்கிறார். கொம்பு முளைக்க நாங்கள் மாடல்ல. மனிதர்கள். தெம்பு முளைத்த தமிழர்கள்.
நடிகர் சங்க பொதுச் செயலாளர் சரத்குமார் அரசியலை கடந்து எனக்கு நல்ல நண்பர். அவருக்கு சுஹாசினி எஸ்.எம்.எஸ். கொடுத்து மிரட்டி இருப்பதாக கேள்விப்பட்டேன். அதுவும் கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு டி.ராஜேந்தர் கூறினார்.
Dailythanthi

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>