11-14-2005, 07:33 AM
குஷ்பு 'எஸ்கேப்': தலைமறைவானார்!
நவம்பர் 14, 2005
சென்னை:
நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்ததையடுத்து நடிகை குஷ்பு தலைமறைவாகிவிட்டார்.
தமிழக பெண்களின் கற்பு குறித்து கேவலமாகப் பேசிய குஷ்புவுக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதில் மேட்டூர் நீதிமன்றம் குஷ்புவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
இந்த வாரண்ட்டை நிறைவேற்றுமாறு போலீசாருக்கும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து குஷ்பு கைது செய்யப்படுவது உறுதியாகிவிட்டது.
ஆனால், அதற்குள் அவர் எஸ்கேப் ஆகிவிட்டார். அபிராமபுரம் போட் கிளப் பகுதியில் உள்ள தனது வீட்டை விட்டு ரகசியமாக வெளியேறிவிட்ட குஷ்பு அவரது தோழி ஒருவரின் வீட்டில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, தனக்கு எதிரான பிடிவாரண்டை ரத்து செய்யக் கோரியும், தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரியும் குஷ்பு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
இந்த மனு மீது தீர்ப்பு வரும் வரை குஷ்புவின் தலைமறைவு தொடரும் என்று தெரிகிறது. தனக்கு எதிரான தீர்ப்பு வந்தால் குஷ்பு தானாகவே நீதிமன்றத்தில் சரணடைவார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே குஷ்புவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Thatstamil

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>