Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
எரியும் கொள்ளிக்கட்டையுடன் பொங்கி எழுந்தாள் நவீன திரவுபதி
#1
சூதாட்டத்தில் திரவுபதியை விட்டனர் பாண்டவர்கள் என்று மகாபாரதத்தில் படித்திருப்பீர்கள். ஆனால், இதோ நவீன திரவுபதி, தன்னை சூதாட்டத்தில் வென்றவனுக்கு "கொள்ளிக்கட்டை' அடி கொடுத்தாள். சூதாட்டத்தில் தன்னை இழந்த கணவனுக்கு கிராமத்தினர் முன்னிலையில் ஓட ஓட விரட்டி அடித்தாள். ke ke ke ke <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted: :twisted:

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டம் தமாபூர் தாலுகாவில் உள்ளது குந்தபுரா கேதார்பூர் என்ற கிராமம். அங்கு வசிக்கும் விவசாயி ராம் சிங். ஓரளவு வசதியானவன் தான். அவன் எப்போதும் கையில் இருக்கும் காசை எல்லாம் சூதாடிவிட்டு, சாராயம் குடித்து விட்டு வீட்டில் படுத்துவிடுவான்.

சூதாட்டம் என்று நண்பர்களுடன் உட்கார்ந்து விட்டால், எதை வேண்டுமானாலும் அடகு வைத்துவிடுவான். இப்படித்தான் வீட்டில் இருக்கும் பல பொருட்களை அடகு வைத்து சூதாடி உள்ளான். அதையெல்லாம் பொறுத்து வந்த மனைவி, தீபாவளி அன்று நடந்த சம்பவத்தில் எரிமலையாய் பொங்கி எழுந்து விட்டாள்.

தீபாவளி அன்று இரவு, இவளது 28 வயது இளம் கணவன் ராம்சிங், வழக்கம் போல, அதிகமாகவே சாராயம் குடித்து விட்டு, தன் நண்பர்களுடன் சீட்டாட்டத்தில் இறங்கி விட்டான். நேரம் ஆக ஆக எல்லா பணத்தையும் இழந்து விட்டான். தன் கையில் இருந்து மோதிரத்தை கழற்றி சூதாடினான். அதையும் இழந்தான். அடுத்து, தன் கழுத்து தங்கச் சங்கிலியை வைத்தான்.

எல்லாவற்றையும் இழந்து விட்டான், இனி சூதாட எதுவும் கையில் இல்லை. அப்போது அவன் நண்பர்களில் ஒருவன், "ஏன் கவலைப்படுகிறாய், நான் ஐந்தாயிரம் ரூபாய் தருகிறேன். உன் மனைவியை என்னிடம் சில காலம் அடகு வை, நான் உன் நண்பன் தானே, நம்பிக்கை வைத்து உன் மனைவியை அடகு வை' என்றான்.

முழுக் குடிகாரனாக இருந்த ராம் சிங்குக்கு தான் என்ன செய்கிறோம் என்ற நினைவே இல்லை. நண்பன் சொன்னதை ஏற்று, தன் மனைவியை அடகு வைப்பதாக கூறி, ஐந்தாயிரம் வாங்கிக் கொண்டு, மீண்டும் சூதாடினான். அந்த பணத்தையும் இழந்து விட்டான். அப்போது தான் அவன் நண்பன் சுயரூபம் தெரிந்தது.

"ராம் சிங், இனி உன் மனைவி, என் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். நீ பணத்தை கொடுத்து, மீட்டுச்செல்' என்று கூறி, அந்த நண்பன், ராம் சிங் வீட்டுக்கு சென்று அவன் மனைவியிடம் விஷயத்தை சொன்னான்.

விஷயத்தை கேட்ட ராம் சிங் மனைவி பொங்கி எழுந்தாள். "அடப்பாவிகளா, இப்படியும் கூட சூதாட்டம் ஆடுவீர்களா? நீங்கள் சகோதரிகளுடன் பிறக்கவில்லையா?' என்று கெஞ்சினாள். ஆனால், நண்பனும் குடித்திருந்ததால், அவள் பேச்சை கேட்கும் நிலையில் இல்லை. "இதோ பார், உன்னை உன் கணவன் என்னிடம் அடகு வைத்து விட்டான். அவன் பணம் தரட்டும், விட்டு விடுகிறேன், இப்போ என் வீட்டுக்கு வா' என்று வீட்டினுள் காலடி வைத்து, அவளை நோக்கி வந்தான்.

இனியும் தாமதிக்கக் கூடாது என்று, அடுப்பில் இருந்து, எரிந்து கொண்டிருந்த கொள்ளிக்கட்டையை எடுத்து, அவனை நோக்கி பாய்ந்தாள். எரியும் தீயை பார்த்ததும், நண்பனுக்கு குடித்த சாராய போதை எல்லாம் இறங்கிவிட்டது.

அங்கிருந்து ஓட்டம் பிடித்தான். நேராக போலீஸ் நிலையத்தில் போய்,போலீஸ் அதிகாரி அனில் குமார் யாதவ் காலில் விழுந்து விட்டான். போலீஸ் நிலைய வாசலில், தீக்கட்டையுடன் நின்றிருந்தாள் ராம் சிங் மனைவி. போலீசார் எல்லாரும் அதிர்ந்து விட்டனர்.

விஷயத்தை எல்லாம் கேட்ட, போலீஸ் அதிகாரி, ராம் சிங்கை பிடித்து வர உத்தரவிட்டார். ராம் சிங் வந்ததும், அவன் தவறை அவனுக்கு எடுத்துச் சொல்லி, "உடனே எங்கேயாவது கடன் வாங்கி வா, உன் மனைவியை மீட்டுச் செல்' என்று கூறினார்.

எங்கோ போய் இரண்டாயிரம் ரூபாய் பணத்தை புரட்டி வந்தான் ராம் சிங். மீதி பணத்துக்கு எழுதி வாங்கி ராம் சிங்கை, "கண்டிப்பாக ஒரு வாரத்தில் மீதி பணத்தை தந்துவிடு' என்று எச்சரித்து அனுப்பி விட்டு, அவன் நண்பனை சமாதானப்படுத்தி, இனி இப்படி எல்லாம் சூதாட்டம் ஆடினால், சிறையில் தள்ளி விடுவேன் என்று எச்சரித்து அனுப்பினார்.

அன்று இரவு, லேட்டாக வீட்டுக்கு திரும்பினார் ராம் சிங். ஆனால், அவர் மனைவியோ, சாப்பிடாமல், வீட்டு வாசலில் அமர்ந்திருந்தாள். "அவன் வரட்டும், உண்டு இல்லை என்று ஆக்கி விடுகிறேன்' என்று கருவிக் கொண்டிருந்தாள். கிராமத்து பெண்களும் அவளுக்கு துணையாக உடன் இருந்தனர்.

நள்ளிரவில் ராம் சிங், வீடு திரும்பினார். அவரை வாசலில் மறித்து, மரக்கட்டையால் தாறுமாறாக அடித்து தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டாள். அவ்வளவுக்கும் ராம் சிங், பொறுமையாக இருந்து, கிராமத்தினர் முன்னிலையில் மன்னிப்பு கேட்டான். "நான் செய்தது மகாபாவம், இனி இப்படிச் செய்ய மாட்டேன், என் மனைவியை நன்றாக காப்பாற்றுவேன்' என்று உறுதிமொழி தந்தான்.

அவனுடன் வந்த போலீஸ் அதிகாரி அனில் குமார் இவ்வளவையும் பார்த்து மவுனமாக இருந்து விட்டு, ராம் சிங் மனைவியிடம், "உன் கணவன் மீது எந்த வழக்கும் போடவில்லை. அவன் திருந்தி விட்டான். இனி தவறு செய்தால், என்னிடம் சொல், நடவடிக்கை எடுக்கிறேன்' என்று கூறினார்.

அதை ஏற்று, கணவனை, வீட்டுக்குள் அனுமதித்தாள் அவள். கிராமத்தினரும் நிம்மதியுடன் வீடு திரும்பினர்.

Thanks Big Grininamalar...
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
எரியும் கொள்ளிக்கட்டையுடன் பொங்கி எழுந்தாள் நவீன திரவுபதி - by SUNDHAL - 11-13-2005, 04:25 PM
[No subject] - by Vasampu - 11-13-2005, 04:44 PM
[No subject] - by SUNDHAL - 11-13-2005, 04:46 PM
[No subject] - by tamilini - 11-13-2005, 04:51 PM
[No subject] - by SUNDHAL - 11-13-2005, 04:54 PM
[No subject] - by Vasampu - 11-13-2005, 06:40 PM
[No subject] - by Rasikai - 11-13-2005, 07:47 PM
[No subject] - by ஈழமகன் - 11-13-2005, 07:50 PM
[No subject] - by வியாசன் - 11-13-2005, 08:34 PM
[No subject] - by kuruvikal - 11-13-2005, 08:41 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)