Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
முத்தம்
#1
<img src='http://img369.imageshack.us/img369/5954/kathai1243jl.jpg' border='0' alt='user posted image'>
"மம்மி, மைடியர் மம்மி...." என்று குதித்து கொண்டே வந்த வாணியின் கைகளில் கோவை டவுண்ஹாலில் பிரபலமான ஜவுளிக்கடையின் பாலீதீன் பை. பையிலிருந்து தான் எடுத்து வந்த புது சுடிதாரை எடுக்க... பிïட்டிபுல்" என்றாள் அம்மா.

"வாணி உன் கலருக்கு மேட்ச்சாக சுடிதார் இருக்கு ஆமா என்ன விலை" அம்மா ஜான்ஸி கேட்க, ஒன் தவுசன் பைவ் கண்ட்ரடுஸ் என வாணி சொல்ல "விலைக்கேற்ற சுடிதார். நீ இத போட்டு கிட்டா தேவதை மாதிரி ஜொலிப்பே" என அம்மா சொன்னார்.

இந்த சுடிதாரை போடலைனா நான் தேவதை இல்லையா? என வாணி அம்மாவிடம் கேட்க புதுசுடிதாரை நீ போட்டு கிட்டாலும் போடாவிட்டாலும் நீ தேவதைதான் என் அம்மா சொல்ல... ஐஸ் ரொம்ப ஒவர் மம்மி? என வாணி சொல்ல... ஐஸ்ம் இல்ல.... நைஸ்ம் இல்ல... என்ற அம்மா ஆமா ராணியை எங்கே? என்று கேட்டார்..

அவள் இன்னும் வரலையாமா? காந்திபுரம் கிராஸ் கட்ல புதுசா ஒரு ஜவுளி கடை திறந்திருக்காங்கல்ல அங்கே போயி எடுத்துக்கறேனுட்டு போயிட்டா என்றாள் வாணி "ஏம்மா வாணி அக்காவும் தங்கையும் ஒண்ணா போயி ஒரே கடையில புது துணி எடுத்துட்டு ஒண்ணாகவே வரலாமில்ல... நீ ஒரு திசையில் போயி துணி எடுத்துட்டு வந்திருக்கே... அவ ஒரு திசையில போயி துணி எடுக்க போயிருக்கா.. என்னம்மா இது? என சலித்துக் கொண்டாள் ஜான்ஸி

நீ போம்மா... அவதான் என்னை வாலண்டரியா கட் பண்ணி விட்டுட்டு... புது கடை தேடி போயிருக்கா... நா ஒண்ணும் அவள கட்பண்ணி விடல... என பொய்யாய் கோபிக்க... கோபத்திலும் நீ ரொம்ப அழகா இருக்கே என அம்மா ஜான்ஸி சொல்ல மீண்டும் ஐஸா... என்ற படி புதுடிரஸ்ஸோடு வீட்டிற்குள் சென்றாள் வாணி!

வாணியும்.... ராணியும் இரட்டை பிறவிகள். வாணி அக்கா ராணி தங்கை. விடிந்தால் இருவருக்கும் பிறந்த நாள். ஆண்வாரிசு இல்லை என்பதால் வாணிக்கும், ராணிக்கும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார்கள். ஒவ்வொரு வருட பிறந்த நாளும் அமர்க்களமாய் நடக்கும்.

புது துணி இல்லாமல் பிறந்த நாள் கொண்டாடியதே இல்லை. வாணியும், ராணியும் சிறு பிள்ளைகளாக இருக்கும் பொழுது புது துணிகளை அம்மாவே தேர்வு செய்வாள் இப்பொழுது இருவரும் மேஜராகி விட்டதால்... புது டிரஸ்ஸை அவர்களே தேர்வு செய்து கொள்கிறார்கள். நவ நாகரீக உலகம் இது.

ராணி... கையில் துணி பார்சலுடன் வந்தாள் அம்மா அக்கா வந்துட்டாளா? என கேட்க... ஆமா இப்பத்தான் வந்தாள் என சொன்ன அம்மா எங்கே நீ எடுத்துட்டு வந்திருக்கிற புது டிரஸ்ஸை காட்டு பார்க்கலாம் என்க.. இப்ப பார்க்க வேண்டாம். நாளை காலையில் நான் டிரஸ் பண்ணிட்டு வரும்போது பாருமா அப்பத்தான் ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும் என்றபடி உள்ளே சென்றாள் ராணி!

பொழுது விடிந்தது. தூங்கி கொண்டிருந்த மகள்கள் இருவரையும் எழுப்பி... கன்னத்தில் இதழ்பதித்து இச் ஒன்று கொடுத்து ஹேப்பி பர்த்டே சொன்னார்கள் பெற்றவர்கள். இருவரும் குளித்து முடித்தார்கள் வாணி தன் புது சுடிதாரை அணிந்தபடி வந்தாள். ராணி சென்ற பிறந்த நாளுக்காக எடுத்த பழைய சுடிதாருடன் வர ஏம்மா.. ராணி... கேக் ரெடியா இருக்கு... அக்கா புது சுடிதார் போட்டுட்டு வந்துட்டா நீயும் போயி-நீ எடுத்த உன் புது சுடிதாரை என அம்மா சொல்ல...

ராணி... தயங்க.... ஏம்மா ராணி.. புது சுடிதார் போடலையா? என கேட்க...

இல்லேம்மா என ராணி சொன்னாள். ஏம்மா என அம்மா திருப்பி கேட்க...

புது சுடிதார்தான் எடுக்கலையே என ராணி சொல்ல..

எடுக்கலையா? ஏம்மா நீ எடுக்கல்ல... நேற்று நீ கொண்டு வந்த பார்சல்?

அது வெறும் துணிபைமா? அப்போ பணம்?

அந்த பணத்தை தெரெசா அனாதை இல்லத்திற்கு கொடுத்திட்டேம்மா. எங்கள் பிறந்த நாளை முன்னிட்டு எனக்கு எடுக்க விருத்த புது டிரஸ் பணத்தில அங்க இருக்கிற அனாதை குழந்தைகள் வடை-பாயாசத்தோடு அறுசுவை உணவை இன்றைக்கு சாப்பிடும். ஏம்மா ஏற்கனவே பெட்டி நிறைய துணி மணிகள் எனக்கு இருக்கு.

நம்ம போல உள்ள வசதி உள்ளவங்க கருணை காட்டினால்... அதாவது பிறந்த நாள் திருமண நாள் முதியோர்களின் நினைவு நாள் என இந்த நாட்களில் ஒரு தொகையை கருணை இல்லங்களுக்கு கொடுத்தால்... அங்குள்ள அனாதைப் பிள்ளைகள் வயிறாற உண்பார்கள்தானே..? அதுவே பெரிய ஆசீர்வாதம் தானே ? என்ற ராணி.. தொடர்ந்து... நான் செய்தது தப்பாமா? என கேட்க....

இல்லேம்மா... என அம்மாவும், அப்பாவும் சொல்ல..

அதுமட்டுமில்லைமா... என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் எடுக்கற புது டிரஸ் பணத்தை அனாதை இல்லத்திற்கே தந்திட முடிவு செய்திருக்கேன் என ராணி சொல்ல...

தன் செல்ல மகளின் கருணை உள்ளத்தை மெச்சி அவள் கன்னத்தில் இச் ஒன்றை தர.. இதமாய் இருந்தது ராணிக்கு.

தாதன்குளம் ஜுலியட் டேனியல்,
நன்றி மாலைமலர்
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
முத்தம் - by Rasikai - 11-12-2005, 09:00 PM
[No subject] - by RaMa - 11-14-2005, 07:02 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)