11-12-2005, 06:17 PM
<b>விஷுவல் பேசிக் (VB) - ஓர் அறிமுகம்</b>
கணிப்பொறித்துறையில் இன்று பலரது கவனத்தையும் ஈர்த்து, பலராலும் உபயோகிக்கப்பட்டு வரும் ஒரு மென்பொருள்தான் இந்த விஷுவல் பேசிக் (VB). இன்றும் பலர் இந்த மென் பொருளை உபயோகிப்பதன் ரகசியம் இதன் எளிமையும், சகல வசதிகளையும் பெற்று, தேவைக்கேற்ப உபயோகப்படுத்தப்படும் அதன் வளைந்து கொடுக்கும் தன்மையும்தான்.
விஷுவல் பேசிக் (VB) செயல்படும் முறை
விஷூவல் பேசிக் ஏன் ஒரு சிறந்த மொழி?
விஷூவல் பேசிக் மூலம் மென்பொருள் தயாரிக்கும் முறை
யஆ உபயோகிக்கும் முறை
விசுவல் பேசிக் வசதிகள்
புரோகிராம் எழுதும் முறை
கல்லூரியில் படிக்கும் மாணவர்களாக இருந்தாலும் சரி. கணிப்பொறி நிறுவனங்களாக இருந்தாலும் சரி. அனைவரும் பயன்படுத்தும் ஒரு மென்பொருள் இந்த விஷுவல் பேசிக் (VB) தான். ஏனென்றால் எந்த விதமான Project தயாரிக்க வேண்டுமானாலும் எந்தவிதமான அலுவலகமாக இருந்தாலும், எப்படிப்பட்ட அடிப்படையில் தகவல்கள் இருந்தாலும் இந்த விஷுவல் பேசிக் (VB) ஒரு கலங்கரை விளக்கம் போல், நன்கு வழி காட்டுகிறது.
இந்த விஷுவல் பேசிக் (VB) பொருத்தவரை, இதன் எளிய வடிவமைப்பும், உபயோகிப்பதற்கு வசதியான அதன் செயல்பாடுகளும், தேவைக்கேற்ப வடிவமைத்துக் கொள்ளும் அதன் திறனும், எந்த விதமான நிறுவனங்களுக்கும் ஏற்ற வகையில் மென்பொருள் தயாரிக்கப்பயன்படும் அதன் குணமும், சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இன்று ஒரு கருத்துக் கணிப்பு நடத்தினோமானால் விஷுவல் பேசிக் (VB) படித்தவர்களின் எண்ணிக்கையும் அல்லது விஷுவல் பேசிக் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கும் என்பதில் எந்தஐயமும் இல்லை.
விஷுவல்(Visual) என்பது என்ன?
பொதுவாக நமது கண்ணுக்கு புலப்படும் எதையுமே நாம் விஷுவல் என்று அழைப்பது வழக்கம். அதனைத் தொடர்ந்து இந்த விஷுவல் பேசிக்(VB) மொழியைக் கொண்டு, ஒரு project தயாரிக்க வேண்டுமானால், அதனை உருவாக்கும் போது, அதன் முழு வெளிப்பாட்டையும், நன்றாக தெரிந்து கொள்ளும் வகையிலே இந்த விஷுவல் பேசிக் (VB) அமைந்துள்ளது.
எந்த புரோகிராம் உருவாக்கப் போகிறோமோ, அதனை முன் கூட்டியே உணரும் வகையிலே அல்லது முன்னமே அறிந்து கொள்ளும் வகையிலே இது வடிவமைக்கப்பட்டுள்ளதால், இதனை விஷுவல் என்று அழைக்கிறோம். அடிப்படையிலே ஒரு மென்பொருள் தயாரிக்க உதவும் அனைத்து அம்சங்களும் இருப்பதால், இதனை யஐநமஅக VISUAL BASIC (VB) என்று அழைக்கிறோம். இதனைக் கொண்டு தயாரிக்கும் program-களை VISUAL Program என்று அழைக்கலாம். இந்த விஷுவல் பேசிக் (VB) தற்போது VB 6.0 என்ற பெயரில் வெளிவந்து உபயோகத்தில் உள்ளது.
விஷுவல் பேசிக் (VB) தனித்தன்மை
சாதாரணமாக நாம் புரோகிராம் எழுதும் பொழுது எந்த மொழியிலும் மேலிருந்து கீழாக, அதாவது TOP-DOWN approach முறையை பயன்படுத்தி எழுதுவது வழக்கம். எந்த ஒரு வேலையைச் செய்வதாக இருந்தாலும், புரோகிராமின் முதல் வரியிலிருந்து கட்டளையை செயல்படுத்துவது வழக்கம். ஆனால் இந்த VB வந்த பிறகு தனித்தன்மை வாய்ந்த புரோகிராம் எழுதும் முறை (independent coding) பழக்கத்தில் வந்தது.
ஏனென்றால் புரோகிராமில் உள்ள எந்த செயலுக்கும் தனித்தனியான முறையில் சிறிய, சிறிய அளவிலான புரோகிராம்கள் (Piece of Program) எழுதி அவற்றை தேவைப்படும் போது மட்டும் பயன்படுத்தி பயனடையும் விதமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பல விதமான வேலைகளை ஒன்றாக ஒருங்கிணைத்து வேலைகளைச் செய்யும் விதமாக (Integrated Environment) இது உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரே திரையில், புரோகிராம்களை வடிவமைத்தல், சிறு, சிறு மாற்றங்களை செய்து கொள்ளுதல் (EDIT) உப யோகத்திற்கேற்ப மாற்றிய மைத்தல் (Compile) மற்றும் தவறுகளை சரி செய்து கொள்ளுதல் (DEBUG) போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்ய முடியும்.
மற்றொரு தனித்தன்மையாக கருதப்படுவது இதன் Device independence என்ற கொள்கையாகும். அதாவது, சாதாரணமாக இன்று அனைவரும் பயன்படுத்தும் ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் WINDOWS ஆகும். இந்த மென் பொருளை எந்த ஒரு விதமாக கணினியிலும் உபயோகிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சில ஆப்ப ரேட்டிங் சிஸ்டம், சில கம்ப்ïட்டர்களில் பயன்படுத்த முடியாத வண்ணம் அமைக்கப்பட்டு இருக்கும்.
இதை மனதில் கொண்டு இந்த விஷுவல் பேசிக் (VB) ஆனது பொதுவான வகையில் புரோகிராம் வரிகளை கொண்டதாக அமைந்துள்ளது. எந்தவிதமான கம்ப்ïட்டர் ஹார்டுவேர்களை இயக்கும் விதமாக புரோகிராம் எழுதியிருந்தாலும், மற்ற விதமான ஹார்டுவேர்களை ஏற்றுக் கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக புரோகிராம் எழுதும் போது ஏட பிரிண்டரை இயக்கி சில வேலைகளை செய்வதாக புரோகிராம் வரிகள் எழுதப்பட்டு இருக்கும். ஆனால் EPSON போன்ற மற்ற விதமான பிரிண்டர்களை உபயோகிக்கும் போது அவற்றையும் புரிந்து கொண்டு செயல்படும் விதத்திலே அமைக்கப்பட்டுள்ளது. இதையே Device Independence என்று அழைக்கிறோம்.
மற்றதொரு முக்கியமான தனித்தன்மை (பிளாட்பார்ம்) Platform Dependence என்பதாகும். இதை ஒரு பயன் என்று கூறுவதை விட, இதை ஒரு குறையாகவே கருத வேண்டும். ஏனென்றால், கணிப்பொறி துறையில் Platform என்று சொல்வது ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்பதை பொருளாகக் கொண்டுள்ளது. இதை மனதில் கொண்டு பார்த்தோமேயானால், ஒரு புரோகிராம் கொண்டு உருவாக்கிய மென் பொருளை மற்றொரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்ïட்டரில் இயக்க முடியாது.
உதாரணமாக விண்டோஸ் (WINDOWS) என்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்ïட்டரில் உருவாக்கிய புரோகிராம்களை UNIX மற்றும் LINUX போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள கம்ப்ïட்டரில் இயக்க முடியாது. Platform Independence என்பது எந்த ஒரு கம்ப்ïட்டரில் எந்த ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருந்தாலும், அதனைக் கொண்டு உருவாக்கிய மென்பொருளை எந்த ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயக்கினாலும், அதை செயல்படுத்த முடியும். உதாரணமாக ஜாவா (JAVA) என்ற கணிப்பொறி மொழி.
ஆனால் விஷுவல் பேசிக் (VB) என்பது WINDOWS என்ற பிளார்ட்பார்ம் கொண்டு இயக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால், இதனை UNIX மற்றும் LINUX போன்ற ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் கொண்ட கம்ப்ïட்டர்களில் பயன்படுத்த முடியாது. WINDOWS உள்ள கம்ப்ïட்டரில் மட்டுமே, விஷுவல் பேசிக் (VB) உபயோகப்படுத்தப்பட்டு வருவதால், அதனை Platform Depenvence என்று அழைக்கிறோம்.
விஷுவல் பேசிக் வகைகள்
1. மேலோட்டமாக கற்றுக் கொள்வதற்கு (Learing Edition)
இந்த வகை விஷுவல் பேசிக் (VB) முறையில், எவ்வாறு விஷுவல் பேசிக் (VB)-யை கையாள்வது, எப்படி சிறிய Program-களை எழுதுவது, கட்டுப்பாடுகளை கையாள்வது போன்றவற்றையே செய்ய முடியும். இது போன்ற வெளியீடுகளை Internet மூலம் இலவசமாக பெற முடியும்.
2. முழுமையான விஷுவல் பேசிக் (Professional Edtion)
எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும், அதன் எல்லா விதமான தேவைகளையும், கம்ப்ïட்டர் கொண்டு கட்டுப்படுத்தும் போது, விஷுவல் பேசிக் (VB) முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த முறையிலான விஷுவல் பேசிக் (VB) கூடுதலாக பல கண்ட்ரோல்களைப் பெற்றுள்ளதால், அனைத்து விதமான தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
3. ஆழமாக விஷுவல் பேசிக் கற்றல் (Enterprise Edtion)
இந்த விதமான விஷுவல் பேசிக் (VB) மூலம் அனைத்து விதமான பயன்பாடுகளுடன் கூடுதலான பல சிறப்பம்சங்களை பெற்றதாக இந்த வெளியீடு அமைந்துள்ளது. கூடுதலான பல கண்ட்ரோல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக Transaction Server, Visual Source Safe மற்றும் SNA Server போன்றவை இந்த வெளியீட்டில் மட்டுமே சேர்க்கப்பட்டு உள்ளதாகும்.
இறுதியாக விஷுவல் பேசிக் (VB) மூலம் நாம் அடையும் பயன்கள் என்னவென்று காணலாம்.
விஷுவல் பேசிக் பயன்கள்
1.விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ளது போன்ற Menu மற்றும் Buttons போன்ற கட்டுப்பாடு கொண்ட வசதிகளை நாமே விஷுவல் பேசிக் (VB) மூலம் Program- ஆக எழுதி பெற முடியும்.
2. Textfile மற்றும் Database போன்றவற்றை புதிதாக உருவாக்கவும், ஏற்கனவே உள்ள தகவல்களை எளிதாக எடுக்கவும் பயன்படுத்தவும் முடியும்.
3. Windows ஆப்பரேட்டிங் கொண்டு இயக்கும் எந்தவிதமான ஹார்டு வேர்களையும் விஷுவல் பேசிக்கொண்டு கட்டு படுத்த முடியும்.
4. Bitmap பைல்களையும், Meta பைல்களையும், மற்றும் பலவிதமான படங்கள் கொண்ட பைல்களையும் எளிதாக கையாள முடியும்.
5. S & L, Dbase, MS Access போன்றவற்றின் மூலம் தகவல்களை உருவாக்கவும், பயன் படுத்தவும் எளிமையான முறையில் கையாளவும் முடியும்.
6. OLE-(object Linking Embedding)என்ற மென்பொருள் கொண்டு மற்ற கம்ïட்டர் மொழிகள் கொண்டு எழுதப் பட்ட புரோம்களையும் இதனு டன் இணைத்து செயல்படுத்த முடியும்.
7. Modem - உதவியுடன், internet வசதியுடன் உலகளா விய அளவில் VBயை மற்ற மொழிகளில் உள்ள தகவல்களை எடுத்து உபயோகிக்கும் வண்ணம் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளலாம்.
பேராசிரியர்.
சூ.ஆரோக்கியசாமி,
தலைவர், கணிப்பொறி அறிவியல் துறை,
எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி,
கோயம்புத்தூர்-641006.
நன்றி மாலைமலர்

<b> .. .. !!</b>