11-12-2005, 03:49 AM
SUNDHAL Wrote:ம்ம்ம்ம் அப்பிடியானால் கடைசியில் இந்த மனித உயிருக்கு என்ன நடக்கின்றது? எங்கு இறுதியில் செல்கின்றது?அப்பிடி அமதப்பற்றி ஏதாச்சும் தகவல் இருக்கா? :roll: :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
என்னைப்பொறுத்தவரைக்கும் உயிர் என்பதே இல்லை, ஒருவிதை முளைக்கிறது வளர்கிறது இறந்து(பட்டுபோகிறது)
ஒரு எறும்பு பிறக்கிறது வளர்கிறது இறந்து போகிறது, இவற்றுக்கு உயிர் இருப்பதாக நம்புகிறோமா, வாழும்காலத்தில் சிலர் நம்பலாம், ஆனால் அவை இறந்தபின்னர் இவைக்கு உயிர் போய்விட்டதாக நம்புகிறோமா? அப்படித்தன் மனிதனும் பிறக்கிறான் வளர்கிறான் இறக்கிறான், உயிர் எங்கே இருக்கிறது இதயத்திலா? மூளையிலா? கை காலிலா?கை கால் இல்லாத மனிதன் வாழ்கிறான், இதயத்திலா? செயற்கை இதயம் மாற்றியவனும் வாழ்கிறான், மூளையிலா? காலப்போக்கில் மாற்று மூளையும் வரலாம், அப்போ உயிர் எங்குதான் இருக்கிறது, மனிதன் இறந்தபின் உயிர் இருந்தால்தானே போவதுக்கு, இளையங்களும், அணுக்களும் அடங்கிய பின்னர் அவனும் அடங்குகிறான், ஒரு உடலுக்கு ஒரு உயிர்தான் என்றால், வெட்டுண்ட பல்லியின் வாலை துடிக்கவைப்பது எது? வெட்டிப்போட்ட மாட்டிறச்சியின் சதை துடிப்பது எப்படி? பாதி பாதி உயிரா? அணுக்கள் அடங்கும்வரை துடிக்கும், அதுபோல்தான் ஒரு மனிதனின் இறப்பும்.
.
.
.

