11-12-2005, 08:36 PM
<b>விஷூவல் பேசிக் ஏன் ஒரு சிறந்த மொழி?</b>
விஷூவல் பேசிக் மற்ற கணினி மொழிகளை விட எளிதாக கற்றுக் கொள்ளவும், விரைவாக பயன்படுத்தவும் தகுந்த வசதிகளை கொண்டுள்ளது என்பதனாலேயே இன்று பலர் இந்த மொழியைப் பயன்படுத்தி ஆர்வமுடன் பல மென் பொருள்களை உருவாக்குகிறார்கள்.
சாதாரணமாக புரோகிராம் எழுதும் போது ஏதாவது தவறு நேர்ந்தால் அதை சரியான முறையில், சரியான நேரத்தில் சுட்டிக்காட்டும் கணினி மொழிதான் உபயோகிப்பாளர்களிடம் அதிகம் வரவேற்பை பெறும். அந்த வரிசையில் இந்த விஷூவல் பேசிக் (VB) தவறுகளை சரியாக சுட்டிக்காட்ட வல்ல ஒரு நல்ல மென் பொருள் ஆகும்.
மேலும், C, C++ மற்றும் ஜாவா போன்ற கணினி மொழிகளைப் பயன்படுத்தி புரோகிராம் எழுதும் போது, அவற்றில் ஏதேனும் தவறுகள் இருக்கிறதா என்று அறிய அதை Compile செய்து பார்க்க வேண்டும். அதாவது Compile செய்யும் போதுதான், புரோகிராம் வரிகளை ஒவ்வொன்றாகப் படித்து தவறுகளை அறிய முடியும்.
அவ்வாறு சுட்டிக்காட்டும் ஒவ்வொரு தவறுகளையும் சரி செய்த பிறகு மீண்டும் Compile செய்து பார்க்க வேண்டும். இப்படிச் செய்து கொண்டே இருக்கும் போது தவறுகளே இல்லை என்ற நிலை வரும் போது அந்த புரோகிராம் இயக்குவதற்கு சரியான நிலையில் இருக்கும். இவ்வாறு செய்வதால், ஒரு புரோகிராமை இயக்க அதிக நேரம் பிடிப்பதோடு, உபயோகிப்பாளர்கள் சற்று மனம் தளர வாய்ப்பை ஏற்படுத்தும்.
ஆனால் விஷூவல் பேசிக் புரோகிராம் எழுதும்போது ஏதாவது தவறு நேர்ந்தால் அதை உடனடியாக உபயோகிப்பாளருக்கு சுட்டிக்காட்டி, தவறுகளை அப்பொழுதே மாற்றியமைத்துக் கொள்ள இது வழி வகுக்கிறது.
சாதாரணமாக விஷூவல் பேசிக் புரோகிராம் எழுதுபவர்கள் "Syntax Error" என்று சொல்லக்கூடிய சொற்கள் சம்பந்தமான சிறிய தவறுகளைத்தான் அதிகம் செய்வார்கள். இது போன்ற தவறுகளை நாம் புரோகிராம் உருவாக்கும் போதே சரி செய்து கொள்ள முடியும். மேலும் புரோகிராமை இயக்கும் போது சில Logical Error என்று சொல்லக்கூடிய இலக்கணப் பிழையைச் செய்ய நேரிடும். இது போன்ற தவறுகளையும் விஷூவல் பேசிக் சரியான முறையில் சுட்டிக்காட்டி, அதனைச் சரி செய்ய உதவி செய்யும்.
இவ்வாறு எளிய முறையிலான பல வசதிகளைப் பெற்றிருப்பதாலும், உபயோகிப்பதற்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் பல பண்புகளைக் கொண்டிருப்பதாலும் இன்று இந்த மொழி அனைத்து தரப்பு கணினி உபயோகிப்பாளர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்று விளங்குகிறது.
விஷூவல்பேசிக் இயக்க பயன்படும் CLIENT/SERVER என்ற தொழில் நுட்பம் பற்றி கீழே காணலாம்.
CLIENT/SERVER தொழில் நுட்பம்
நாம் கம்ïட்டரை பயன்படுத்தும் போது ஒரு மென்பொருள் சம்பந்தமான இரண்டு வேலைகளைச் செய்ய வேண்டுமானால், அதற்கு இந்த CLIENT/SERVER என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு முதலாளி பல தொழிலாளிகளைக் கொண்டு அலுவலகங்களில் பல வேலைகளைச் செய்வது போல், கணிப்பொறித் துறையிலும், ஒரு முதலாளி (SEVER) கம்ப்ïட்டர் பல தொழிலாளி (CLIENT) கம்ப்ïட்டர்களை தன்னுடன் இணைத்து பல வேலைகளை ஒரே நேரத்தில் இயக்க உறுதுணை புரியும்.
இகஐஉசப என்னும் கம்ப்ïட்டர் மூலம், சர்வர் (SEVER) என்னும் கம்ப்ïட்டரில் உள்ள தகவல்களையோ, அல்லது புரோகிராம்களையோ தேவையான போது எடுத்துக் கொள்ளவும், அதனை இயக்கவும் முடியும். இது போன்ற CLIENT கம்ப்ïட்டர்கள் சில சமயம் பல மைல்களுக்கு அப்பால் கூட இருக்கும். ஆனாலும் அதிக தொலைவை பொருட்படுத்தாமல் SEVER கம்ப்ïட்டரில் உள்ள தகவல்களை எடுத்து செயலாற்ற முடியும்.
ஒரு SEVER கம்ப்ïட்டரானது CLIENT கம்ப்ïட்டரின் தன்மையையும், அதற்கு தேவையான தகவல்களையும் மற்றும் அவற்றுக்கு தேவையான மென்பொருள்களையும் வைத்து தன்னிடம் உள்ள புரோகிராம்களையோ, அல்லது பைல்களையோ (FILE) பகிர்ந்து அளிக்கும் (DISTRIBUTED SYSTEM) இது போன்று உள்ள தொழில் நுட்பத்தால் தகவல்களை அனுப்பும் போது NETWORK TRAFFIC வெகுவாக குறைக்கப்படுகிறது.
ஏனென்றால், ஒவ்வொரு CLIENT கம்ப்ïட்டரும் தனக்கு தேவையான புரோகிராம்களையும், பைல் (FILE) மற்றும் தகவல்கள் (DATA) அனைத்தையும் பெற்றுக் கொண்ட பிறகுதானே அனைத்தையும் இயக்கிக் கொள்கிறது.
மேலே உள்ள வரைபடத்தில் (படம்-2) உள்ளபடி ஒரு CLIENT தனது தேவைகளை கேள்விகள் (QUERY) மூலமாக SERVER கம்ப்ïட்டருக்கு அனுப்பும். அனைத்து விதமான கேள்விகளுக்கும், SERVER கம்ப்ïட்டர் பதிலை கொடுக்கும். ஒருவர் தனக்கு தேவையான புரோகிராமை எழுதி, அதனை CLIENT கம்ப்ïட்டரில் பதிவு செய்து வைத்து இயக்கினால் அது CLIENT புரோகிராம் எனவும், புரோகிராம்களை எழுதி அதை NETWORK மூலம் இயக்கினால் அதை SERVER புரோகிராம் எனவும் அழைக் கலாம்.
ஒரு சரியான CLIENT/SER VER தொழில் நுட்பம், எவ்வாறு SERVER உதவியுடன் இயக்கப்படுகிறது என்பதை அருகில் உள்ள படத்தில் (படம்-2) காணலாம். இந்த முறை மூலம் ஒரு நிறுவனத்தின் கம்ப்ïட்டரில் உள்ள APPLICATION அதாவது அந்த நிறுவனத்தின் இயங்கும் மென்பொருள் தனக்கு தேவையான தகவல்களை, SERVER கம்ப்ïட்டரிடம் கேட்கும் பொழுது, அதை SERVER கம்ப்ïட்டர், பைல்களை பாதுகாத்து வைத்திருக்கும் APPLICATION-க்கு சென்று எடுத்து CLIENT அந்த APPLICATION இயக்கும் போது வழங்குகிறது.
CLIENT/SERVER அமைப்பு
இந்த CLIENT/SERVER அமைப்பு இரண்டு வகையாகப் பிரிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
1. 2 அடுக்கு அமைப்பு (TWO-TIER ARCHITECTURE)
ஒரு CLIENT கம்ப்ïட்டரானது SERVER கம்ப்ïட்டருடன் நேரிடையாக தொடர்பு கொள்ளும் முறைதான் இரண்டு அடுக்கு அமைப்பு என்றழைக்கப்படுகிறது. ஏனென்றால் இவை இரண்டிற்கும் இடையே எந்த விதமான இடைப்பட்ட பாகங்களும் இல்லை. இது போன்ற முறையினால் அதிக அளவிலான பலன்களை பெற முடியாது ஏனென்றால் எல்லா விதமான கேள்விகளுக்கும் மற்றும் அனைத்து விதமான வேலைகளையும் இவை இரண்டும் நேரிடையாகவே செய்வதால் மென்பொருள்களில் ஏற்படும் சில மாற்றங்களை இவற்றால் சரி வர செய்ய முடிவதில்லை.
2. மூன்று அடுக்கு அமைப்பு (3-TIER ARCHITECTURE)
இந்த முறை மூலம் ஒரு CLIENT கம்ப்ïட்டருக்கும் மற்றும் SERVER கம்ப்ïட்டருக்கும் இடையில் Transation Server என்ற ஒரு இணைப்பு மென்பொருள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மென் பொருள் மூலம் SERVER கம்ப்ïட்டரையும்,CLIENT கம்ப்ïட்டரையும் எல்லா விதமான வேலைகளுக்கும் சரியான முறையில் இயக்க உதவுகிறது.
இவற்றில் முதல் அடுக்கு என்பது CLIENT, இரண்டாவது அடுக்கு என்பது SERVER ஆகவும், மூன்றாவது அடுக்கு SERVER என்பது MIDDLE WARE என்றும் அழைக்கப்படுகிறது. அதாவது CLIENT கம்ப்ïட்டரில் Wep Browser போன்ற மென்பொருளையும், SERVER கம்ப்ïட்டரில் DBMS போன்ற SOL SERVER மென் பொருள்களையும், இவை இரண்டையும் இணைக்கும் இடைப் பட்ட அடுக்கு மென் பொருளாக Activeserver page scripts போன்றவையும் பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற CLIENT/SERVER முறையில் இயங்கும் கம்ப்ïட்டர் மையங்களில்தான் இந்த விசுவல் பேசிக் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
SERVER என்பது என்ன?
ஒரு SERVER என்பது NETWORK என்ற இணைப்பு மூலம் பல கம்ப்ïட்டர்களை (CLIENT) இணைத்து, அவற்றிற்கு தேவையான பல தகவல்களையும், உதவிகளையும் வழங்குவதோடு, அவற்றிற்கு பாதுகாப்பும், கட்டுப்பாடும் விதித்து ஒரு நல்ல தலைவனாகவும், முதலாளியாகவும் செயல்படும் ஒரு கம்ப்ïட்டர் ஆகும். இந்த SERVER ஆனது பல வகைகளாக பிரிக்கப்பட்டு, செயல்படுத்தபப்படுகிறது. உதாரணமாக FILE SERVER , APPLICATION SERVER, DATA BASE SERVER, E-MAIL SERVER மற்றும் COMMUNICATION SERVER போன்றவைகளாகும். இது போன்ற SERVER-L NETWORK மூலம் பல CLIENT கம்ப்ïட்டர்களை இணைத்து NETWORK ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் அனைத்து வேலைகளையும் செய்கிறது. தற்சமயம் அதிக உபயோகத்தில் உள்ள NETWORK OPERATING SYSTEM -கள் யாதெனில் NOVELL NET WARE, WINDOWS NT மற்றும் UNIX போன்றவைகளாகும். VB SCRIPT என்ற மென்பொருள் உதவியுடன்,ஒரு SERVER ஆனது ACTIVE SERVER PAGE(ASP) என்ற ஒரு பகுதியை உருவாக்கி எல்லாவிதமான CLIENT கம்ப்ïட்டர்களுடனும் தொடர்பு கொண்டு, அவற்றின் INPUT சம்பந்தமான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கிறது.
CLIENT என்றால் என்ன?
ஒரு CLIENT என்பது NETWORK என்ற இணைப்பு மூலம் இணைக்கப்பட்டுள்ள ஒரு கம்ப்ïட்டர் ஆகும். மேலும் ஒவ்வொரு CLIENT கம்ப்ïட்டரும் தனக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள WINDOW மூலம் தகவல்களை அளிக்க முடியும். ஒரு நிறுவனத்திற்கு தேவையான மென்பொருள் ஒன்றை தயாரிப்பதாக வைத்துக் கொண்டால் அந்த மென்பொருளுக்கு தேவையான INPUT சம்பந்தமான தகவல்களை FORM என்று சொல்லக் கூடிய தகவல்களை அளிக்கும் திரைகளை உருவாக்குவதற்கும் இது பயன்படும். மேலும் விஷூவல் பேசிக் 6.0 என்ற மென்பொருள் மூலம் ஒரு CLIENT தனக்கு வேண்டிய அளவில் கம்ப்ïட்டர் திரையை மாற்றியமைத்து பல கட்டளைகளைப் பிறப்பித்து, அதிக அளவிலான பல வேலைகளைச் செய்ய முடியும்.
பேராசிரியர்.
சூ.ஆரோக்கியசாமி,
நன்றி மாலைமலர்

<b> .. .. !!</b>