11-14-2005, 07:38 AM
'எஸ்எம்எஸ்' சுகாசினிக்கு நடிகர் சங்கத்தில் 'கல்தா'
சென்னை:
தனக்கு எஸ்எம்எஸ் மூலம் மிரட்டல் விடுத்த மாஜி நடிகை சுகாசினிக்கு நடிகர் சரத்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
செக்ஸ் பேச்சு புகழ் குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசியதோடு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழர்கள் சார்பில் குஷ்புவிடம் மன்னிப்பு கேட்பதாகக் கூறி தமிழர்களை அசிங்கப்படுத்தினா சுகாசினி.
இந் நிலையில் சுகாசினியின் செயலுக்கு நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்தது. அதன் பொதுச் செயலாளர் சரத்குமார் சுகாசினியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து நான் யார் தெரியுமா? என் மீது நடவடிக்கை எடுத்தால் நடப்பதே வேறு என்று மிரட்டி சரத்குமாருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினார் சுகாசினி.
இது குறித்து சரத்குமார் கூறுகையில்,
குஷ்புவுக்கு ஆதரவாகப் பேசியதற்காக சுகாசினிக்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. தமிழக மக்களுக்கு கொம்பு முளைத்திருக்கிறதா என்று கேட்டு பொது மக்கள் மீது அநாவசியமாகப் பாய்ந்ததால் தான் சுகாசினிக்கு நோட்டீஸ் அனுப்பினோம்.
சுகாசினி உள்பட எல்லோருக்குமே கருத்துச் சுதந்திரம் உண்டு. ஆனால், அது மக்கள் மனதைப் புண்படுத்தாத வகையில் இருக்க வேண்டும். மக்களைக் கோபப்படுத்தி போராட்டத்தைத் தூண்டிவிடும் வகையில் பேச்சு அமையக் கூடாது.
தமிழர்கள் சார்பாக மன்னிப்பு கேட்க இவர் என்ன தமிழர்களின் பிரதிநிதியா?. எங்கள் சங்கத்தின் உறுப்பினர் இவ்வாறு பேசியது தவறு என்பதால் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினோம். அந்த நோட்டீஸை ஒழுங்காக படித்துக் கூட பார்க்காமல் எனக்கு எம்எம்எஸ் அனுப்பியிருக்கிறார் சுகாசினி.
சுகாசினியின் இந்தச் செயலைக் கண்டு சங்க நிர்வாகிகள் யாரும் அதிர்ச்சியடையவில்லை. அவரது அதிகப்பிரசங்கித்தனத்தையும் அறியாமையையும் அவசர புத்தியையும் நினைத்து வியந்தோம்.
நடிகர் சங்கத்தால் அதன் உறுப்பினர்கள் யாரையும் கட்டுப்படுத்த முடியாது என சுகாசினி நினைப்பதாகத் தெரிகிறது. நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பினால் கோர்ட்டுக்குப் போவேன் என்கிறார். இது ஜனநாயக நாடு. யாரும் கோர்ட்டுக்குப் போவதை யாரும் தடுக்க முடியாது.
வரும் 30ம் தேதி சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் நடக்கிறது. அப்போது சுகாசினியை சங்கத்தில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தப் போகிறேன் என்றார் சரத்குமார்.
சரத்குமாருக்கு எஸ்எம்எஸ் மிரட்டல் விடுத்தது மாதிரி குஷ்புவுக்கும் அமெரிக்காவில் இருந்து எஸ்எம்எஸ் மூலம் தான் சுகாசினி பாராட்டு தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Thatstamil

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>