11-13-2005, 12:58 PM
thiru Wrote:நான் மிகவும் வேதனையுடன் இந்தப் பதிவினை மேற்கொள்ள முற்பட்டிருக்கிறேன்.
<b>காரணம் 1.</b>
இங்கு எழுப்பப்பட்ட ஒரு வினாவிற்கு எவருமே சரியாக விடையளிக்கவில்லை. அப்படியானால் முதலில் நாம் எம்மவர்கள் மத்தியிலேதான் விழிப்புணர்வுப் பிரசாரங்களைச் செய்யவேண்டுமா என்ற வினா எழுகிறது.
கேட்டகப்பட்ட வினா மிக முக்கியமானது. விடையோ மிக எளிதானது.
ஒருவர் தமிழர்தேசத்தின் நகர்வுகளை, அங்கிருந்து வரும் வெளியீடுகளைத் தொடர்ந்து கிரகித்துவருவாராயின் இந்தக் கேள்விக்கு விடையளிப்பது ஒரு பொருட்டல்ல.
<b>கேள்வி: </b>கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஏன் தமிழர் தாயகத்தினைச் சேர்ந்த மக்கள் வாக்களிக்குமாறு கோரப்பட்டனர்? ஏன் தற்போது வாக்களிக்காது தவிர்க்குமாறு வேண்டப்படுகிறார்கள்??
<b>விடை:</b> கடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தமிழ்க்கூட்டமைப்பு என்ன விடயங்களை முன்வைத்துத் தேர்தலில் மக்கள் முன் சென்றார்கள்?
தமிழர் தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றை உறுதிப்படுத்தியும், விடுதலைப் புலிகளே தமிழ் மக்களது பிரதிநிதிகள் என்பதை வலியுறுத்தியும் அவர்கள் மக்கள் முன் சென்றார்கள்.
அதனால் 'தமிழர்களது தாயகம், சுயநிர்ணய உரிமை என்பவற்றையும், தமிழ்மக்களுக்காகப் போராடும் சக்தி விடுதலைப் புலிகளே என்பதை சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்துவதற்காகவும் தமிழ் மக்கள் வாக்களிக்கச் செல்லவேண்டும்' என்று கோரப்பட்டனர்.
இங்கு இருந்தது தெளிவான அரசியல் இலக்கு. அதாவது சர்வதேச சமூகத்திற்கு தமிழர்களது அபிலாசை என்ன, கோரிக்கை என்ன என்பதை எடுத்துரைப்பதுதான் அந்த இலக்கு. மக்கள் திரண்டு வாக்களித்ததன் மூலம் அந்த இலக்கு எட்டப்பட்டது.
<b>அதுதவிர இந்த வாக்குகளால் வரும் பாராளுமன்றப் பதவிகளால் எமது சிக்கல் தீர்க்கப்படும் என்றோ, அல்லது ஏதாவது புதிதாக அதிசயம் நடக்கும் என்றோ எவரும் எதிர்பார்க்கவில்லை. அது நோக்கமும் அல்ல.</b>
ஆனால் இப்போது வந்திருப்பது சிறிலங்கா சனாதிபதிக்கான தேர்தல்.
<b>இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் மகிந்தருக்கு வாக்களித்தால் என்ன நடக்கும்?</b>
உடனே சர்வதேசம் புலிகளைப் பார்த்து 'தமிழர்கள் ஒற்றையாட்சிக்குள் தீர்வுகாண விரும்புகிறார்கள். எனவே மகிந்தர் தருவதைப் பெற்றுக்கொள்ளுங்கள். தமிழ்மக்களது ஆதரவு அவருக்கு இருப்பதால் அவர்களும் மகிந்தர் தரும் தீர்வை ஏற்றுக்கொள்வார்கள்' என்று சொல்லும்.
<b>சரி ரணில் ஐயாவுக்கு வாக்களித்தால் என்னவாகும்?</b>
அவர் ஏற்கெனவே 'சர்வதேச பாதுகாப்பு வலைப்பின்னலுக்குப் பெயர்போனவர்.' தற்போது சமாதான காவலராக நடிக்க முற்பட்டாலும், அவரது கூடாரத்திலிருந்தே நேற்றைய தினம் வெளியாகிய விடயம் ஒன்று அவரது வேடத்தை உறுதி செய்கிறது. அதாவது 'ரணில் பதவிக்கு வந்து விடுதலைப் புலிகள் அவர் சொல்வதைக் கேட்காமல் யுத்தத்திற்குப் போனால், இலங்கை இராணுவம் யுத்தம் செய்யாது. பதிலாக அமெரிக்க, இந்திய இராணுவங்களே புலிகளுடன் போரிடும்.' இவ்வாறு சொல்லியிருப்பவர் ஐ.தே.கவின் முக்கிய புள்ளியான நவீன் திசநாயக்கா!
அதனால் ரணிலிற்கு வாக்களித்தால் சர்வதேசம் புலிகளிடம் 'ரணில் தருவதை வாங்கிக்கொள்ளுங்கள். தமிழர்களது அமோக ஆதரவு அவருக்கு உண்டு. எனவே தமிழர்கள் அவர் தருவதற்கு மறுப்புச் சொல்லமாட்டார்கள்' என்று வேதம் ஓதுவார்கள்.
இதனால்தான் தற்போதும் எமது அரசியல் அபிலாசை என்ன என்பதைக் காட்டுவதற்குத் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும் என்ற கோரிக்கைகள் நாலாதிக்கிலிருந்தும் வருகின்றன.
'இந்தத் தேர்தலில் தமிழர்கள் வாக்களித்தால் அதனையே விடுதலைப் போராட்டத்தின் இராணுவப் பரிமாணத்தால் தமிழர்கள் பெற்ற பேரம்பேசும் வலிமையைச் சிதைப்பதற்காகச் சர்வதேசமும் சிங்களமும் பயன்படுத்தலாம்' என்ற சந்தேகத்தைத் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள்; எழுப்பிவருகிறார்கள்.
சர்வதேசத்திற்கும், சிங்களத்திற்கும் நாம் அரசியலிலும் ஏமாளிகள் அல்ல என்று நிரூபிப்பதற்கு இது நல்ல சந்தர்ப்பமாக வந்து வாய்த்துள்ளது. தேர்தல் புறக்கணிப்பு என்பதும் ஒருவிதத்தில் எமது இலக்கை அரசியல் ரீதியாக வலியுறுத்தும் ஒரு உத்தியே.
'தேர்தலைத் தமிழர்தேசம் புறக்கணிக்க வேண்டும்' என்ற கருத்து ஏறத்தாழ இரண்டு மூன்று மாதங்களின் முன்பே பல தமிழ்த் தினசரிகள், வார ஏடுகளில் அரசியல் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படத் தொடங்கியாகிவிட்டது.
இன்று திடீரென முளைக்கும் சுவரொட்டிகள் எவரால் வெளியிடப்படுகின்றன என்பது குறித்துப் பலத்த சந்தேகம் பலருக்கும் உண்டு. தமிழ் வாக்காளர்களை வாக்களிக்க வேண்டாம் என்றும், வாக்களிக்கும்படியும் நானாவித பிரசுரங்கள் அண்மைக்காலங்களில் தமிழர் தாயகத்தில் உலவிவருகின்றன.
பலநாட்களின் முன்பே ஊடகங்கள் வாயிலாக ஏன் இம்முறை வாக்களிப்பினைப் புறக்கணிக்க வேண்டும் என்பது குறித்து தமிழ் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டிருக்கும் இத்தருணத்தில் விடுதலைப் புலிகள் இந்தச் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.
மாறாக தமிழர் தாயக வாக்காளர்களைக் குழப்பத்திற்குள்ளாக்கி தமது அரசியல் நலன்களை அடைய முயற்சிக்கும் ஒரு தரப்பினர்தான் இவற்றின் பின்னால் இருக்கமுடியும்.
இங்கே ஒரு கேள்வி எழுப்பப்பட்டிருந்ததை அவதானித்தேன். <b>'ஒட்டியவர் யார் என்று தெரியாவிடின் ஏன் அதனை யாழ். தளத்தில் பிரசுரித்தீர்கள். இது என்ன குப்பைத்தொட்டியா?" </b>என்பதுதான் அந்தக் கேள்வி.
தமிழர்கள் இன்றிருக்கிற நிலையில் ஒட்டியவர் யார் என்று தெரிந்தால் அதுகுறித்து விவாதிக்கவேண்டிய அவசியமே இல்லை.
மாறாக பல்வேறு பன்னாட்டுப் புலனாய்வுப் பிரிவுகளும் இறங்கி விளையாடும் களமான யாழ்ப்பாணக் குடாநாட்டில் அனாமதேய சுவரொட்டி ஒட்டப்பட, அதனை இத்தளத்திலே போட்டு விவாதிப்பது என்பது மிகவும் அவசியமான ஒன்று. ஏனெனில் கேள்வி எழுப்பப்படும்போதுதான் அதற்குத் தகுந்த விடை கிடைக்கும்.
<b>காரணம் 2. </b>
இந்தச் சுவரொட்டி தொடர்பான விவாதம் இடையில் திசைமாறி எங்கெங்கோ தறிகெட்டுப்போனது.
தமிழ்நாட்டிலிருந்து வந்திருக்கிறார் என்றால் அவர் எமக்கு உறவுமுறையானவர். விருந்தினர். எதிரியின் து}துவனுக்குக் கூட மரியாதை செய்த பரம்பரையில் வந்தவர் நாங்கள். அப்படியிருக்க வந்த விருந்தினர் மனம்நோகும்படி செய்யக்கூடாதல்லவா.
எங்களைப் போலவே அவர்களும் நாட்டுப்பற்று மிகுந்தவர்கள். நாம் எப்படி எமது தாயகத்தை நேசிக்கிறோமோ அவ்வாறே அவர்களும் தமது தாயகத்தை நேசிப்பவர்கள். அதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.
அதேவேளை அவர்கள் தமது தலைவரது இழப்பிற்காக இன்றுவரை வருந்துவதுபோலவே நாமும் எமது தலைவர்களை,மக்களை, நட்புகளை இழந்து வருந்திக்கொண்டிருக்கிறோம் என்பதை நாம் தான் அவர்களுக்குச் சொல்லவேண்டும். 'அவர்கள் இழந்தது ஒருவரைத்தான். அந்த இழப்பின் வேதனை எமக்கும் நன்கு புரியும். ஏனெனின் அந்த ஒருவரால் நாம் பலரை இழந்தவர்கள்' என்பதை எங்களால்தான் அவர்களுக்குப் புரியவைக்க முடியும்.
அதேவேளை அவர்களுக்கு அங்குள்ள ஊடகங்கள் பிழையான தகவல்களை வழங்கி அண்டையிலுள்ள எம்மைப்பற்றிய மோசமான கருத்துலகத்தை அவர்கள் மத்தியில் உருவாக்கி வைத்துள்ளன.
இந்த நிலையில் அங்கிருந்து பேசும் ஒருவர் எதையாவது தவறாகப் புரிந்து கொண்டு சொல்லியிருந்தால், அதனை அவருக்குப் புரியும்படி எடுத்துச்சொல்வது எமது கடமை. அதை விடுத்து நாமும் எதிர்த்து நின்றால் ஒரு நல்ல நண்பரை நாமே எமக்கு எதிரியாக்கிக் கொள்ளும் முட்டாள்தனத்தினைச் செய்தவர்களாவோம்.
அப்படியானால்; எமது எதிரிகள் எதை விரும்புகிறார்களோ - அதாவது நாமும் தாய்த்தமிழகமும் பிரிந்தே இருக்கவேண்டும் என்பதை- அதை நாமே செய்து முடிக்கிற காரியத்தையல்லவா நாம் செய்ய முற்படுகிறோம்.
சுவரொட்டியில் தெரிவித்திருப்பது <b>சனநாயகமா</b> என்று அவர் கேட்டதற்குப் பதில் <b>'இல்லை"</b> என்பதுதான். அதைக் கூறிவிட்டு இந்தச் சுவரொட்டியை ஒட்டியவர்கள் குறித்த சந்தேகங்கள் உள்ளன என்பதை நாம்தான் அவருக்குப் புரியவைத்திருக்கவேண்டும்.
அடுத்து <b>சனநாயகத்தின் எல்லைகள் எவை, அவை எப்போது மீறப்படலாம்</b> என்பதை அவருக்கு எடுத்துச் சொல்லியிருக்கவேண்டும். 'அனைவருக்கும் பேச்சுச் சுதந்திரம் உண்டு என்பதற்காக தெருவீதியில் தாயாரை இழுத்துப் பழிபேசுபவனை அப்படியே விடுவதுதான் சனநாயகம் என்றால் அது எமக்குத் தேவையில்லை' அதுபோலவே 'வாக்களித்தால் எமது போராட்டத்தினால் இதுவரை நாம் அடைந்த பலன்கள் எம் கைநழுவிப்போகும் என்று எவராவது அதைத் தடுத்தால்- அப்படித் தடுப்பது சர்வாதிகாரம் என்று உலகம் சொன்னால் -அதுவே எமக்குத் தேவை!'
சனநாயகம் சனநாயகம் என்கிறார்களே உண்மையில் அதுதான் இவர்கள் சர்வாதிகாரம் என்று சொல்வதிலும்பார்க்கக் கொடுமையானது. எப்படி என்கிறீர்களா? 51 வீதம்பேரின் விருப்பங்களின் முன்பாக 49 வீதம் பேரின் விருப்பங்கள் நிராகரிக்கப்படுவதுதான் சனநாயகம். இங்கு சனநாயகம் தீர்மானிக்கப்படுவது அந்த மேலதிகமான 2 வீதம்பேரினால்.
<b>காரணம் 3:</b>
Vasampu Wrote:தூயவன்
தற்போது ஜனாதிபதித் தேர்தலின் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்கப் போவது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே. தமிழ் மக்களின் வாக்குகள் வெல்பவரின் வாக்கு வித்தியாசங்களை வித்தியாசப்படுத்த மட்டுமே உதவும். ஆனாலும் ஆயர்கள் சொல்வது போல் தமிழ் மக்கள் இத்தேர்தலை பகிஷ்கரித்தால் அது தேவையில்லாத விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். <b>அதனால் நிச்சயமாகத் தமிழ் மக்கள் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.</b>
<b>'தற்போதைய தேர்தலில் வெற்றிதோல்விகளைத் தீர்மானிக்கப்போவது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே"</b> என்ற ஒரு கருத்தை நண்பர் முன்வைத்தபோதும் எவரும் அதனை ஒட்டியோ வெட்டியோ ஆதாரபூர்வமான விவாதத்தை வளர்க்கவில்லை. அதாவது எப்படி இந்த முடிவிற்கு அவர் வந்தார் என்று அவரை யாரும் வினவவேயில்லை.
எனக்குத் தெரியக் கடைசியாக நேற்றுமாலை ஏவ்பி வெளியிட்ட செய்தியில் கூட 'இலங்கையின் சனாதிபதி யார் என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாகத் தமிழர்களது வாக்குகளே விளங்குகின்றன' என்ற சாரப்படக் குறிப்பிட்டிருந்தார்கள். (Sun Nov 6, 3:14 AM ET COLOMBO (AFP) - Sri Lanka's Tamil Tiger rebels have decided to remain neutral in the presidential election this month, a pro-rebel website reported <b>as minority Tamil voters emerged as potential king-makers</b>.) சிங்களதேசத்தின் அனைத்துப் பத்திரிகைகளும் தமிழர்தேசம் யாருக்கு வாக்களிக்கப்போகிறது என்பதை அறிய ஆலாய்ப்பறக்கிறார்கள். சிறிலங்காப் புலனாய்வுத்துறை தன் பங்குக்கு தலைப்போட்டு உடைத்துக்கொள்கிறது.
<b>'தற்போதைய தேர்தலில் வெற்றிதோல்விகளைத் தீர்மானிக்கப்போவது சிங்கள மக்களின் வாக்குகள் மட்டுமே" என்றால் -தமிழர் தேசத்தின் முடிவு யார் சனாதிபதியாவது என்பதைத் தீர்மானிக்கப்போவதில்லை என்றால்- ஏன் இப்படி அனைவரும் அந்தரிக்கிறார்கள்?</b>
உண்மையில் தமிழர்தரப்பின் முடிவு ஒருமித்து எடுக்கப்படுமானால்- கடந்த பொதுத்தேர்தல் போல விடுதலைப்புலிகள் எவருக்காவது வாக்களிக்கச் சொல்வார்களானால் -அதன் தாக்கம் தமிழர் தாயகத்தையும் கடந்து முழு இலங்கைத்தீவிலுமுள்ள அனேக தமிழ் வாக்குகளில் காணப்படும் என்பதை இந்தத் தேர்தலில் தொடர்புடைய சகலரும் அறிவர்.
அதனால் தான் தமிழ் வாக்காளர்களைக் குழப்பியடிக்கவும், அச்சத்தில் ஆழ்த்தவும் திட்டமிட்ட செயற்பாடுகளில் அவர்கள் இறங்கியிருக்கிறார்கள். இப்படிக் குழப்பங்களில் ஈடுபடுவர்களது எண்ணம் 'இறுதி நேரத்தில் எங்கே புலிகள் ரணிலுக்கு ஆதரவளிக்கச் சொல்லிவிடுவார்களோ' என்பதுதான்.சுவரொட்டிக் குழப்பங்கள், கைக்குண்டெறிதல்கள் என்பவற்றின் பின்னணியில் இருப்பவர்களும் இவர்கள்தான்.
சரி. தமிழர் வாக்குகள் சனாதிபதியைத் தீர்மானிக்கும் என்பதற்கு என்ன ஆதாரம் என்கிறீர்களா. இதோ இறுதியாக இலங்கையில் (1999ல்) நடைபெற்ற சனாதிபதித் தேர்தல் முடிவுகளைப் பாருங்கள்.
<img src='http://img450.imageshack.us/img450/6673/19cc.jpg' border='0' alt='user posted image'>
இதில் தமிழர் தேசத்தின் மொத்த வாக்குகளும் ரணிலுக்கு அளிக்கப்பட்டிருப்பின் ரணிலே சனாதிபதியாக வந்திருப்பார் என்பதை நீங்கள் அவதானிக்கலாம்.
ரணில் பெற்ற சிங்களப் பிரதேச வாக்குகள் <b>3233684 </b>
சந்திரிகா பெற்ற சிங்களப் பிரதேச வாக்குகள் <b>3978653</b>
தமிழர்தாயகத்தில் போட்டியிட்ட அனைத்து
வேட்பாளர்களுக்கும் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் <b>757979</b>
<b>இந்த தமிழர் தேச வாக்குகளை சிங்களதேசத்தில் ரணில் பெற்றவைகளுடன் கூட்ட வருவது 3991663</b>
தவிர, தமிழர் தாயகத்தின் வாக்காளர்களில் ஏறத்தாள அரைப்பங்கினரே 1999ல் வாக்களிப்பில் பங்கெடுத்திருக்கிறார்கள்.
தமிழர் தாயக வாக்காளர் மொத்த எண்ணிக்கை <b>1634125.</b> இதில் 1999 தேர்தலில் வாக்களித்துள்ளவர்களது மொத்த எண்ணிக்கை <b>757979.</b> எனவே தமிழர் தாயக வாக்குகள் ஆகக் கூடியளவில் பயன்படுத்தப்படுமாயின், அதுவும் ஒரு குறித்த நபருக்காகப் பயன்படுத்தப்படுமாயின் அவர் வெல்லுவதற்கே வாய்ப்புகள் உண்டு.
இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது தனியே தமிழர்தாயக வாக்குகள். விடுதலைப்புலிகள் நேரடியாக வேண்டுகோள் விடுத்திருந்தால் இலங்கைத்தீவின் ஏனைய பகுதித் தமிழர்களும் பெருமளவில் ரணிலுக்கே வாக்களித்திருப்பர் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.
இறுதியாக ஒரு வேண்டுகோள்! விவாதங்களை நாம் அவதானமாக மேற்கொள்வோமாயின் அது எமது தேசத்திற்கு நாம் செய்யும் பேருதவியாக அமையும் என்பது எனது பணிவான கருத்து. காரணம் இது ஒரு பொதுத்தளம். அதாவது கண்ணாடி போல என்று வைத்துக்கொள்வோம். இந்தக் கண்ணாடி வழியாகத் தான் அனேகமானவர்கள் - இந்தத் தமிழக நண்பரைப்போல- எமது தேசத்தைப் பார்க்கப்போகிறார்கள். கண்ணாடியில் மாசு படிந்தால் அதனு}டாகத் தெரியும் தேசமும் அவ்வாறுதான் தென்படும்.
<b>அன்புடன் திரு</b>
நன்றி திரு மிகவும் அவசியமான கருத்தினை பகிர்ந்து கொண்டமைக்கு. இதுபோன்ற கருத்துக்கள் அவ்வப்போது யாழ்க்களத்திற்கு தேவைப்படுகின்றது. சிரமங்கள் பாராது வாருங்கள் உங்கள் கருத்துக்களைத்தாருங்கள்.

