Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
காசிஆனந்தன் சிறப்புபேட்டி
#3
கரிகாலன் Wrote:தகவலுக்கு நன்றி பிருந்தன்.
காசியனந்தன் என்ன பிரச்சனையினால் இந்தியாவில் உள்ளார் என்ற காரணத்
தை அறியத் தரமுடியுமா ?

இதற்குப் பதில் இந்திய மத்திய அரசும்,தமிழக அரசும்தான் கூறவேண்டும் என்று நினைக்கிறேன்.

காரணம் கவிஞர் அவர்கள் தமிழகத்திலிருந்து வெளியாகும் ஆனந்த விகடன் இதழுக்கு அண்மையில் வழங்கியிருந்த நேர்காணலில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

<b>''இந்திய அரசு ஏன் உங்களை முடக்கி வைத்துள்ளது?''</b>

''அது ஏன் என்றுதான் எனக்கும் தெரியவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் என்னுடைய தாயார் சுகவீன மாகி ஈழத்தில் இறந்தபோது, ஈமக் காரியங்கள் செய்யக்கூட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. என் மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. தனிப்பட்ட முறையில் எந்தத் தவறுகளும் நான் செய்யவில்லை.

இந்தியாவும் ஈழமும் நட்புடன் இருக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றோம்.எங்களுடைய நோக்கம் ஒன்றுதான்... இந்தியா, ஈழத்தின் உறவை வலுப்படுத்துவதும், ஈழத்தில் இந்தியாவின் உதவியுடன் அமைதியைக் கொண்டுவருவதும், அமைதிப்படை ஏற்படுத்திய காயங்களைத் துடைப்பதும்தான் எங்கள் நோக்கம். நல்லெண்ணத்துடன் செயல்பட்ட என்னை மீண்டும் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துவது மிகப் பெரிய
துன்பமாக இருக்கிறது. என்னுடைய கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) முடக்கப்பட்டுள்ளது.

'ஈழம் எங்கள் தாய் நாடு... இந்தியா எங்கள் தந்தை நாடு' என்று ஆன்டன் பாலசிங்கம் சொன்னதைத்தான் நினைவுகூர்கிறேன். தந்தையின் மடியில்தான் என் உயிர் போக வேண்டும் என்றிருந்தால், அதை யாரால் மாற்ற முடியும்?


<b>நன்றி: ஆனந்தவிகடன்</b>

இதுஇவ்வாறிருக்க , நண்பர் வினவிய வினாவிற்கான மேற்படி பதில் இந்தப் பதிவினைப் பார்வையிட்டுள்ள நு}ற்றிற்கும் அதிகமான நண்பர்களுக்குத் தெரியவில்லை என்று நான் நம்பத் தயாரில்லை.

பதில் தெரிந்த நண்பர்களுக்கு அதனை இங்கே தருவதில் நேரம் ஒரு சிக்கலாக அமையலாம் என ஏற்றுக்கொள்கிறேன்.

ஆனால் ஒரு கேள்வியைக் கேட்பதில் அல்லது பதில் தேவைப்படாத -தெளிவாகச் சொல்வதானால் -தேவையற்ற பதில்களை ஒருபதிவின் கீழ் அளிப்பதில் நாம் காட்டும் அக்கறையை ஏற்கெனவே கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலைத் தேடுவதில் நாம் காட்டவில்லையோ என்ற எண்ணமே எனக்குள் மேலோங்குகின்றது.

ஆனந்தவிகடனில் வெளியான கவிஞர் அவர்களது நேர்காணலை தமிழ்நாதம்.கொம் இணையத்தளத்தினர் வெளியிட்டிருந்தார்கள். அது தற்போதும் அங்கே இருக்கிறது. அதனை இதுவரை வாசிக்காத நண்பர்கள் பின்வரும் இணைப்பின் வழியாக சென்று வாசிக்கலாம் (எச்சரிக்கை: இணைப்பு பிடிஎவ் (PDF) வடிவத்தில் உள்ளது)
http://www.tamilnaatham.com/press/kasi.pdf

<b>அன்புடன் திரு</b>
Reply


Messages In This Thread
[No subject] - by கரிகாலன் - 11-09-2005, 04:07 AM
[No subject] - by thiru - 11-12-2005, 09:37 AM
[No subject] - by Birundan - 11-12-2005, 11:12 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)