11-11-2005, 04:41 PM
தனது மாமனார் புலிகளின் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினரென்கிறார் அமைச்சர் மங்கள
தனது குடும்பத்தில் சகல மதத்தவர்களும் இருப்பதாகவும் தெரிவிப்பு
தனது குடும்பத்தில் பௌத்த,இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என சகல மதத்தவர்களும் இருப்பதாக கூறிய அமைச்சர் மங்கள சமரவீர, தனது மாமனார் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய உறவினரெனவும் தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி வேட்பாளர் பிரசார இணைப்பாளர் காரியாலயத்தினால் நேற்று வியாழக்கிழமை கொழும்பு இலங்கை மன்றக் கல்லூரியில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்தே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் மங்கள சமரவீர அங்கு மேலும் பேசுகையில்,
ஐக்கிய தேசியக் கட்சியினர் அவர்களின் தோல்வி உறுதியாகிவிட்டதால் இன்று மக்களிடம் தவறான பிரசாரங்களை செய்து இந் நாட்டில் மீண்டுமொரு இனவாத பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஐ.தே.க. மற்றும் அக் கட்சிக்கு ஆதரவான வர்த்தகர்களே இந் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். இதையிட்டு நாம் விசனமடைந்துள்ளோம். மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கமொன்றில் மீண்டுமொரு இனவாத வன்முறைக்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம்.
ஐ.தே.க. சார்பான பிரபல வர்த்தகரான லலித் கொத்தலாவல ரணிலுக்காக பத்திரிகைகளில் வெளியிடும் விளம்பரங்கள் மூலம் இன மற்றும் மத பேதங்களை உருவாக்கப் பார்க்கிறார்.இலங்கையைப் போன்று வேறெங்கும் ஒரே இடத்தில் சர்வ மத ஸ்தலங்களும் இல்லை. எம்மிடம் தான் அந்த சிறப்பம்சம் இருக்கிறது. அதையிட்டு நாம் பெருமையடைகிறோம். எம்மிடையே எப்போதும் மத பேதங்கள் இருந்ததில்லை.
உதாரணமாக, எனது குடும்பத்திற்குள்ளேயே பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் என சகல மதத்தவர்களும் இருக்கின்றனர். குறிப்பாக, எனது மாமனார் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நெருங்கிய உறவினராவார். அதாவது, அவர் எனது தந்தையின் சகோதரியின் கணவராவார். எனவே, ரணில் விக்கிரமசிங்கவும் அவரது ஆதரவாளர்களுமே இன மற்றும் மத பேதங்களை உருவாக்கப் பார்க்கின்றனர்.
பிரிவினைகள் இல்லாத நாம் அனைவரும் ஒரே மேடையில் இருக்கிறோம். தனியான ஈழ இராச்சியம் கேட்கும் பிரபாகரன் , தனி மலை நாடு கோரும் ஆறுமுகம் தொண்டமான், தனியான கிழக்குப் பிராந்தியம் கேட்கும் ரவூப் ஹக்கீம், தற்போது மத பேதங்களை உருவாக்க முயற்சிக்கும் லலித் கொத்தலாவல போன்றவர்கள் அனைவரும் ரணிலுடன் ஒரே மேடையில் இருக்கின்றனர்.
எனவே, ஒரே நாட்டில் அனைத்து இன சமூகங்களும் எந்த தலைமைத்துவத்தின் கீழ் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ முடியுமென நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என்றார்.
Thinakural

<img src='http://img35.echo.cx/img35/2821/3dtext82282uu.gif' border='0' alt='user posted image'>