Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணனி மொழிகள் (Program)
#16
<b>விஷுவல் பேசிக் (VB) செயல்படும் முறை</b>

சாதாரணமாக கம்ப்ïட்டர் மொழிகளை Procedure Oriented மற்றும் Object Oriented என்று 2 வகைகளாகப் பிரிக்கலாம். Procedure Oriented என்ற முறையில் ஒரு புரோகிராமில் உள்ள முதல் வரி முதல் கடைசி வரி வரை அனைத்தும் சேர்ந்து பல வேலைகளை ஒன்றாகச் செய்யும்.

ஆனால் இந்த விஷுவல் பேசிக் (VB) என்பது Object Oriented என்ற முறையை பின்பற்றி, கொடுத்த வேலையை மட்டும் செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனையே Event Driven Program என்று அழைக்கிறோம். அதாவது, ஒரு வேலையைச் செய்ய, சிறிய அளவிலான புரோம்கிராம் வரிகளை எழுதி செயல்பட வைக்க முடியும்.

விஷுவல் பேசிக் (VB) வரலாறு

1990-ம் ஆண்டுதான் முதன் முதலில் விஷுவல் பேசிக் (VB) என்கிற கணிப்பொறி மொழி உலகில் அறிமுகப்படுத்தப்பட்டது. முதலில் வெளிவந்த இந்த விஷுவல் பேசிக் (VB), VB 4.0 என்று அழைக்கப்பட்டது. இதன் ஆரம்ப கால கட்டத்திலேயே, அதிக அளவிலான புரோகிராமர்களையும், பயன்பாட்டாளர்களையும் கவர்ந்து இழுத்த பெருமை இந்த விஷுவல் பேசிக்குக்கு (VB) உண்டு. இந்த விஷுவல் பேசிக் (VB)-யைக் கொண்டு மிக விரைவாக மென் பொருட்களைத் தயாரிக்கும் பண்புகள் உள்ளதால் இதனை Rapid Application Development (RAD) SYSTEM என்றும் அழைக்கலாம்.

ஒரு கால கட்டத்தில் C அல்லது C++ போன்ற கணிப்பொறி மொழிகளை உபயோகித்து புரோகிராம்களை எழுதினால், Mouse போன்ற Input Device கொண்டு Click செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் நூற்றுக்கணக்கான வரிகளைக் கொண்டு புரோகிராம் எழுத வேண்டும். ஆனால் இந்த விஷுவல் பேசிக் வெளிவந்த பிறகு, இரண்டே வரிகளில் புரோகிராம் எழுதி அதே வேலைகளைச் செய்யும் விதமாக அமைந்துள்ளது.

இன்று பரபரப்பாக பேசப்படும் சி-ஷார்ப் (C#) போன்ற மென் பொருட்கள் விஷுவல் பேசிக் என்ற மொழியின் அடிப்படை கட்டமைப்பை கொண்டே அமைந்துள்ளது. இனிவரும் காலங்களில் அனைத்து விதமான மக்களும் இந்த விஷுவல் பேசிக்தான் உபயோகிப்பார்கள் என்ற நிலையையும் இன்று மக்கள் மனதிலே ஏற்படுத்தியுள்ளது.

இந்த VB வெளிவருதற்கு முன் FOXBASE மற்றும் FOXPRO என்ற மென் பொருட்களே மிகவும் பிரபல மடைந்து காணப்பட்டது. அதன் பின்னர்தான் இந்த விஷுவல் பேசிக் மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுவிட்டது. இன்று எந்த விதமான கணிப்பொறி சம்பந்தப்பட்ட நிறுவனத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்கள் அனைவரும் அதிகம் ஆர்வம் காட்டுவது இந்த விஷுவல் பேசிக்தான்.

ஒரு கல்லூரியிலோ அல்லது கணிப்பொறி பயிற்றுவிக்கும் கணிப்பொறி மையங்களிலோ சரி, இன்றைய மாணவ, மாணவிகள் அதிகம் ஆர்வம் காட்டுவது இந்த விஷுவல் பேசிக் (VB) படிப்புக்குத்தான். குறிப்பாக C# மற்றும் விஷுவல் பேசிக் (VB) படிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்காக உயர்ந்துள்ளது. இதன் எளிமையான வேலைப்பாடுகளும், எளிதில் கற்றுக்கொள்ள வசதியாக இருப்பது மட்டும் காரணமல்ல.

மாறாக அதிக அளவிலே வேலை வாய்ப்புகள் பெற்றுத் தருவதும் இதன் முக்கிய காரணமாகும். இன்று கணிப்பொறித்துறையிலே பலவிதமான பட்டப்படிப்புகளும், பட்ட மேற்படிப்புகளும் இருந்து வந்தாலும், இவையனைத்திலும் விஷுவல் பேசிக் (VB) கட்டாயமாக பயன்படுத்தப்படும் வகையிலேதான் பாடத்திட்டங்கள் கூட அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விஷுவல் பேசிக் (VB)-கை தொடர்ந்து விஷுவல் ஸ்டூடியோ 7 என்ற மென் பொருள் மக்களை அதிகம் கவர்ந்துள்ளது. இது ஒரு விஷுவல் பேசிக்-ன் அடுத்த வாரிசாக கருதப்படுகிறது. இதனைத் தொடர்ந்து VB.Net என்ற மென்பொருளும் தற்போது அதிகம் பிரபலமடைந்து காணப்படுகிறது. இன்று பல்கலைக்கழக பாடத்திட்டமாக இருந்தாலும் சரி, கணிப்பொறிப் பயிற்சிகளை அளிக்கும் பயிற்சி நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அதிகம் அவர்கள் முன்னுரிமை கொடுத்து மாணவர்களை படிக்கச் செய்வது இந்த .Net என்ற தொழில் நுட்பத்தைத்தான்.

பேராசிரியர்.
சூ.ஆரோக்கியசாமி,
நன்றி மாலைமலர்
<b> .. .. !!</b>
Reply


Messages In This Thread
[No subject] - by Rasikai - 10-08-2005, 02:13 AM
[No subject] - by kurukaalapoovan - 10-08-2005, 02:53 AM
[No subject] - by Rasikai - 10-09-2005, 06:43 PM
[No subject] - by tamilini - 10-09-2005, 08:24 PM
[No subject] - by தூயா - 10-09-2005, 10:49 PM
[No subject] - by Rasikai - 10-09-2005, 11:09 PM
[No subject] - by paandiyan - 10-10-2005, 01:45 AM
[No subject] - by kurukaalapoovan - 10-10-2005, 05:23 PM
[No subject] - by tamilini - 10-10-2005, 07:13 PM
[No subject] - by kurukaalapoovan - 10-10-2005, 07:20 PM
[No subject] - by tamilini - 10-10-2005, 07:23 PM
[No subject] - by Rasikai - 10-10-2005, 08:42 PM
[No subject] - by Rasikai - 10-14-2005, 10:06 PM
[No subject] - by Rasikai - 11-12-2005, 06:17 PM
[No subject] - by Rasikai - 11-12-2005, 06:47 PM
[No subject] - by RaMa - 11-12-2005, 06:48 PM
[No subject] - by Rasikai - 11-12-2005, 08:36 PM
[No subject] - by Rasikai - 11-12-2005, 08:45 PM
[No subject] - by shobana - 11-16-2005, 02:44 PM
[No subject] - by AJeevan - 11-16-2005, 03:08 PM
[No subject] - by Rasikai - 12-20-2005, 04:01 PM
[No subject] - by Snegethy - 12-20-2005, 05:33 PM
[No subject] - by shobana - 12-20-2005, 08:26 PM
[No subject] - by Snegethy - 12-20-2005, 08:30 PM
[No subject] - by Rasikai - 12-20-2005, 11:26 PM
[No subject] - by RaMa - 12-20-2005, 11:34 PM
[No subject] - by paandiyan - 12-21-2005, 02:16 AM
[No subject] - by Rasikai - 12-21-2005, 05:42 AM
[No subject] - by paandiyan - 12-23-2005, 02:54 AM
[No subject] - by shobana - 12-23-2005, 03:02 PM
[No subject] - by Rasikai - 12-23-2005, 03:16 PM
[No subject] - by paandiyan - 12-27-2005, 05:17 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)